Category Archives: ஆலயங்கள்

அருள்மிகு கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி

அருள்மிகு கெட்வெல் ஆஞ்சநேயர் திருக்கோயில், திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம்.

+91- 462- 233 5018 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 8 மணி முதல் 11 மணி வரை மாலை 5.30 மணி முதல் இரவு8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ஆஞ்சநேயர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் திருநெல்வேலி
மாவட்டம் திருநெல்வேலி
மாநிலம் தமிழ்நாடு

சிவபெருமானின் அம்சம் ஆஞ்சநேயர் என்பார்கள். இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமராகவும், மகாலட்சுமி சீதையாகவும், ஆதிசேஷன் இலட்சுமணனாகவும் இப்படி ஒவ்வொரும் ஒரு கதாபாத்திரம் ஏற்றார்கள். அதே போல் சிவபெருமான் ஏற்ற கதாபாத்திரம் ஆஞ்சநேயர். இதன் அடிப்படையில் தான் இங்கு சிவலிங்க வடிவில் ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். இங்கு சிவனை நினைத்து வழிபட்டால் ஆஞ்சநேயர் தெரியமாட்டார். ஆஞ்சநேயரை நினைத்து வழிபட்டால் சிவன் தெரிய மாட்டார். இந்த அதிசியத்தை அபிஷேகத்தின் போது நாம் காணலாம். இவர் அபிஷேகத்தில் சிவசொரூபமாகவும், அலங்காரத்தில் விஷ்ணு சொரூபமாகவும் இருக்கிறார். இவரது வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும் ஆட்சி செய்கிறார்கள்.

கடல், மலை, நிலவு, குழந்தை, இறைவன் இவர்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. அதே போல் இங்குள்ள ஆஞ்சநேயரின் அழகை எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது. இவரை தரிசிக்க வருபவர்கள் இவரது அழகில் மயங்கி, இவரிடம் கேட்டு பெற வேண்டியதை கேட்காமல் போனாலும் கூட இவரத வலது உள்ளங்கையில் குடியிருக்கும் ஐஸ்வரிய லட்சுமி ஐஸ்வரியத்தை அள்ளிக்கொடுத்திடுவாள். முருகனுக்கு வேல் அழகு. சிவனுக்கு சூலம் அழகு. விஷ்ணுவுக்கு சக்கரம் அழகு. அதே போல் இத்தல ஆஞ்சநேயருக்கு கதை அழகு. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை தூக்கி சென்ற போது அதிலிருந்து ஒரு பகுதி விழுந்த இடம் தான் மேற்கு தொடர்ச்சி மலை. அந்த மலையைப்பார்த்தபடி மேற்கு பார்த்த ஆஞ்சநேயர். ஆஞ்சநேயருக்கு பரிவார மூர்த்திகள் எட்டு பேர். அந்த எட்டு பேர்களில் ஒருவர் எமன். அந்த எமனுக்கு அனுக்கிரகம்புரிய தென் திசையை நோக்கியபடி ஆஞ்சநேயரின் திருப்பாதம். எனவே இவரை வணங்கினால் எமபயம் என்பதே இல்லை.

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர்

அருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 94433 34624 (மாற்றங்களுக்குட்பட்டது)

மூலவர்

அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

கோயம்புத்தூர்

மாவட்டம்

கோயம்புத்தூர்

மாநிலம்

தமிழ்நாடு

இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி அஞ்சேல்என்று அபயஹஸ்தத்துடன் வரத்தை வாரி கொடுக்கிறது.

இடது கையில் கதாயுதம். மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.

மேற்கு நோக்கிய முகம். மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. இராமாயணத்தில் இலட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதிதான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையைப் பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.