Category Archives: சிவ ஆலயங்கள்
தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை
அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில், தர்மலிங்க மலை, மதுக்கரை, கோயம்புத்தூர் மாவட்டம்.
+91 98422 22529
காலை 6 மணி முதல் 11மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | தர்மலிங்கேஸ்வரர் | |
அம்மன் | – | ||
தல விருட்சம் | – | வில்வமரம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தர்மலிங்க மலை | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்த போது இந்த மலையில் எழுந்தருளியுள்ள சுயம்புலிங்கத்தை தர்மர் வழிபட்டதாகவும், தர்மன் சிவ வழிபாடு செய்த போது, பீமன் மலையின் அடிவாரத்தில் இருந்து காத்ததாகவும் இக்கோயில் தல புராணம் கூறுகிறது. பீமன் காவல் காத்ததற்கு சான்றாக பீமனுக்கு தனி சிலை எழுப்பப்பட்டுள்ளது. இதைக் காவல் தெய்வமாக கருதி பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.
அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம்
அருள்மிகு பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி திருக்கோயில், பட்டமங்கலம், சிவகங்கை மாவட்டம். +91-4577- 262 023
காலை6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவன் | |
அம்மன் | – | நவையடிக் காளி | |
தல விருட்சம் | – | ஆலமரம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | பட்டமங்கை | |
ஊர் | – | பட்டமங்கலம் | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இறைவன் பிருங்கி, நந்தி தேவர் முதலான நால்வருக்கு சிவகதையினை கூறிக்கொண்டிருந்தார். அச்சமயம் கார்த்திகை பெண்களான நிதர்த்தனி, அபரகேந்தி, டேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய அறுவரும் இறைவன் முன் வீழ்ந்து வணங்கி எங்களுக்கும் அஷ்டமாசித்தியை உபதேசித்தருளும் என்று வேண்டினர்.
இறைவனுக்கு இதில் சற்று சஞ்சலம் தோன்றியது. அருகில் இருந்த உமையவள் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசிக்கும்படி சிவனிடம் சிபாரிசு செய்தார். உமையின் சிபாரிசை ஏற்று இறைவன் அஷ்டமாசித்தியை உபதேசிக்க துவங்கினார். ஆனால் கிடைத்த வாய்ப்பினை பெண்டிரோ சரிவர உபயோகிக்காமல் உமையவளையும் இறைவனையும் மறந்து, கவனக்குறைவாக செவிமடுத்தனர்.