Category Archives: திருமால் ஆலயங்கள்

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி

அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பூந்தமல்லி, சென்னை, சென்னை மாவட்டம்.

+91 44 – 2627 2066 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் வரதராஜப்பெருமாள்
தாயார் புஷ்பவல்லி
பழமை 1000 வருடங்களுக்கு முன்
ஊர் பூந்தமல்லி
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு

1009ம் ஆண்டில் இங்கு வசித்த வீரராகவர்கமலாயர் தம்பதியின் மகனாக அவதரித்தவர் திருக்கச்சி நம்பி. இவர் தினமும் காஞ்சிபுரம் சென்று, வரதராஜரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நந்தவனம் அமைத்து, அங்கு பூத்த மலர்களைத் தொடுத்து மாலையாக்கி சுவாமிக்கு அணிவித்து வந்தார். மேலும், சுவாமிக்கு ஆலவட்ட சேவையும் (விசிறுதல்) செய்வார். வயதான காலத்தில் தள்ளாடியபடியே காஞ்சிபுரம் கிளம்பினார். தன் பக்தனின் சிரமம் கண்ட வரதராஜர், பூந்தமல்லிக்கே வந்து அவருக்கு காட்சி தந்தார். அவர் காட்சி கொடுத்த இடத்தில் பிற்காலத்தில் கோயில் கட்டப்பட்டது.

வரதராஜப்பெருமாள் புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின்தலையில் சூரியனுடன் இருக்கிறார். எனவே, இது சூரியத்தலமாக கருதப்படுகிறது. ஜோதிடரீதியாக சூரியதசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளோர், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், வரதராஜருக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடுகிறார்கள்.

அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை

அருள்மிகு கல்யாண வரதராஜப்பெருமாள் திருக்கோயில், காலடிப்பேட்டை, சென்னை, சென்னை மாவட்டம்.

+91- 99401 73559

காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

கல்யாண வரதராஜர்

உற்சவர்

பவளவண்ணர்

தாயார்

பெருந்தேவி

தல விருட்சம்

மகிழம்

ஆகமம்

வைகானசம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்

பத்மபுரம்

ஊர்

காலடிப்பேட்டை

மாவட்டம்

சென்னை

மாநிலம்

தமிழ்நாடு

முற்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, கோலட்துரை என்பவர் இப்பகுதியை நிர்வகித்து வந்தார். அவரிடம் விஜயராகவாச்சாரியார் என்னும் பெருமாள் பக்தர் முக்கிய பொறுப்பில் பணியாற்றினார். தினமும் காஞ்சிபுரத்திலுள்ள பவளவண்ணப்பெருமாளைத் தரிசிப்பது இவரதுவழக்கம். பவளவண்ணரை வணங்காமல் எந்த வேலையையும் செய்ய மாட்டார். இவ்வாறு விஜயராகவர் தொடர்ந்து காஞ்சிபுரம் சென்றுவரவே, அவருக்காக கோலட்துரை இங்கு ஒரு பெருமாள் கட்டித் தந்தார். விஜயராகவர் இந்த பெருமாளை வணங்கி வந்தார். ஆனாலும், அவருக்கு மனநிறைவு ஏற்படவில்லை. மீண்டும் அவர் காஞ்சிபுரம் சென்றார். பவளவண்ணரை தரிசித்து இருப்பிடம் திரும்பினார். கோலட்துரை விசாரித்தபோது, விஜயராகவர் பவளவண்ணர் கோயிலின் உற்சவர் அழகில் மயங்கி, தினமும் காஞ்சிபுரம் செல்வதை அறிந்தார். எனவே, அத்தலத்திலுள்ள உற்சவரை இங்கு கொண்டு வந்தார். விஜயராகவர் சுவாமியை வணங்கினார். சுவாமி அவருக்கு காட்சி தந்து, “எனக்கு, திருமேனியில் எந்த வித்தியாசமும் கிடையாது. என்னை நினைக்கும் பக்தர்களின் உள்ளங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்என்றார். உண்மை உணர்ந்த விஜயராகவாச்சாரியார் தன் வாழ்நாள் முழுதும் இத்தலப் பெருமாளுக்கு சேவை செய்தார். இவ்வாறு பக்தருக்காக, பெருமாள் காட்சி தந்த தலம் இது. இங்கு சுவாமி வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.