Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு
அருள்மிகு வைகுண்டவாசப்பெருமாள் திருக்கோயில், கோயம்பேடு, சென்னை, சென்னை மாவட்டம்.
+91 – 44- 2479 6237, 6569 9626 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வைகுண்டவாசர் | |
உற்சவர் | – | பக்தவச்சலர் | |
தாயார் | – | கனகவல்லி | |
தல விருட்சம் | – | வில்வம், வேம்பு | |
தீர்த்தம் | – | லவகுச தீர்த்தம் | |
ஆகமம் | – | வைகானசம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | குசலவபுரி | |
ஊர் | – | கோயம்பேடு | |
மாவட்டம் | – | சென்னை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அயோத்தியில் இராமபிரான் ஆட்சிப்பொறுப்பேற்ற பின்பு, சீதையின் கற்பிற்கு களங்கம் உண்டாகும்படி சிலர் அவதூறாகப் பேசினர். சீதையின் கற்பை நிரூபிக்க இராமர் அவளை வனத்திற்கு அனுப்பினார். வனத்திலிருந்து வால்மீகி முனிவர், சீதைக்கு ஆதரவு கொடுத்து, தன்னுடன் தங்க வைத்தார். கர்ப்பவதியாக இருந்த அவள், வால்மீகி ஆசிரமத்தில் லவன், குசன் என்னும் இரண்டு மகன்களை பெற்றாள். இராமன் தங்களது தந்தை என தெரியாமலேயே, லவகுசர் வளர்ந்தனர். இச்சமயத்தில் இராமன், அயோத்தியில் அஸ்வமேத யாகம் நடத்தினார். அஸ்வமேதயாக குதிரை லவகுசர் வசித்த பகுதிக்கு வந்தது. அவர்கள் அவற்றை கட்டிப்போட்டுவிட்டனர். குதிரையுடன் வந்த சத்ருக்கனன் குதிரையை விடுவிக்கச் சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. மேலும், சத்ருக்கனனுடன் போரிட்டு வென்றதோடு, குதிரையை மீட்க வந்த இலட்சுமணரையும் வென்றனர். இதையறிந்த இராமன், வனத்திற்கு ஒரு ஒற்றனை அனுப்பி சீதையையும், வால்மீகியையும் அழைத்து வரும்படி செய்தார். அப்போது சீதாதேவி, தன் கணவரை மீண்டும் சந்திக்கப்போகும் மகிழ்ச்சியில் இங்கிருந்து கிளம்பிச்சென்றாள்.
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர் மாவட்டம்.
+91-4329- 228 890 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கலியுகவரதராஜப் பெருமாள் | |
உற்சவர் | – | கலியுகவரதராஜப் பெருமாள் | |
தாயார் | – | ஸ்ரீதேவி, பூதேவி | |
தல விருட்சம் | – | மகாலிங்கமரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கல்லங்குறிச்சி | |
மாவட்டம் | – | அரியலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அரியலூர் சிதளவாடியில் 250 ஆண்டுகளுக்கு முன் வன்னியகுலத்தில் கோபாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். இவருடைய மகன் மங்கான், மாடுகள் நிறைந்த மந்தை ஒன்றை நிர்வகித்து வந்தார். மந்தையில் கருவற்ற நிலையிலிருந்த அழகிய பசு, மேயச் சென்ற போது காணாமல் போனது. மூன்று நாட்கள் தேடியும் கிடைக்காததால் துயரமடைந்தார்.
மூன்றாம் நாள் இரவு, அவர் கனவில் “கவலைப்படாதே; காணாமல் போன பசு கன்றுடன் மேற்புறமுள்ள காட்டில் இரண்டு மைல் தொலைவில் ஆலமரத்துக்கும் மாவிலிங்க மரத்துக்கும் இடையே சங்கு இலை புதர் அருகேயுள்ளது. காலையில் அங்கே கன்றுடன் பசுவைக்காண்பாய்” என இறைவன் கூறி மறைந்தார். காலையில் மங்கான் பணியாட்களுடன் சென்று பார்த்த போது, பசு, அம்மாவெனக் கதறி அவரிடம் வந்தது. கன்றுடன் பசு நின்றிருந்த இடத்தில் சாய்ந்து கிடந்த கம்பத்தையும் கண்டார். அதன் மீது பால் சொரிந்திருந்தது. அக்கம்பத்தை மங்கானும், அவரது பணியாட்களும் தொட்டு வணங்கினர். பசு கிடைத்த ஏழாம் நாள் இரவு, மீண்டும் மங்கான், கனவில் “எண்ணாயிரம் ஆண்டு யோகம் செய்வோர் கூட காணக்கிடைக்காத பெரும் பொருளைக் கண்டு வணங்கி வந்தவனே. பொய் பொருளாம், உன்பசுவை அழைத்துச் சென்று மெய்ப்பொருளாம் என்னைக் கைவிட்டாயே. உன் முன்னோர்க்கும் எனக்கும் உள்ள தொடர்பை நீ அறியமாட்டாய். சீதளவாடியில் வாழ்ந்து திருமாலை வணங்கிய உன் முன்னோர் பெருமாள் கோயில் கட்ட எண்ணி, கற்கம்பம் கொண்டு வரும் போது வண்டி அச்சு முறிந்ததால், உச்சிமுனை உடைந்து கம்பமாய் என்னை அங்கேயே விட்டுவந்தார்கள். அதே கம்பம் தான் நீ காண்பது” என அசீரீரி ஒலித்தது. தொடர்ந்து “கவலை கொள்ளாதே, கம்பத்தை நிலைநாட்டும் உரிமை உன்னுடையது.