Category Archives: ஆலயங்கள்
தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில், திருநெல்வேலி
அருள்மிகு தொண்டர்கள் நயினார் சுவாமி திருக்கோயில், நெல்லையப்பர் கோயில் அருகில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.
+91-462- 256 1138
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தொண்டர்கள்நயினார் | |
உற்சவர் | – | பக்தவத்சலேசர் | |
அம்மன் | – | கோமதி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | பஞ்சதீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | வேணுவனம் | |
ஊர் | – | திருநெல்வேலி | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவத்தல யாத்திரை சென்ற திருஞானசம்பந்தர் குற்றாலம் சென்றுவிட்டு, திருநெல்வேலிக்கு வந்தார். நெல்லையப்பரை வணங்கி, பதிகம் பாடினார். அப்போது அவருடன் வந்த அடியார்கள், இவ்விடத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடவேண்டுமென விரும்பினர். தம் விருப்பத்தை சம்பந்தரிடம் தெரிவித்தனர். சம்பந்தருக்கு அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென ஆசை இருந்தது. ஆனாலும், இலிங்கத்தை தனியே பிரதிஷ்டை செய்ய அவர் மனம் இடம் தரவில்லை. எனவே அகத்தியரை மானசீகமாக எண்ணி அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்படி வேண்டினார். அவர் வில்வவனமாக இருந்த இப்பகுதியில் ஓரிடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக இருப்பதாக காட்டினார். சம்பந்தரும் இங்கு வந்தார். சுயம்புலிங்கம் இருந்ததைக் கண்டார்.
பின் சம்பந்தர், அடியார்களுடன் சேர்ந்து இலிங்கத்திற்கு பூஜை செய்து வழிபட்டார். சிவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தருளினார். தொண்டர்களுக்காக எழுந்தருளியவர் என்பதால் சிவன், “தொண்டர்கள்நயினார்” என்ற பெயரும் பெற்றார்.
திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி
அருள்மிகு திருவேட்டீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.
+91-44 -2841 8383, 2851 1228
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திருவேட்டீஸ்வரர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | செண்பகாம்பிகை | |
தல விருட்சம் | – | செண்பக விருட்சம் | |
தீர்த்தம் | – | செண்பக தீர்த்தம் | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவல்லிக்கேணி–சென்னை | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான். சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான்.
சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான். வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால், இவர் “திருவேட்டீஸ்வரர்” என்று பெயர் பெற்றார்.