Category Archives: திருமால் ஆலயங்கள்
அருள்மிகு இலட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர்
அருள்மிகு இலட்சுமிநாராயணர் திருக்கோயில், வரகூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 4362 280 392, 94879 92680, 94428 52145
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.15 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | இலட்சுமிநாராயணர் | |
உற்சவர் | – | வெங்கடேசப்பெருமாள் | |
தாயார் | – | ஸ்ரீதேவி, பூதேவி | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | வரகூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த சேத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு இலட்சுமி நாராயணராக எழுந்தருளினார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீரப் பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், “நாராயணா. நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா. உன் பிணி தீரும்” என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த இலட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், “பக்தா. உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு” என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். “கிருஷ்ண லீலா தரங்கிணி” என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராகக் காட்சி தந்ததால் ஊருக்கு “வரகூர்” என்ற பெயர் ஏற்பட்டது.
மூலஸ்தானத்தில் இலட்சுமி நாராயணர், பத்ம விமானத்தின் கீழ், இடது மடியில் மகாலட்சுமியை அமர்த்தி அமர்ந்திருக்கிறார். இவருக்குத் தினமும் திருமஞ்சனம் உண்டு. ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ள உற்சவர் வெங்கடேசப்பெருமாள் பிரசித்தி பெற்றதால், இவரது பெயரால் கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் துளசி, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், சாதிக்காய், கிராம்பு உள்ளிட்ட மூலிகைகள் சேர்த்து இடித்த பொடியை பிரசாதமாகத் தருகின்றனர்.
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில்
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில், பசுபதி கோயில், அய்யம்பேட்டை, பாபநாசம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம்.
+91 97903 42581, 94436 50920
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
வரதராஜப்பெருமாள் |
தாயார் |
– |
|
பெருந்தேவி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
பசுபதிகோவில் |
மாவட்டம் |
– |
|
தஞ்சாவூர் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
இராமானுஜர், அவரது குரு பெரிய நம்பிகள், சீடர் கூரத்தாழ்வார் ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். இராமானுஜர் புகழ் பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவரை சிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு இராமானுஜரை அடையாளம் தெரியாது. எனவே, சீடர் கூரத்தாழ்வார், இராமானுஜர் போல வெண்ணிற ஆடை அணிந்து, சோழ படையினரிடம் நானே இராமானுஜர் என்று சொல்லி அவர்களுடன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும் அவரது மகள் திருத்துழாயும் சென்றனர். பெரியநம்பியிடமும், கூரத்தாழ்வாரிடமும், தனது மதமே உயர்ந்தது என எழுதித்தரும் படி மன்னன் சொன்னான். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக் குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய் அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள். இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105. தள்ளாத வயதில் கண்களை இழந்து துன்பப்பட்டார். அப்போது அவருக்கு காட்சி தந்த வரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்திலேயே மோட்சம் கொடுத்தார். இவர் வரதராஜப் பெருமாள் எனப்படுகிறார். இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கிறாள்.