Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம்
அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோயில், கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வெங்கடாசலபதி |
உற்சவர் |
– |
|
ஸ்ரீ தேவி பூதேவி |
தாயார் |
– |
|
பத்மாவதி |
தல விருட்சம் |
– |
|
புன்னை |
தீர்த்தம் |
– |
|
தெப்பக்குளம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
பர்பகுளம் |
ஊர் |
– |
|
கிருஷ்ணாபுரம் |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
16ம் நூற்றாண்டுக் கோயில் இது. கோயிலுக்கென்று புராண வரலாறு ஏதும் இல்லை என்றாலும் மிகச் சிறந்த சிற்பக் கலைக் கூடமாக திகழ்கிறது. சிற்பி ஒருவன் பாறையை பார்க்கிறான். அப்பாறையில் இயற்கையாக செந்நிற ரேகைகள் ஓடுவதை காண்கிறான். அந்த பாறையையும் அதில் ஓடிய செந்நிற ரேகைகளையும் சுற்றி சுற்றி அவன் எண்ணம் ஒடுகிறது. அவன் எண்ணத்தில் உருவான கற்பனை எழ அதில் தன் உளி வேலையை காட்டுகிறது. பாறையைக் கண்ட சிவப்பு ரேகைகள் வீரனின் விலாவில் வடியும் இரத்தப் பெருக்காக அமைந்து விடுகின்றன. கல் உயிர் பெற்று விடுகிறது. அந்த சிலை வடிவைத் தூணாக நிறுத்தி விடுகிறான் சிற்பி. இத்தகைய சிறப்பு வாய்ந்ததுதான் கிருஷ்ணாபுரத்து கோயில் சிற்பங்கள் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தலாம். கிருஷ்ணாபுரம் சிற்பங்கள் என்றால் அவை உலக அளவில் புகழ்பெற்றது என்றே சொல்கிறார்கள். அத்தனை நுணுக்கமாகவும் அழகுணர்ச்சியோடும், கல்லும் பேசுமோ என வியக்க வைக்கும் அளவிற்கு சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. ஆண் பெண் அங்க உருவங்கள் அணிகலன்களோடு காண்போரை ஒரு நிமிடம் ஆச்சர்யத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தும்.
அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர்
அருள்மிகு நீலமணிநாத சுவாமி திருக்கோயில், கடையநல்லூர், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 99657 61050 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
நீலமணிநாதர் (கரியமாணிக்கபெருமாள்) |
தாயார் |
– |
|
மகாலட்சுமி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் |
– |
|
அர்ஜுனபுரி க்ஷேத்ரம் |
ஊர் |
– |
|
கடையநல்லூர் |
மாவட்டம் |
– |
|
திருநெல்வேலி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
குருக்ஷேத்திரப்போரில் வெற்றி பெற்ற அர்ஜுனன், வீரர்களைக் கொன்ற தோஷம் நீங்குவதற்காக பொதிகை மலைக்கு சென்று, தாமிரபரணியில் நீராடி பாவம் போக்கிவிட்டு, படைகளுடன் திரும்பிக்கொண்டிருந்தார். அவர் இத்தலம் அருகே வந்தபோது, ஒரு மருத மரத்தின் அடியில் சற்று நேரம் ஓய்வு எடுத்தார். அப்போது, மகாவிஷ்ணு அவனது கனவில் தோன்றி, “தான் மருதமரத்தின் அருகில் ஓரிடத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டி, அவ்விடத்தில் இருக்கும் தன்னை வணங்கினால், பாவம் முழுமையாக நீங்கி விமோசனம் கிடைக்கும்” என்றார். விழித் தெழுந்த அர்ஜுனன், மகாவிஷ்ணு கூறிய இடத்திற்கு சென்றபோது, பெருமாள் தாயார்களுடன் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அவரை வழிபட்ட அர்ஜுனன், அந்த சுயம்பு மூர்த்திகளை (தானாகத் தோன்றியவை) பிரதிஷ்டை பூஜை செய்து வணங்கினார். பிற்காலத்தில், இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.
கருவறையில் நீலமணிநாத சுவாமி என்ற கரியமாணிக்கப்பெருமாள் ஸ்ரீ பூமி நீளா தேவியருடன் நின்ற கோலத்தில் இருக்கிறார். திருப்பதி வெங்கடாஜலபதியைப் போன்ற கோலத்தில் இவர் காட்சி தருவது சிறப்பு. திருப்பதியில் வேண்டுதல்களை நிறைவேற்ற முடியாதவர்கள் இங்கு முடிக்காணிக்கை செலுத்தி, நேர்த்திக்கடன்களை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள். திருமண, புத்திர தோஷம் இருப்பவர்கள் சுவாமிக்கு “கறிவேப்பிலை சாதம்” திருவோண நட்சத்திர தினத்தில் “பாயாசம்” நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் தோஷங்கள் நீங்குவதாக நம்புகின்றனர். அர்ஜுனன் வழிபட்ட தலம் என்பதால் இவ்வூருக்கு, “அர்ஜுனபுரி க்ஷேத்திரம்” என்ற பெயரும் உண்டு.