Category Archives: ஆலயங்கள்
அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை
அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.
காலை 6.40 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
மதனகோபாலசுவாமி |
தாயார் |
– |
|
பாமா, ருக்மணி |
தல விருட்சம் |
– |
|
வாழை |
ஆகமம் |
– |
|
வைகானசம் |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
மதுரை |
மாவட்டம் |
– |
|
மதுரை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஒரு முறை சிவன், மதுரையில் மீனாட்சியை திருமணம் செய்தபின், சுந்தரபாண்டிய மன்னனாக ஆட்சிபொறுப்பை ஏற்கும் முன் இலிங்கம் வடித்து சிவபூஜை செய்கிறார். சிவன், தான் செய்யும் பூஜையின் போது தியானத்தில் ஆழ்ந்து விடுகிறார். இதனால் சிவனின் உடலில் வெப்பம் அதிகமாகி, அக்னி ஜுவாலையாக மாறி இந்த உலகை பாதிக்கிறது. இதனால் பயந்த தேவர்கள் பிரம்மாவின் தலைமையில் விஷ்ணுவிடம் சென்று நடந்ததைக் கூறி இந்த உலகைக் காக்கும் படி வேண்டுகின்றனர். சிவனின் தியானத்தை கலைத்தால் மட்டுமே அவரது உடலில் ஏற்படும் வெப்பம் குறைந்து, உலகம் காக்கப்படும் என்பதை அறிந்தார் விஷ்ணு. உடனே தன் புல்லாங்குழலை எடுத்து இசைக்கிறார். இந்த இசை என்னும் இன்ப வெள்ளம் சிவனின் செவிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கிறது. இசைக்கு மயங்கிய சிவன் கண் விழிக்கிறார். தியானம் கலைகிறது. உலகம் காக்கப்படுகிறது. சிவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் “மகாவிஷ்ணு, தாங்கள் எப்போதும் மதன கோபாலன் என்ற திருநாமத்துடன் என் அருகிலேயே இருந்து புல்லாங்குழல் இசைத்து என்னை மகிழ்விக்க வேண்டும்” என்றார். மகாவிஷ்ணுவும் சிவனின் விருப்படியே, மதுரை மேலமாசி வீதியிலுள்ள இம்மையிலும் நன்மை தருவார் என்ற சிவாலயத்திற்கு அருகில், மதன கோபால சுவாமி என்ற கோயிலில் வீற்றிருந்து புல்லாங்குழல் இசைத்து சிவனையும் மகிழ்வித்து நம்மையும் காத்து அருள்புரிகிறார்.
ஆண்டாள் ஸ்ரீரங்கம் செல்லும் முன்பு, பெரியாழ்வாருடன் பல்லக்கில் வந்து இங்கு எழுந்தருளி மதனகோபாலரைத் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், பின் ஆண்டாள் அரங்கப் பெருமானின் திருமேனியில் ஐக்கியமானார் என்றும் வரலாறு கூறுகிறது.
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.
+91-4344-252608 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வரதராஜப்பெருமாள் |
தாயார் |
– |
|
பெருந்தேவி, மகாலட்சுமி |
பழமை |
– |
|
1000 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சூளகிரி |
மாவட்டம் |
– |
|
கிருஷ்ணகிரி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு சூளகிரி மலைப்பகுதிக்கு வருகின்றனர். பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனன் பெருமாளை வழிபடுவதற்காக அங்கிருந்த மலையில் கல்லெடுத்து கோயிலமைத்து வழிபாடு செய்கிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அர்ஜூனன் பிரதிஷ்டை செய்த இவ்விடம் தமிழகத் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. அர்ஜூனன் பிரதிஷ்டை செய்ததற்கு அடையாளமாக இன்றும் இந்த மலையில் “ஐந்து குண்டு” என்ற ஐந்து குன்றுகள் உள்ளன. மேலும் இந்த மலையைப் பார்த்தால் சூலம் போன்ற அமைப்பில் இருக்கும். இதனாலேயே இப்பகுதி சூளகிரி என அழைக்கப்படுகிறது.
ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள் ஏழு அடி உயரப் பெருமாள். இந்த ஏழுமலை வாசனுக்கு இப்படி எல்லாமே ஏழு ஏழாக அமைந்திருக்கிறது. இங்கு வரதராஜப்பெருமாள் தாயார் பெருந்தேவியுடன் அருளாட்சி செய்கிறார்.