Category Archives: சிவ ஆலயங்கள்

அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம்

அருள்மிகு அனந்தீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

+91 98653 44297

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் அனந்தீஸ்வரர்
உற்சவர் சோமாஸ்கந்தர்
அம்மன் சவுந்தரநாயகி
தீர்த்தம் பதஞ்சலி தீர்த்தம்
ஆகமம் சிவாகமம்
பழமை 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் தில்லைவனம்
ஊர் சிதம்பரம்
மாவட்டம் கடலூர்
மாநிலம் தமிழ்நாடு

பாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமாலைத் தாங்கிக் கொண்டிருப்பவர் ஆதிசேடன். ஒருசமயம் வழக்கத்தைவிட, சுவாமியின் எடை அதிகமாகத் தெரியவே, ஆதிசேடன் காரணம் கேட்டார். அவர், சிவனின் நாட்டியத்தை மனதில் நினைத்ததால் உண்டான ஆனந்தத்தில் எடை அதிகம் தெரிந்ததாகக் கூறினார். ஆதிசேடன், தனக்கு அந்த தரிசனம் கிடைக்க அருளும்படி வேண்டினார். அவர் பூலோகத்தில் சிதம்பரம் சென்று, வியாக்ரபாதருடன் சேர்ந்து சிவனை வழிபட அந்த தரிசனம் கிடைக்குமென்றார். அதன்படி, ஆதிசேடன் பூலோகத்தில் அத்திரி முனிவர், அனுசுயா தம்பதியரின் மகனாக அவதரித்தார். பதஞ்சலி எனப் பெயர் பெற்றார். தில்லை வனம் எனப்பட்ட இப்பகுதியில் தங்கியவர், தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிட்டை செய்து பூசித்தார். இவருக்கு பதஞ்சலியின் பெயரால், “அனந்தீஸ்வரர்என்ற பெயர் ஏற்பட்டது. பதஞ்சலிக்கு அனந்தன் என்றும் பெயருண்டு. பின், நடராஜரின் தரிசனம் கிடைக்கப்பெற்றார்.

சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை

அருள்மிகு ஆனந்தவல்லி உடனுறை சோமநாத சுவாமி திருக்கோயில், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.

+91 – 4574 268906

காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் சோமேஸ்வரர் (திருபதகேசர்)
உற்சவர் சோமநாதர்
அம்மன் ஆனந்தவல்லி
தல விருட்சம் வில்வம்
தீர்த்தம் மதுகூபம், சந்திரபுஷ்கரணி
ஆகமம் காரண ஆகமம்
பழமை 1000வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் ஸ்தூலகர்ணபுரம், சந்திரப்பட்டிணம்
ஊர் மானாமதுரை
மாவட்டம் சிவகங்கை
மாநிலம் தமிழ்நாடு

இருபத்‌தேழு நட்சத்திர தே‌வதையர்களின் கணவனான சந்திரன், ஒரு முறை தனது ஊழ்வினை காரணமாக ‌ரோகிணியின் மீது மட்டும் கூடுதலான அன்பு காட்டிப் பிற மனைவியரைப் புறக்கணித்து வந்தான். இதனால் மற்ற மனைவியர் அனைவரும் மிகுந்த துன்பமுற்று, தம் கணவன் சசோதரி ஒருத்தியிடம் மட்டும் அன்பு காட்டி வருவதை தங்களது தந்தை தட்சனிடம் முறையிட்டனர். இதனால் கடும் கோபங்‌க‌ொண்ட அவன், தனது தவ வலிமையால் சந்திரனுக்கு சயரோகம் (தொழுநோய்) பீடிக்கும் படி சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் சயரோக நோயினால் பாதிக்கப்பட்டு நாள்படப்பட அவனது கலைகள் சிறிது சிறிதாக ‌தேயத்‌தொடங்கின.