Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருஅன்பில்
அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருஅன்பில்– 621 702, திருச்சி மாவட்டம்.
+91- 431 – 6590 672 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 7 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தர்ராஜப்பெருமாள் |
உற்சவர் | – | வடிவழகிய நம்பி |
தாயார் | – | அழகியவல்லி |
தல விருட்சம் | – | தாழம்பூ |
தீர்த்தம் | – | மண்டூக தீர்த்தம் |
ஆகமம் | – | பாஞ்சராத்ரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திரு அன்பில் |
ஊர் | – | அன்பில் |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒருசமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கும் நாம்தான் காரணமாக இருக்கிறோம். அந்த அழகிய உயிர்களுக்கெல்லாம் மூலாதாரமாக இருக்கும் நாம்தான் அனைவரிலும்
அழகானவர் என்ற ஆணவம் உண்டானது. மேலும், அனைவரையும் படைக்கும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது. பிரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு, அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப்பார்த்தார். பிரம்மாவோ கேட்பதாக இல்லை. எனவே, அவரை பூலோகத்தில் சாதாரண மனிதனாகப் பிறக்கும்படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு. பூலோகம் வந்த பிரம்மா ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று சுவாமியை வணங்கி, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்த அவர் சுவாமியை எண்ணித் தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன்பு வந்தார். அவரைக் கண்ட பிரம்மா,”இவ்வளவு அழகான எவரையும் இதுவரையில் நான் பார்த்ததில்லையே. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்ணு,”அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இவ்விரண்டு குணங்களையும் கொண்டிருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை” என உபதேசம் செய்து, பள்ளிகொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார். உண்மையை உணர்ந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக, விஷ்ணு இத்தலத்தில் பள்ளிகொண்ட கோலத்திலேயே எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோயில் கட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்ணு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் “அன்பில்” என்ற பெயரும் பெற்றது.
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்
அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீரங்கம்-620 006, திருச்சி மாவட்டம்.
+91 – 431 – 243 2246 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.15 மணி முதல் 1 மணி வரை, பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ரங்கநாதர் |
உற்சவர் | – | நம்பெருமாள் |
தாயார் | – | ரங்கநாயகி |
தல விருட்சம் | – | புன்னை |
தீர்த்தம் | – | சந்திர தீர்த்தம் மற்றும் 8 தீர்த்தங்கள் |
ஆகமம் | – | பாஞ்சராத்திரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | திருவரங்கம் |
ஊர் | – | ஸ்ரீரங்கம் |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாகப் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த அரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். இராவணன் சீதையை கடத்திச் சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். இராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த அரங்கநாதரை அளித்தார் இராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும், “காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம்” என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை(இலங்கை) நோக்கிப் பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.