அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை

அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேலிமலை, நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம்.

+91-4651 – 250706, 233270 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

குமார சுவாமி

உற்சவர்

மணவாளகுமரன்

தலவிருட்சம்

வேங்கை மரம்

தீர்த்தம்

தெப்பக்குளம்

பழமை 500 வருடங்களுக்கு முன்
புராணப்பெயர்

வேள்விமலை

ஊர்

வேலிமலை, குமார கோயில்

மாவட்டம் கன்னியாகுமரி
மாநிலம் தமிழ்நாடு

முருகப்பெருமானுக்கு தமிழகத்தில் இருக்கும் 6 படை வீடுகளோடு ஏழாவது படைவீடாக இணைந்திருக்க வேண்டிய திருக்கோயில். குமரி மாவட்டத்தின் இந்த பகுதி கேரள மாநிலத்தோடு இருந்துவிட்டது. மேலும் நம்பி ராஜன் வாழ்ந்த இடமாக இது இருக்கிறது. முருகப்பெருமான் இங்குதான் வள்ளியைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. மிகவும் பழமையான கேரள எல்லையில் அமைந்துள்ள இக்கோயில் அப்பகுதியில் மிகப்பிரபலமாகக் கருதப்படுகிறது. கஞ்சி தர்மம் வாங்கி சாப்பிட்டால் சகல நோய்களும் குணமாகும்.

குறவர் படுகளம் வள்ளி தோழியரோடு தினைப்புனம் விளையாடிய இடமாக கருதப்படுகிறது. மிகவும் பழமையான இக்கோயிலில் மூலவர் தென்கிழக்கு பக்கமாக திரும்பி சுவாமியோடு வள்ளி இருக்கிறார். 10 அடி உயர சிலையாக சுவாமி பிரமாண்டமாக காட்சி தருவது சிறப்பு. சுவாமியின் காதுகள் நீண்டு காணப்படுகிறது. இதை வைத்துப் பார்க்கின்ற போது இந்த சுதை புத்தர்கால கட்டத்தை சேர்ந்தது என்றும் கூறுகிறார்கள். சுதை சாதாரண கல் வகையை சேர்ந்ததாக இல்லாமல் மிகவும் உறுதியுடன் இருப்பதாகவும் அர்ச்சகர்கள் கூறுகிறார்கள்.

திருவிழா:

வைகாசி விசாகத் திருவிழா – 10 நாள்.

ஆவணி கடைசி வெள்ளி புஷ்பாபிஷேகம் – 1 நாள்.

பங்குனி திருக்கல்யாணம் – 7 நாள்.

வேண்டுகோள்:

இத்தலத்தில் வேண்டும் அனைத்து காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு வேண்டுவன நல்கியருளும் கடவுளாக வேலிமலைக் கடவுள் திகழ்கிறார். திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, கல்வி ஞானமும், உடல்பலமும் கொடுக்கும் தெய்வமாக திகழ்கிறார்.

மனபலம், உடல் பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும் சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்குள்ள இறைவனை மலையேறி வணங்கினால் நம் உடற்பிணியெல்லாம் விட்டு விலகும் என பக்தர்கள் கூறுகிறார்கள்.

நேர்த்திக்கடன்:

மொட்டை போடுதல், எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *