Category Archives: கன்னியாகுமரி

அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி

அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்
*********************************************************************************************

கன்னியாகுமரிநெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.


தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்என்ற பெயர் வந்ததாம்.

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப் …..

……(சிலப்பதிகாரம்)

இதன் மூலம் இயக்கிஎன்னும் பெண் தெய்வம் இருந்ததத உணரமுடிகிறது. “இயக்கியே இசக்கியாக மருவியதோ?

அகராதி இசைக்கிஎன்ற சொல்லுக்கு மனதைக் கவர்பவள்என்ற பொருளைத் தருகிறது. இசக்கி அம்மனை நீலி என்னும் பேய் தெய்வமாக கருதுகின்றமை வில்லுப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித் தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.

எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர் களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது.

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி

அருள் மிகு பகவதி அம்மன் திருக்கோயில், கன்னியாகுமரி – 629702. கன்னியாகுமரி மாவட்டம்.

+91- 4652 – 246223

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – தேவிகன்னியாகுமரி, பகவதி அம்மன்

உற்சவர்: – தியாகசௌந்தரி, பால சௌந்தரி தீர்த்தம்: – பாபநாசதீர்த்தம்

பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – குமரிக்கண்டம்

ஊர்: – கன்னியாகுமரி

மாவட்டம்: – கன்னியாகுமரி

மாநிலம்: – தமிழ்நாடு

முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூககியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி முனிவருக்கும் ஆன்றோருக்கும் தொல்லை கொடுத்து வந்தான். நிலமகளாகிய தாய், உலகை இருள் மயமாக்கும் தீய திறனை ஒழிப்பதற்குத் திருமாலை வேண்டி நின்றாள்.