Category Archives: சக்தி ஆலயங்கள்

அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி

அருள்மிகு முப்பந்தல் இசக்கியம்மன், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி மாவட்டம்
*********************************************************************************************

கன்னியாகுமரிநெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.


தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் தங்களுக்கு இடையேயான பிரச்னைகளை, ஒளவைப் பிராட்டியின் தலைமையில் பேசித் தீர்த்த இடம் இது. மூவேந்தர்களும் கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்என்ற பெயர் வந்ததாம்.

அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய
புறஞ்சிறை மூதூர் பூங்கண் இயக்கிக்குப் …..

……(சிலப்பதிகாரம்)

இதன் மூலம் இயக்கிஎன்னும் பெண் தெய்வம் இருந்ததத உணரமுடிகிறது. “இயக்கியே இசக்கியாக மருவியதோ?

அகராதி இசைக்கிஎன்ற சொல்லுக்கு மனதைக் கவர்பவள்என்ற பொருளைத் தருகிறது. இசக்கி அம்மனை நீலி என்னும் பேய் தெய்வமாக கருதுகின்றமை வில்லுப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

முப்பந்தலை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித் தாள். இவளின் மகள் இசக்கி. இவளை, பழவூரில் வளையல் வியாபாரம் செய்து வந்த செட்டியார் ஒருவரின் மகன் விரும்பினான். இசக்கியை விரும்பினான் என்பதை விட, அவளுக்காக அவளின் தாய் சேர்த்து வைத்திருந்த சொத்துகளை விரும்பினான் என்றே சொல்ல வேண்டும். இதையறியாத இசக்கி, செட்டியாரின் மகனை மனதார நேசித்தாள். இவர்களின் காதலைச் செட்டியார் ஏற்கவில்லை.

எனினும், மகளின் ஆசைக்குக் குறுக்கே நிற்க விரும்பாத இசக்கியின் தாய், பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்து செட்டியாரின் மகனுக்கு அவளைக் கல்யாணம் செய்து வைத்தாள். இசக்கியின் ஊரிலேயே அவர் களது தனிக்குடித்தனம் ஆரம்பித்தது.

அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர்

அருள்மிகு முண்டக கண்ணியம்மன் கோயில், மயிலாப்பூர், சென்னை– 600 004.
****************************************************************************************

+91- 44 – 2498 1893, 2498 6583 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்: – முண்டக கண்ணியம்மன்

தல விருட்சம்: – ஆலமரம்

பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்

புராணப் பெயர்: – மயிலாபுரி

ஊர்: – மயிலாப்பூர்

மாவட்டம்: – சென்னை

மாநிலம்: – தமிழ்நாடு

முற்காலத்தில் இத்தலத்தில் தாமரைக் குளம் ஒன்று இருந்தது. அதன் கரையிலிருந்த ஆலமரத்தின் அடியில் அம்பாள், சுயம்பு உருவாக எழுந்தருளினாள். பக்தர்கள் ஆரம்பத்தில் அம்பாளுக்கு ஓலைக்குடிசை வேய்ந்து சிறிய சன்னதி அமைத்தனர்.

பிற்காலத்தில் கோயில் விரிவாக கட்டப்பட்டது. ஆனாலும் அம்பிகையின் உத்தரவு கிடைக்காததால் கருவறை மட்டும், தற்போதும் குடிசையிலேயே இருக்கிறது.

அம்பாள், எளிமையை உணர்த்துவதற்காக ஓலைக்குடிசையின் கீழிருந்து அருளுவதாக சொல்கிறார்கள். இத்தலத்து அம்பிகையின் சுயம்பு வடிவம் தாமரை மொட்டு போன்ற வடிவில் காட்சியளிக்கிறது. எனவே இவள், “முண்டக கண்ணியம்மன்என்று அழைக்கப்படுகிறாள்.

முண்டகம் என்றால் தாமரைஎன்று பொருள். சுயம்புவின் மத்தியில் அம்பிகையின் பிரதான ஆயுதமான சூலம் இருப்பது சிறப்பு.