Category Archives: கன்னியாகுமரி

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91-4651 – 250706, 233270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமார சுவாமி

உற்சவர்

மணவாளகுமரன்

தலவிருட்சம்

வேங்கை மரம்

தீர்த்தம்

தெப்பக்குளம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

வேள்விமலை

ஊர்

வேலிமலை, குமார கோயில்

மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் பழமையான கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.

யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி – நாகர்கோயில்

அருள்மிகு யோகீஸ்வரர் திருக்கோயில், புத்தேரி நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91 – 4652- 275 230 , 94871 01770

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் சுவாமியை வெளியிலிருந்தே தரிசிக்கலாம்.

மூலவர் யோகீஸ்வரர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் புத்தேரி, நாகர்கோயில்
மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முற்காலத்தில் இங்கிருந்த பூலாத்தி மரத்தின் அடியில், காவல் தெய்வமான சாஸ்தா, பீட வடிவில் எழுந்தருளியிருந்தார். இப்பகுதி மக்கள் இவருக்கு பூலா உடைய கண்டன் சாஸ்தாஎன்று பெயரிட்டு, சிறிய அளவில் கோயில் எழுப்பி வழிபட்டு வந்தனர். ஒருசமயம் யோகி ஒருவர் இத்தலத்திற்கு வந்தார். சாஸ்தாவை வழிபட்ட அவர், இங்கே பலகாலம் தங்கினார். இங்கேயே ஜீவசமாதியடைந்தார். சிலகாலம் கழித்து, யோகியின் ஜீவசமாதிக்கு மேலே பெரிய புற்று வளர்ந்தது. வியந்த மக்கள், புற்றையே சுவாமியாக கருதி வழிபட்டனர். பிற்காலத்தில் புற்று இருந்த இடத்தில் பெரிய சுவர் எழுப்பினர். பின்னர் சுவரை இறைவனாகக் கருதி வழிபட்டனர். இந்தச் சுவரை சிவ அம்சமாகக் கருதிய பக்தர்கள், “யோகீஸ்வரர்என்றும் பெயர் சூட்டினர். தினசரி பூஜையின்போது சாதம் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது.