Category Archives: சிவ ஆலயங்கள்

அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு

அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில், தேவம்பாடி வலசு, பொள்ளாச்சி அஞ்சல், கோயம்புத்தூர் மாவட்டம்.

+91- 4259 – 290 932, 98437 17101

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அமணீஸ்வரர்
அம்மன் பார்வதி, கங்கா
தல விருட்சம் வேம்பு
தீர்த்தம் கங்கா தீர்த்தம்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் தேவம்பாடி வலசு
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

தன் மூதாதையர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்யவேண்டும் என்பதற்காக பகீரதன் சிவனை வேண்டி, கங்காதேவியை ஆகாயத்திலிருந்து பூமிக்கு அழைத்து வந்தான். அவள் பெரும் ஆற்றலுடன் பூமியை நோக்கி வந்ததால் சிவன் அவளை தனது தலையில் தாங்கி, வேகத்தைக் குறைத்தார். பின், ஜடாமுடியை சாய்த்து பூமியில் பாயவிட்டார். தன்னைக் கட்டுப்படுத்திய சிவனின் தலையிலேயே கங்காதேவி குடி கொண்டாள். இதனால் இவளை சிவனது மனைவி என்றும் சொல்வர். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் சிவனுடன் பார்வதி, கங்காதேவி ஆகிய இருவரும் அருளுகின்றனர்.

அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி – திருமூர்த்தி மலை

அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில், தளி திருமூர்த்தி மலை, உடுமலைப்பேட்டை, கோயம்புத்தூர் மாவட்டம்.

+91-4252 – 265 440

காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாகக் கோயில் திறந்திருக்கும்.

மூலவர் பிரம்மா,திருமால்,சிவன் (மும்மூர்த்தி,திருமூர்த்தி)
உற்சவர் பிரம்மா,திருமால்,சிவன்
தல விருட்சம் அரச மரம்
தீர்த்தம் தோணி ஆறு
பழமை 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர் தளி திருமூர்த்தி மலை
மாவட்டம் கோயம்புத்தூர்
மாநிலம் தமிழ்நாடு

எல்லாம் வல்ல இறைவன் உறைகின்ற திருத்தலங்களில் இந்த திருமூர்த்தி மலை மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதாக ஐதீகம். எனவே கேட்டதெல்லாம் கிடைக்கும். அகத்திய முனிவர் இறைவனின் திருமணக்கோலத்தை பொதிய மலையில் கண்டு களித்ததை மீண்டும் ஒரு முறை காண வேண்டி அதற்கான இடத்தை இறைவன் குறிப்பால் உணர்த்திய இடமே திருமூரத்தி மலை.