Category Archives: சிவ ஆலயங்கள்
பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம்
அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634 – 223 268
காலை 6.30 மணி முதல் 1 மணி வரை, மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பாபநாசநாதர் | |
அம்மன் | – | உலகம்மை | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | இந்திரகீழ க்ஷேத்திரம் | |
ஊர் | – | பாபநாசம் | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடந்த போது வடக்கே தாழ்ந்து, தெற்கே உயர்ந்தது. பூமியை சமப்படுத்துவதற்காக, அகத்தியரைப் பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். சித்திரை மாதப்பிறப்பன்று அவருக்கு தனது திருமணக் கோலத்தை காட்டியருளினார். கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில் கல்யாண சுந்தரராக அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் சிவன் இருக்கிறார். அருகிலேயே அகத்தியரும் அவர் மனைவி, லோபாமுத்திரையும் வணங்கிய கோலத்தில் உள்ளனர்.
அசுர குருவான சுக்ராச்சாரியாரின் மகன் துவஷ்டா என்பவனை, குருவாக ஏற்றான் இந்திரன். ஒருசமயம் துவஷ்டா அசுரர்களின் நலனுக்காக யாகம் ஒன்றை நடத்தினார். இதனை அறிந்த இந்திரன் அவரைக் கொன்று விட்டான். இதனால் அவனை பிரம்மகத்தி தோஷம் பிடித்தது. பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு விமோசனம் தேடினான். வியாழ பகவான் இந்திரனிடம், இத்தலத்தில் உள்ள சுவாமியை வணங்கினால் தோஷம் நீங்கும் என்றார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைக்கு வந்தபோதே பாவம் நீங்கப்பெற்றான். இந்திரனின் பாவத்தை நீக்கிய சிவன் என்பதால் இவரை “பாபநாசநாதர்” என்கின்றனர். இத்தலத்திற்கு “இந்திரகீழ க்ஷேத்திரம்” என்ற பெயரும் இருக்கிறது.
பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், ஆனந்த தாண்டவபுரம்
அருள்மிகு பஞ்சவடீஸ்வரர் திருக்கோயில், ஆனந்த தாண்டவபுரம், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பஞ்சவடீஸ்வரர் | |
அம்மன் | – | பிரஹன்நாயகி, கல்யாணசுந்தரி | |
தல விருட்சம் | – | பவளமல்லி | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஆனந்ததாண்டவபுரம் | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மானக்கஞ்சாறர் என்னும் வேளாளர் படைக்குத் தலைமை வகித்து நடத்தியவர்; அன்பிலும் சிவபக்தியிலும் கட்டுண்டு கிடந்தார். தன் மனைவியுடன் சிவனடியார்களுக்குச் சேவை செய்வதே கடமை என்று வாழ்ந்த மானக்கஞ்சாறருக்கு, தனக்கொரு வாரிசு இல்லையே என்று ஒரே ஒரு குறை. நாள்தோறும் தவறாமல் சிவவழிபாடு செய்யும் கல்யாணசுந்தரியும் கஞ்சாறரரும், வாரிசு வரம் கேட்டுப் பிரார்த்தித்து வந்தனர். இவர்களது வேண்டுதல் நிறைவேறும் காலமும் வந்தது. கஞ்சாறரின் மனைவி கருவுற்றாள்; உரிய காலத்தில் அழகிய பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள். “நாங்கள் எந்த ஜென்மத்தில் செய்த புண்ணியமோ; எங்களுக்குக் குழந்தைச் செல்வத்தைத் தந்துவிட்டாய்! இறைவா!” என மகிழ்ந்தவர்கள், மகளுக்கு புண்ணியவர்த்தினி எனும் பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். காலங்கள் ஓடின. கருகருவென நீண்ட கூந்தலுடன், அழகு ததும்பக் காட்சி அளித்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நாளும் வந்தது. சிவபக்தியில் திளைக்கும் கலிக்காமன் என்னும் இளைஞனைத் தன் மகளுக்கு மணம் முடிக்க ஏற்பாடுகள் செய்தார் கஞ்சாறர். இதையறிந்த ஊர்மக்கள், “மாமனாரும் சிவபக்தர்; மருமகப் பிள்ளையும் சிவபக்தர்” எனக் கொண்டாடினர். வெகுவிமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடக்க, முகூர்த்த நாளும் நெருங்கியது. அடியவர் வீட்டுத் திருமண வைபவத்துக்கு, ஆண்டவன் வராமல் இருப்பானா? திருமணத்துக்கு முதல் நாள். காவி உடையும், கழுத்தில் உருத்திராட்ச மாலைகளும் அணிந்து, மேனி முழுவதும் திருநீறு தரித்தபடி சிவனடியார் ஒருவர் வந்தார். அவர் மாவிரதியர். அதாவது சிரசின் முடியை ஐந்து பிரிகளாக்கி பூணூலாக அணிந்துகொள்ளும் வழக்கம் உள்ளவர்.