Category Archives: பிரச்சனைகளும் தீர்வுகளும்
பிதுர் கடன் தீர்க்க
பிதுர் கடன் தீர்க்க
“பிதுர்களுக்குச் செய்யக்கூடிய, தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் முதலியவற்றால் பிதுர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடன் நிவர்த்தியாகும். இந்த மூன்று கடன்களும் ஆண்கள் பெண்கள் இருபாலர்களுக்கும் பொதுவானவையாக இருந்தாலும் பெண்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் (திவசம்), பிண்டம் செய்வதிலிருந்து தர்ம சாஸ்திரம் விலக்களிக்கிறது. பெண்கள் வேறு கோத்திரத்திற்கு திருமணமாகி சென்று விடுவதாலும் பெண்கள் இளமைப் பருவத்தில் தாய் தந்தையின் கட்டுப்பாட்டிலும் யௌவனப் (வாலிப) பருவத்தில், தன் கணவன் கட்டுப்பாட்டிலும், வயோதிகப் பருவத்தில் தன் மக்களின் (பிள்ளைகள்) கட்டுப்பாட்டிலும் இருந்துவர வேணுமென தர்மசாஸ்திரம் கூறுவதாலும், கணவன் அனுமதியில்லாமல் எந்தக் காரியங்களும் செய்யக்கூடாது, என்ற சாஸ்திர வாக்ய பிரகாரம், சிரார்த்தம், தர்ப்பணம், பிண்டம் செய்ய அனுமதியில்லாமல் உள்ளது. ஆனால் முக்கடன் தீர்த்தால்தான் முக்திபெற முடியும் என்ற வாக்கு ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவாக உள்ளதால், எப்படி, என்ன செய்தால், அதன் பயனை பெண்கள் அடையமுடியும் என்பதை நம் மூதாதையரான ஞானிகள் இதற்கு ஒரு வழி கண்டார்கள்.”
- நன்றி அம்மன் தரிசனம்
அதெல்லாம் சரி. பெற்றோர்கள் இறந்துவிட்டதும் அவர்களின் ஆன்மா உடனே வேறு பிறப்பெடுத்து விடுகிறது என்கின்றனர். அப்படியேயாயின் நாம் கொடுக்கும் தர்ப்பணம், சிரார்த்தம், பிண்டம் ஆகியவைகளை யாருக்குத் தருகிறோம். அவர்கள் நம்மைப் பெற்றது கடன் என ஏன் சொல்லவேண்டும். காதலின் விளைவல்லவா?
“இருபாலர்களுக்கும் பொதுவானவையாக இருந்தாலும் பெண்களுக்கு பிதுர்கடன் செய்வதிலிருந்து தர்ம சாஸ்திரம் விலக்களிக்கிறது.” அவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? நியாமான வினாக்கள்தானே!
எது எப்படியாயினும் தர்மா சாத்திரம் அறிந்தோர் சொல்வதற்காக, கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று விழிபடக் கடன் தீரும். வழிபட்டதற்குப் பலன் உண்டே!
நவபாஷாண நவக்கிரக கோயில் | தேவிபட்டிணம் | இராமநாதபுரம் |
சரநாராயணப் பெருமாள் | திருவதிகை | கடலூர் |
விஜயராகவப் பெருமாள் | திருப்புட்குழி | காஞ்சிபுரம் |
மகாதேவர் (இரட்டையப்பன்) | சேர்பு – பெருவனம் | கேரளா |
வல்வில்ராமன் | திருப்புள்ளம் பூதங்குடி | தஞ்சாவூர் |
பாஸ்கரேஸ்வரர் | பரிதியப்பர்கோவில் | தஞ்சாவூர் |
இராமலிங்கசுவாமி | பாபநாசம் | தஞ்சாவூர் |
புஷ்பவனேஸ்வரர் | மேலைத்திருப்பூந்
துருத்தி |
தஞ்சாவூர் |
சீனிவாசப்பெருமாள் | திண்டுக்கல் | திண்டுக்கல் |
வெங்கடாசலபதி | திம்மராஜபுரம் | திருநெல்வேலி |
பாபநாசநாதர் | பாபநாசம் | திருநெல்வேலி |
கற்பகநாதர் | கற்பகநாதர்குளம் | திருவாரூர் |
உய்யவந்தபெருமாள் | திருவித்துவக்கோடு | பாலக்காடு |
முக்தீஸ்வரர் | தெப்பக்குளம், மதுரை | மதுரை |
நாவாய் முகுந்தன் | திருநாவாய் | மலப்புரம் |
பாவங்கள் விலக
பாவங்கள் விலக
பாவங்கள், தற்பெருமை, சீற்றம், காம வெறி, பேராசை, பெருந்தீனி விருப்பம், பொறாமை, சோம்பல் ஆகியனவாம்.
மனதால் செய்யப்படும் பாவங்கள்:
பிறரது செல்வத்தையும் பொருளையும் விரும்புவது, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஏங்குவதும் ஆகும்.
பிற உயிர்கள் அழிந்துவிடக்கூடாதா என மனத்தால் நினைத்தல். எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல். அதாவது, ‘பிறருக்கு ஈவதால் எந்தப் புண்ணியமும் இல்லை‘; ‘இவ்வுலகத்தில் பாவங்களும் இல்லை, பரலோகமும் இல்லை‘ என்பது போன்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல்.
வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன:
தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல். இவ்வாறு சுய இலாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும்.
பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதல் பாவம்.
பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல்.
பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயமற்ற பேச்சு.
இவைகள் விலக தானே தவறை உணர்ந்து திருந்தவேண்டும். அந்த மனப்பக்குவத்தை அடைய கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை வழிபடுதல் ஒன்றே வழி.
இமையவரப்பன் | திருச்சிற்றாறு | ஆழப்புழா |
மங்களநாதர் உடனுறை மங்களேஸ்வரி | உத்தரகோசமங்கை | இராமநாதபுரம் |
ஆதிஜெகநாதப் பெருமாள் | திருப்புல்லாணி | இராமநாதபுரம் |
பகவதி அம்மன் | கன்னியாகுமரி | கன்னியாகுமரி |
பவளவண்ணபெருமாள் | திருபவளவண்ணம் | காஞ்சிபுரம் |
தழுவக் குழைந்தீஸ்வரர் (காமாட்சி அம்பாள்) | மேல் படப்பை | காஞ்சிபுரம் |
பரமபதநாதர் | பரமேஸ்வர விண்ணகரம் | காஞ்சிபுரம் |
மன்னீஸ்வரர் | அன்னூர் | கோயம்புத்தூர் |
மொக்கணீஸ்வரர் | கூழைய கவுண்டன்புதூர் | கோயம்புத்தூர் |
அரங்கநாதர் | பாலமலை | கோயம்புத்தூர் |
திருத்தளிநாதர் | திருப்புத்தூர் | சிவகங்கை |
திருவேட்டீஸ்வரர் | திருவல்லிக்கேணி | சென்னை |
மருந்தீஸ்வரர் | திருவான்மியூர் | சென்னை |
இரவீஸ்வரர் | வியாசர்பாடி | சென்னை |
கரிவரதராஜப்பெருமாள் | ஆறகழூர் | சேலம் |
சுவாமிநாத சுவாமி | சுவாமிமலை | தஞ்சாவூர் |
கோடீஸ்வரர் | திருக்கோடிக்காவல் | தஞ்சாவூர் |
சாரநாதப்பெருமாள் | திருச்சேறை | தஞ்சாவூர் |
இராமலிங்கசுவாமி | பாபநாசம் | தஞ்சாவூர் |
தயாநிதீஸ்வரர் | வடகுரங்காடுதுறை | தஞ்சாவூர் |
பிரசன்ன வெங்கடாஜலபதி | குணசீலம் | திருச்சி |
வாலீஸ்வரர் | குரங்கணில்முட்டம் | திருவண்ணாமலை |
ஒத்தாண்டேஸ்வரர் | திருமழிசை | திருவள்ளூர் |
ஜெகந்நாதப்பெருமாள் | திருமழிசை | திருவள்ளூர் |
கண்ணாயிரநாதர் | திருக்காரவாசல் | திருவாரூர் |
பூலாநந்தீஸ்வரர் | சின்னமனூர் | தேனி |
சுருளிமலை |
தேனி |
|
பூதநாராயணசுவாமி | சுருளிமலை | தேனி |
கடைமுடிநாதர் | கீழையூர் | நாகப்பட்டினம் |
கேடிலியப்பர் | கீழ்வேளூர் | நாகப்பட்டினம் |
வெள்ளடைநாதர் | திருக்குருகாவூர் | நாகப்பட்டினம் |
ஐராவதீஸ்வரர் | ஆனையூர், மதுரை | மதுரை |
இம்மையிலும் நன்மை தருவார் | மேலமாசி வீதி – மதுரை | மதுரை |
சந்திரமவுலீஸ்வரர் | திருவக்கரை | விழுப்புரம் |
சொர்ணகடேஸ்வரர் | நெய்வணை | விழுப்புரம் |