Category Archives: ஆலயங்கள்
மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழைய கவுண்டன்புதூர்
அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கூழைய கவுண்டன்புதூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
+91- 4296- 270 558, +91- 98652 95559
காலை காலை 10- 12 மணி வரை திறந்திருக்கும், மற்ற நேரங்களில் திறக்க வேண்டுமானால், முன் கூட்டியே அர்ச்சகரிடம் தொடர்பு கொள்ள வேண்டும்.
மூலவர் | – | மொக்கணீஸ்வரர் | |
அம்மன் | – | மீனாட்சி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | குட்டகம் | |
ஊர் | – | கூழைய கவுண்டன்புதூர் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முற்காலத்தில் இரண்டு வணிகர்கள் இத்தலம் வழியாக வியாபாரத்திற்காக வெளியூர் சென்றனர். அதில் ஒருவர் சிவபக்தர். தினமும் சிவவழிபாடு செய்யாமல் எந்தச் செயலையும் துவங்கமாட்டார். அவர்கள் இங்கு ஒருநாள் இரவில் தங்கினர். மறுநாள் காலையில் சிவபக்தர், சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், அவ்விடத்தில் இலிங்கம் எதுவும் இல்லை. அவருடன் வந்த நண்பர், சிவபக்த நண்பரின் பக்தியை கேலி செய்யும் விதத்தில், அவருக்கு தெரியாமல் குதிரைக்காக கொள்ளு வைத்திருந்த பையில் மணலை நிரப்பி, சிவலிங்கம் போல் தோற்றம் உருவாக்கி, மாலையிட்டு ஓரிடத்தில் வைத்தார். “நண்பா! இதோ சிவலிங்கம், இதை பூஜித்துக் கொள்” என்றார். அப்பாவி பக்தரும், அதை நம்பி கோணிப்பை இலிங்கத்துக்கு பூஜை செய்தார். பூஜை முடிந்ததும்,”ஏமாந்தாயா! இது இலிங்கம் இல்லை, கோணிப்பை” என்ற நண்பர், அதை எடுத்துக் காட்ட முயன்றார். ஆனால், அதை அசைக்கக்கூட முடியவில்லை. அது நிஜ இலிங்கமாக மாறியிருந்தது. இந்த அதிசயம் கண்டு நண்பரும் மனம் திருந்தினார். அவரும் சிவபக்தரானார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் (சேக்கிழார் கோயில்), தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சுந்தரேஸ்வரர் | |
உற்சவர் | – | சேக்கிழார் | |
அம்மன் | – | மீனாட்சி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தேவகோட்டை | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபக்தர்களுக்கு பெரிய புராணம் என்றால் உயிர். நாயன்மார்களின் வர லாற்றை விளக்கும் அற்புத நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் இதை இயற்றினார். அந்தப் பெருமானுக்கு கோயில் அமைக்க முயன்றார் வன்தொண்டர் என்ற புலவர். சிவவழிபாட்டின் முக்கிய நோக்கமே அடியார்களுக்கு தொண்டு செய்வதுதான். இங்கே சிவனடியாரான சேக்கிழாருக்கு, இன்னொரு தொண்டரான வன்தொண்டர் கோயிலே எழுப்ப முயற்சித்தார். ஆனால், சில சூழ்நிலைகளால் அது சிவன் கோயி லாயிற்று. மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். அங்கே, சேக்கிழாரை உற்சவமூர்த்தியாக்கினார். அதில் சேக்கிழாருக்குத் தனியாக சன்னதி எழுப்பினார். இந்த கோயிலில் ஒலிப்பதற்காக, பெரிய மணி ஒன்றை வன்தொண்டர் நிறுவினார். அதில், “சேக்கிழார் கோயில் மணி” என்று பொறிக்கப்பட்டுள்ளது.