Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், சிவகங்கை
அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் திருக்கோயில், பெருமாள் கோயில் தெரு, சிவகங்கை, சிவகங்கை மாவட்டம்.
+91- 92455 28813, 99946 74433
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7.15 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
சுந்தரராஜப் பெருமாள் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
ஆகமம் |
– |
|
பாஞ்சராத்ரம், வைகானசம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
சிவகங்கை |
மாவட்டம் |
– |
|
சிவகங்கை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
17ம் நூற்றாண்டில், சிவகங்கை ஜமீன் சுந்தரபாண்டியனால் இக்கோயில் கட்டப்பட்டது. அழகர்கோவில் மற்றும் திருக்கோஷ்டியூர் பெருமாள் மீது ஈடுபாடு கொண்ட இவர், வைணவ ஆகமங்களான பாஞ்சராத்ரம், வைகானசம் ஆகிய இரண்டு ஆகமங்களையும் ஒருங்கிணைத்து வழிபாடு செய்யும் நோக்கத்தில் இக்கோயிலை அமைத்தார். பாஞ்சராத்ர முறைப்படி சுந்தர்ராஜப் பெருமாளும், வைகானச ஆகமப்படி சவுமிய நாராயணப் பெருமாளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டனர். சுந்தரபாண்டியன் காலத்திற்குப் பிறகு, அவருடைய தாயார் மகமுநாச்சியார் இக்கோயிலின் திருப்பணிகளைச் செய்து கோயிலை முழுமையாக்கினார். இவர்கள் இருவருக்கும் மண்டபத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
கருவறை வட்ட வடிவில் கலைநயத்தோடு இங்கு அமைந்துள்ளது. கிளை விரிந்த தாமரை இதழின் மேல் ஆதிசேஷன் காட்சி தருகிறார். அதன் மேல் ஸ்ரீதேவி பூதேவி சமேதராகப் பெருமாள் கம்பீரமாக காட்சி தருகிறார். வேட்டைக்குச் செல்லும் மன்னனைப் போல, கிரீடம், கழுத்தில் ஆரங்கள், இடுப்பில் சதங்கை, குறுவாள், காலில் தண்டை ஆகியவற்றோடு காட்சி தருகிறார். வேடர் அம்சத்தோடு, சுந்தர்ராஜப் பெருமாள் இருப்பதால் உயரமான இடத்தில் இருந்து நம்மை எதிர்நோக்கும் விதமாக காட்சி தருகிறார். மற்றொரு பெருமாளான சவுமியநாராயணர் தனிசன்னதியில் வீற்றிருக்கிறார். “சவுமியம்” என்றால் “அழகு.” பெயருக்கேற்றபடி அழகு நிறைந்தவராக, தேவியர் இருவருடனும் அருள் செய்கிறார். இவரது சன்னதி முன் இராமானுஜர், நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் ஆகிய மூவரும் அமர்ந்தகோலத்தில் உள்ளனர். இம்மூவரின் திருநட்சத்திர நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி
அருள்மிகு திருவேங்கடமுடையான் திருக்கோயில், அரியக்குடி, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம்.
+91 -4565 – 231 299 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 4 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
திருவேங்கடமுடையான் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
அரியக்குடி |
மாவட்டம் |
– |
|
சிவகங்கை |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
நாட்டுக் கோட்டை நகரத்தார்களால் அமைக்கப்பட்ட புகழ்மிக்க வைணவத்தலம் இது. இப்பகுதி பிரமுகரான சேவுகன் செட்டியார், திருவேங்கடம் உடையானின் தீவிர பக்தராக இருந்தார். அவரைக் காண வரும் மக்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஆண்டு தோறும் அந்த உண்டியலை நடந்தே சென்று திருப்பதியில் செலுத்தி வந்தார். வயதான நிலையில் ஒரு நாள் தலையில் உண்டியலை சுமந்து கொண்டு திருப்பதி மலையேறி செல்லும் வழியில் அவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் முன் “எம்பெருமான்” தோன்றினார். “தள்ளாத வயதில் மலையேறி வரவேண்டாம். பக்தன் இருக்குமிடத்திற்கு நான் வருகிறேன்” எனக் கூறி மறைந்தார். ஊர் திரும்பிய அவரது கனவில் மீண்டும் தோன்றிய பெருமாள், “நாளை நீ மேற்கே செல். என் இடம் தெரியும்” என்றார். அதன்படி மறுநாள் அவர் நடந்து சென்றபோது, தற்போது கோயில் இருக்குமிடத்தில் ஒரு துளசி செடியும், தேங்காய் காளாஞ்சியும் இருந்தன. அந்த இடத்தில் கோயில் கட்ட நிலத்தை சீர்செய்தபோது, தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது. திருப்பதியை போன்று பெருமாளைத் தனியாக நிறுவ விரும்பாது, அலர்மேல் மங்கை தாயார், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகப் பிரதிஷ்டை செய்யப்பட்டது.