Category Archives: ஆலயங்கள்

எமபயம் நீங்க

எமபயம் நீங்க

உயிர் போகப்போகிறது என்றால் யாருக்குத்தன் பயம் வராது. “ஐயோ! பிள்ளை, குட்டி, பேரன், பேத்தி இவர்களையெல்லாம் விட்டுவிட்டு போகப்போகிறேனே! என்ன செய்வது. சொத்து பத்தெல்லாம் அப்படியே கிடக்கிறதே! அதை என்ன செய்வது? எமன் வரப்போகிறானே?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கவேண்டியதுதான். இதை விடுத்து கீழ்கண்ட ஆலயங்களில் உள்ள இறைவனை நினைத்தால் போகிற வழிக்காவது புண்ணியம் கிடைக்குமே என்கின்றனர் பக்தர்கள்.

அருள்மிகு விஸ்வநாதர் கண்ணாபட்டி திண்டுக்கல்
உமாமகேஸ்வரர் கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்
மகாகாளநாதர் திருமாகாளம் திருவாரூர்
சற்குணநாதர் இடும்பாவனம் திருவாரூர்
அப்பக்குடத்தான் கோவிலடி தஞ்சாவூர்
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

கெட்வெல் ஆஞ்சநேயர்

திருநெல்வேலி

திருநெல்வேலி

அழகு அதிகரிக்க

அழகு அதிகரிக்க

பெண்களுக்கு அழகு அதிகரிக்க

அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து வடித்து வெல்லம் சேர்த்து பருகிவர உடல் அழகும் முக அழகும் கூடும்.

இளநீர், சந்தனக்கட்டை, மஞ்சள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். சந்தனக் கல்லில் இளநீரை கொஞ்சம் விட்டு சந்தனக் கட்டையை உரச வேண்டும். பின்னர், இதனுடன் மஞ்சளையும் சேர்த்து உரச வேண்டும். இந்த மூன்றும் சேர்ந்த கலவையை முகத்தில் தினமும் பூசி வந்தால் கூடிய சீக்கிரத்தில் முகம் அழகாக மாறிவிடும். இளநீர் கிடைக்காவிட்டால் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் முகத்தில் சுருக்கம், கழுத்திற்கு கீழே இருக்கும் கறுப்பு, மங்கு முதலியவை மறைந்துவிடும். தினமும் இளநீரை அதிகமாக சாப்பிட்டு வாருங்கள்.

குங்குமப்பூவை உரசி ஒரு மேசை கரண்டியில் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வரட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்

முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள்.

இதுபோல 90,000 அழகுக் குறிப்புக்கள்.

வேண்டாமடி பெண்ணே!

இயற்கையாக கிடைத்த அழகை விட்டு விட்டு, மேலும் அழகுபடுத்துகிறேன் என்று கூறிக் கொண்டு பெண்கள் போட்டுக் கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் பெண்களின் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வர வேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட், டெட்ரா சோடியம், பாரோபிளின், கிளைசால் போன்றவை ஆபத்தானவை என்கின்றனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹோர்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம். இது போல பலப்பல. கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.

இதெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை. மாமியார் கோபிப்பார்கள்.எனக்கு வேண்டாம். அதனால் கீழ்கண்ட இறையாலயங்களுக்குச் சென்று வேண்டினாலே போதும் என்கிறார்கள் பக்தைகள்.

ஞானபுரீஸ்வரர் திருவடிசூலம் காஞ்சிபுரம்
சித்தேஸ்வரர் கஞ்சமலை சேலம்
கோடீஸ்வரர், கைலாசநாதர் கொட்டையூர் தஞ்சாவூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கண்டியூர் தஞ்சாவூர்
திருவலஞ்சுழிநாதர் திருவலஞ்சுழி தஞ்சாவூர்
வேதபுரீஸ்வரர் தேரழுந்தூர் நாகப்பட்டினம்