Category Archives: சிவ ஆலயங்கள்
வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், மயிலாடுதுறை
அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில்,(வள்ளலார் கோயில்), மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டம்.
+91- 4364 – 228 846, 242 996
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வதாரண்யேஸ்வரர் (வள்ளலார்) | |
அம்மன் | – | ஞானாம்பிகை | |
தீர்த்தம் | – | காவிரி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | மயிலாடுதுறை | |
மாவட்டம் | – | நாகப்பட்டினம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முன்னொரு காலத்தில் நந்தி, சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். இதைக் காண பிரம்மா அன்ன வாகனத்திலும், பெருமாள் கருடன் மீதும், மற்ற தேவர்கள் குதிரைகளிலும் வந்தனர். ஆனால், நந்தி, சிவனின் அருளால், மற்ற வாகனங்களை விட வேகமாக சிவனைச் சுமந்தபடி வந்தது. இதையடுத்து, நந்திக்கு, நம்மால் தான் உலகையே ஆளும் சிவபெருமான் கூட, விரைவாக செல்ல முடிகிறது என்ற கர்வம் ஏற்பட்டது. இதையறிந்த சிவன்,”நந்தி! என்னால் தான் நீ பெருமையடைகிறாய் என்பதை மறக்காதே” என்று கூறி தன் சடைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகில் வைத்தார். அதன் பலம் தாங்காத நந்தி, மயக்கமடைந்து விழுந்தது. இதைப்பார்த்த சிவன் கருணை உள்ளத்துடன், “நந்தி. என்னை குறித்து உன்னிடம் கர்வம் ஏற்பட்டு விட்டது. இந்த பாவத்தை நீக்க, பூலோகத்தில் காவிரிக்கரையில் நீயும் தவம் செய். நான் குரு வடிவாய் (தெட்சிணாமூர்த்தி) காட்சியளிப்பேன்.
வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி
அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்.
+91- 4634-283 058
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | வன்னியப்பர் | |
அம்மன் | – | சிவகாமிசுந்தரி | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | ஆழ்வார்குறிச்சி | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இவ்வுலகத்தில் ஆக்கல், அழித்தல் ஆகிய இரு தொழில்களையும் அக்னியே செய்கிறது. யாகங்களிலும், நைவேத்தியம் தயாரிக்கவும், சமையலுக்கும் பயன்படும் அக்னி, மனிதன் இறந்து போனால் அவனது உடலை எரிக்கவும் பயன்படுகிறது. அவனது ஆத்மாவை இறைவனிடம் கொண்டு சேர்க்கிறது. ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை ஒளியிழந்து போகுமாறு அந்த ரிஷிகள் சபித்தனர். தனது கடமையை சரிவரச் செய்யாமல், சாபத்திற்கு ஆளான அக்னி பகவான், மீண்டும் தனது பழைய நிலையை பெற சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். பூலோகத்தில், ஒரு நதியின் கரையில் அவர் இந்த பூஜையை செய்து வந்தார். சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து மீண்டும் ஒளி தந்தார்.