Category Archives: சிவ ஆலயங்கள்
மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம்
அருள்மிகு மகாதேவர் திருக்கோயில், திருவைராணிக்குளம், வெள்ளாரப்பிள்ளி, ஸ்ரீமூலநகரம் வழி, ஆலுவா தாலுகா, எர்ணாகுளம் மாவட்டம். கேரளா.
+91- 484 – 260 0182, 260 1182
காலை 4.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாதேவர் | |
அம்மன் | – | பார்வதி | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவைராணிக்குளம் | |
மாவட்டம் | – | எர்ணாகுளம் | |
மாநிலம் | – | கேரளா |
தற்போது கோயில் இருக்கும் பகுதியில் முன் காலத்தில் வெடியூர், அகவூர், வெண்மணி எனும் மூன்று நம்பூதிரி குடும்பங்கள் இருந்தன. இந்த மூன்று குடும்பங்களுக்கும் சொந்தமானது தான் திருவைராணிக்குளம் மகாதேவர் கோயில். அகவூர் மனையின் மூத்த நபருக்கு “தம்பிராக்கள்” (சிற்றரசர்) என்ற பட்டமும் உண்டு. இவர்கள் குடும்பத்தில் அகவூர் சாத்தன் என்ற ஞானி இருந்தார். இவர் கல்லால் செய்த ஓடத்தில் அகவூர் மனையில் உள்ளவர்களை உட்கார வைத்து, தினமும் ஆற்றைக்கடந்து அங்கிருந்த மகாதேவரை தரிசிக்க உதவி வந்தார்.
ஒரு முறை அகவூர் தம்பிரான் ஒருவர்,”மகாதேவா! வயதான காரணத்தினால் உன்னை வந்து தரிசிக்க மிகவும் சிரமமாக உள்ளது. இருந்தாலும் உன்னை தரிசிக்காமல் தண்ணீர் கூட அருந்துவதில்லையே” என முறையிட்டார். அன்றைய தினம் தரிசனம் முடித்துக்கொண்டு தான் கொண்டு வந்திருந்த ஓலைக்குடையை எடுக்கும் போது, குடை மிகவும் கனமாக இருப்பதாக உணர்ந்தார். இதுபற்றி தன் உதவியாளர் சாத்தனிடம் கூறிய போது, “பரவாயில்லை” என்று மட்டும் கூறினார்.
மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம்
அருள்மிகு மகாதேவர் (இரட்டையப்பன்) கோயில், பெருவனம், திருச்சூர், கேரளா.
+91- 487 – 234 8109
காலை 5 மணி முதல்10.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்
மூலவர் | – | மகாதேவர், இரட்டையப்பன் | |
அம்மன் | – | பார்வதி | |
தல விருட்சம் | – | ஆல மரம் | |
தீர்த்தம் | – | தொடுகுளம் | |
பழமை | – | 2000-3000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பெருவனம் | |
மாவட்டம் | – | திருச்சூர் | |
மாநிலம் | – | கேரளா |
பூரு மகரிஷி வனமாக இருந்த இப்பகுதியில் சிவனை நோக்கிக் கடும் தவம் இருந்தார். இவரது தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் பார்வதியுடன் அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி தந்து, இலிங்கம் ஒன்றை கொடுத்தார். அந்த இலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்குரிய தீர்த்தத்தை தனது கையாலேயே உருவாக்கினார் மகரிஷி. விரல்களால் மூன்று கோடு போட்டு ஒரு குளத்தை உருவாக்கினார். எனவே அது “தொடுகுளம்” எனப்பட்டது. இந்த குளத்தில் நீர் வற்றும் போது மகரிஷி போட்ட மூன்று கோடுகளை இப்போதும் காணலாம். ஒருமுறை மகரிஷி குளிக்க செல்லும் போது சிவலிங்கத்தை அருகிலிருந்த ஒரு ஆலமரத்தின் மேல் வைத்து சென்றார். திரும்ப வந்து இலிங்கத்தை எடுத்தபோது இலிங்கம் வரவில்லை. எனவே 24 படிகள் அமைத்து அதன் மீது ஏறி இலிங்கத்தை பூஜித்து வந்தார். இதைக் குறிக்கும் வகையில் இக்கோயிலில் 24படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படிகளில் ஏறிச்சென்றே மூலவரை தரிசிக்க முடியும். பூரு மகரிஷி தவம் செய்ததால் இத்தலம் “பூரு வனம்” என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் “பெருவனம்” ஆனது.