Category Archives: சிவ ஆலயங்கள்
கைலாசநாதர் உடனுறை துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மன்குடி
அருள்மிகு கைலாசநாதர் உடனுறை துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், அம்மன்குடி, தஞ்சாவூர் மாவட்டம் .
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கைலாசநாதர் | |
அம்மன் | – | துர்க்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி | |
தீர்த்தம் | – | பாப விமோசன தீர்த்தம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தேவி தபோவனம் | |
ஊர் | – | அம்மன்குடி | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மகிஷாசுரனை வதம் செய்த பிறகு அம்பாளை பாவம் பற்றியது. அவள் தனது பாவத்தைத் தீர்க்க இடம் தேடி அலைந்தாள். துக்காட்சி என்ற இடத்திற்கு வந்து தனது சூலத்தில் படிந்திருந்த இரத்தக்கறையை கழுவுவதற்கு இடம் தேடினாள். துக்காட்சியின் அருகிலுள்ள ஒரு குளத்தில் தனது சூலத்தை கழுவினாள். அங்கு அவளுக்கு பாப விமோசனம் ஏற்பட்டது. தீர்த்தத்திற்கு “பாப விமோசன தீர்த்தம்” என பெயர் ஏற்பட்டது. தன் பாவம் தீர்ந்த பூமியில் குடியிருக்க துர்க்காதேவி விரும்பினாள். அங்கேயே குடியிருந்ததால் இவ்வூருக்கு அம்மன்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் சிவலிங்கம், விநாயகர் ஆகியோரை பிரதிஷ்டை செய்து அம்பாள் வழிபட்டாள்.
கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி
அருள்மிகு கடுத்துருத்தி சிவன் திருக்கோயில், கடுத்துருத்தி, கோட்டயம் Dt, கேரளா
+91- 093874 84685
காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | சிவன்(கடுத்துருத்தி) | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கடுத்துருத்தி | |
மாவட்டம் | – | கோட்டயம் | |
மாநிலம் | – | கேரளா |
முன்னொரு காலத்தில் கரண் என்ற அசுரன் மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக சிதம்பரத்தில் சிவனை நோக்கி கடும் தவம் செய்தான்.
தவத்திற்கு மகிழ்ந்த சிவன் கரணுக்கு 3 சிவலிங்கம் கொடுத்து, தென் திசையில் பிரதிஷ்டை செய்து பூஜை செய்து வர சொன்னார். வலக்கையில் ஒரு இலிங்கமும், இடக்கையில் ஒரு இலிங்கமும் எடுத்து கொண்ட அவன் மூன்றாவது இலிங்கத்தை எப்படி எடுத்து செல்வது என தெரியாமல், வாயில் கடித்து இருத்தி சென்று பிரதிஷ்டை செய்ததால் இத்தலம்“கடித்துருத்தி” எனப்பட்டது.