Category Archives: ஆலயங்கள்

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட

ஏமாற்றப்பட்டவர்கள் முறையிட கிராமப் பஞ்சாயத்துக்கள் உள்ளன. காவல் நிலையங்கள் உள்ளன. அங்கே சென்றால் இன்னும் பொருள் செலவு செய்யவேண்டும். நீதி மன்றங்கள் உள்ளன. பொருள் செலவுடன் குறைந்தது 16ஆண்டுக்குப்பின்தான் தீர்ப்பு கிட்டும். அங்கும் பணம் விளையாடும். தீர்ப்பு யார் பக்கமோ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.

திக்கற்றோரும் கதியற்றோரும், வசதியற்றோரும் அந்தக் கடவுளிடம்தான் சென்று முறையிடுகிறார்கள். நம்பிக்கை உடைய பக்தர்கள் நீதி கிடைத்துள்ளதாகக் கூறுகின்றனர்.

புல்வநாயகி

பாகனேரி

சிவகங்கை

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம், பண்ணாரி

ஈரோடு

பத்திர காளியம்மன் மடப்புரம் சிவகங்கை

பிரத்யங்கிராதேவி

அய்யாவாடி

தஞ்சாவூர்

நாவலடி கருப்பசாமி மோகனூர் நாமக்கல்
மொக்கணீஸ்வரர் கூழைய கவுண்டன்புதூர் கோயம்புத்தூர்
கருப்பண்ண சுவாமி ராங்கியம், உறங்காப்புளி புதுக்கோட்டை

உத்தியோகம் பெற

உத்தியோகம் பெற

படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருந்தாலும் அதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது.

1. நீங்கள் படித்த துறையில் மட்டும் வேலை வாய்ப்பை பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் கொண்டு உங்களது எதிகாலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகளை உதறி விடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்யும். www.kalvikalanjiam.com

2. கிராமப்புறங்களில் அல்லது வேலை வாய்ப்பு குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ள நகர் பகுதிகளுக்கு வருவது சிறந்தது. நண்பர்களுடன் சேர்ந்து இடம் மற்றும் உணவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

3. வேலை சம்பந்தமான Naukri, monster, timesjobs போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்கு தெரிய வரும். Linked In என்ற இணையதளத்தில் பதிவு செய்து உங்களுடைய துறையில் வேலை வாய்ப்பிற்கு உதவும் நண்பர்கள் மற்றும் பல நிறுவனங்களின் HR ஆகியோரை நண்பர்களாக்கி கொள்ளுங்கள். Linked In இணையதளம் வேலை வாய்ப்பிற்கு உதவும் ஒரு சிறந்த இணையதளமாக உள்ளது. கல்வி வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை கொடுக்கும் கல்வி களஞ்சியம் இணையதளத்தையும் மறந்து விடாதீர்கள். www.kalvikalanjiam.com

4. வேலை வாய்ப்பை பெற்று தரும் அல்லது வேலை வாய்ப்பிற்கு உதவும் பல்வேறு Consultancy என்று சொல்லப்படும் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள். இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற Consultancy மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்த்திடுங்கள். வேலை கிடைத்ததும் பணம் தருவதாக கூறுங்கள். ஏமாற்றும் நிறுவனங்களிடம் உஷாராக இருங்கள் (ஏமாற்றும் நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இணையதளத்தில் அந்த நிறுவனத்தை பற்றிய விசயங்களை ஆராயுங்கள். consumercomplaints.in போன்ற இணையதளங்களில் பலரது கருத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்).

5. நாளிதழ்களில் வெளியாகும் வேலை வாய்ப்பு சம்பந்தமான விவரங்களை தவற விடாதீர்கள். The Hindu போன்ற நாளிதழ்களில் வேலை வாய்ப்பு செய்திகளுக்கென்றே தனியாக பக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

6. உங்கள் துறையில் பணி புரியும் உங்கள் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம். நேரம் கிடைத்தால் அவர்களை நேரில் சந்தித்து உங்களுடைய Resumeஐ கொடுத்து விடுங்கள்.

7. உங்களுடைய துறையில் அதிக பயிற்சி பெற அல்லது நீங்கள் பின்தங்கியுள்ள கம்ப்யூட்டர் பயிற்சி (Software Courses), பேச்சு திறன் பயிற்சி (Communication Training) போன்ற பயிற்சி வகுப்புகளில் சேர்வதற்கு தயங்காதீர்கள். சிறந்த வேலை வாய்ப்பிற்கு வழி செய்யும் பயிற்சி நிறுவனங்களை பலரிடம் விசாரித்து தேர்ந்தெடுங்கள். கல்விக்காக நீங்கள் செய்யும் செலவு ஒரு போதும் வீணாகாது. (கல்வி களஞ்சியம் வழிகாட்டி குழுவை தொடர்பு கொள்ளலாம்)

8. இறுதியாக, நேரத்தை வீணாக்காதீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து படத்திற்கு செல்வது, காதல் மற்றும் பல தீய செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் உங்கள் நேரம் அதிகமாக வீணடிக்கப்படுவதோடு உங்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கி விடும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றுவதால் நீங்கள் சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று உங்கள் எதிகாலம் சிறப்பாக இருக்கும் என நம்புகிறோம்.

– கல்வி களஞ்சியம் (www.kalvikalanjiam.com)

இதையெல்லாம் செய்துவிட்டு, கீழ்கண்ட ஆலயங்களிலுள்ள இறைவனிடமும் உங்கள் கோரிக்கைகளை வையுங்கள்.

முத்துக்குமரர்

பரங்கிப்பேட்டை

கடலூர்
கல்யாணபசுபதீஸ்வரர் கரூர் கரூர்
சுந்தரராஜ பெருமாள் வேம்பத்தூர் சிவகங்கை

வீர ஆஞ்சநேயர்

ஆத்தூர்

சேலம்

சுகவனேஸ்வரர் சேலம் சேலம்
தேனுபுரீஸ்வரர் திருப்பட்டீசுவரம் தஞ்சாவூர்
பத்மகிரீஸ்வரர் (காளஹஸ்தீஸ்வரர்) அபிராமி திண்டுக்கல் திண்டுக்கல்
பெரியாவுடையார் மானூர் திண்டுக்கல்
காட்டழகிய சிங்கர் ஸ்ரீரங்கம் திருச்சி
கஜேந்திரவரதர் சுவாமி அத்தாளநல்லூர் திருநெல்வேலி
நெல்லையப்பர் திருநெல்வேலி திருநெல்வேலி
பக்தவத்சல பெருமாள் திருக்கண்ண மங்கை திருவாரூர்
சவுந்தரேஸ்வர் திருப்பனையூர் திருவாரூர்
கோதண்டராமர் முடிகொண்டான் திருவாரூர்
செங்கண்மால் திருத்தெற்றியம்பலம் நாகப்பட்டினம்
சிவலோகநாதர் திருப்புன்கூர் நாகப்பட்டினம்
ஆத்மநாத சுவாமி ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை
பட்டாபிராமர் விளாச்சேரி மதுரை
ஸ்ரீநிவாசப்பெருமாள் திருவண்ணாமலை விருதுநகர்
திருவிக்கிரமசுவாமி திருக்கோவிலூர் விழுப்புரம்