Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில், திருக்குறுங்குடி
அருள்மிகு அழகிய நம்பிராயர்(வைஷ்ணவ நம்பி) திருக்கோயில் திருக்குறுங்குடி-627 115, திருநெல்வேலி மாவட்டம்.
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைஷ்ணவ நம்பி |
தாயார் | – | குறுங்குடிவல்லி நாச்சியார் |
தீர்த்தம் | – | திருப்பாற்கடல், பஞ்சதுறை |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | திருக்குறுங்குடி |
மாவட்டம் | – | திருநெல்வேலி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஒரு சமயம் இரண்யாட்சகன் என்ற அசுரன் பூமியை கொண்டு செல்ல முயல்கிறான். அப்போது விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்கிறார். அப்போது பூமித்தாய் இந்த பூமியிலுள்ள ஜீவராசிகள் பகவானை அடைய வழி கூறுங்கள் என வராகமூர்த்தியிடம் கேட்க, இசையால் இறைவனை அடையலாம் என்கிறார். ஒரு முறை பின்தங்கிய வகுப்பை சேர்ந்த மனிதனுக்கும், பூதம் ஒன்றிற்கும் பிரச்னை ஏற்படுகிறது. பிரச்னை முற்றி மனிதனைச் சாப்பிட பூதம் விரும்புகிறது. அதற்கு அந்த மனிதன் பூதத்திடம், இன்று ஏகாதசி. எனவே கைசிகம் என்ற விருத்தத்தில் பகவானை பாடிவிட்டு வருகிறேன். அதன்பின் நீ என்னை உண்ணலாம் என்று கூறுகிறான். ஏகாதசி தினத்தில் இத்தலத்தில் பாடியதால் அந்த மனிதனுக்கும், பாடலை கேட்டதால் பூதத்திற்கும் மோட்சம் கிடைத்தது.
அருள்மிகு உத்தமர் திருக்கோயில், பிச்சாண்டார் கோயில்
அருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோயில் – 621 216, மணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம்.
+91- 431 – 2591 466, 2591 040 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | புருஷோத்தமன் |
தாயார் | – | பூர்ணவல்லி |
அம்பாள் | சவுந்தர்ய பார்வதி | |
தல விருட்சம் | – | கதலி (வாழை)மரம் |
தீர்த்தம் | – | கதம்ப தீர்த்தம் |
ஆகமம் | – | வைகானஸம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் |
புராணப் பெயர் | – | கதம்பவனம் |
ஊர் | – | பிச்சாண்டார் கோவில், திருக்கரம்பனூர் என்னும் உத்தமர் கோவில் |
மாவட்டம் | – | திருச்சி |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரைத் தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் (மண்டை ஓடு) அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தைப் பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் “பூரணவல்லி” என்ற பெயரும் பெற்றாள். மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.