Category Archives: சக்தி ஆலயங்கள்
அருள்மிகு மூங்கிலணைக் காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி
அருள்மிகு மூங்கிலணைக் காமாட்சி அம்மன் திருக்கோயில், தேவதானப்பட்டி – 625602. தேனி மாவட்டம்.
+91-4556- 235 511 (மாற்றங்களுக்குட்பட்டது)
தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை கோயில் திறந்திருக்கும்.
மூலவர்: – மூங்கிலணைக் காமாட்சி
தல விருட்சம்: – மூங்கில் மரம்
பழமை: – 500-1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – தெய்வனாம்பதி
ஊர்: – தேவதானப்பட்டி
மாநிலம்: – தமிழ்நாடு
மூங்கிலணைக் காமாட்சியைப் போற்றி வையாபுரி புலவர் “காமாட்சிபதிகம்” என்னும் நூல் இயற்றியுள்ளார்.
இப்பகுதியில் கொடுங்கோலாட்சி புரிந்த வச்சிரதத்தன் என்னும் அசுரனை கொல்வதற்கு துர்க்கையம்மனாக வந்து வதம் செய்த காஞ்சிகாமாட்சியம்மன், அசுரனைக் கொன்ற பாவம் நீங்க மஞ்சள் நீராடினாள். பின்பு தலையாறு நீர்வீழ்ச்சிக்கருகே மூங்கில் புதருக்குள் தவம் இருந்தாள். எதேச்சையாக இதை பார்த்துவிட்ட பசு மேய்க்கும் ஒருவருக்கு கண் பார்வை பறிபோனதையறிந்த அவ்வூர் நிலக்கிழார் பூசை செய்து வழிபட்டார். அம்மன் அசரீரியாக, ஒரு வாரம் கழித்து ஆற்றில் வரும் வெள்ளத்தில் மூங்கில் பெட்டியில் அமர்ந்து வரும் என்னை எடுத்து வழிபட்டால் கண்பார்வை தெரியும் என்று கூற, அதுபடியே பெட்டி வந்தது. அதை எடுத்து வழிபட்டு அந்த இடத்தில் சின்னக் குச்சு ஒன்று கட்டி வழிபட்டனர். மூங்கில் பெட்டியில் மஞ்சளாற்றில் மிதந்து வந்து மூங்கில் புதர்களில் அணைந்து நின்றதால் மூங்கிலணைக் காமாட்சி அம்மன் என வழங்கலாயிற்று.
அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம்
அருள்மிகு மூங்கிலடி அன்னகாமு திருக்கோயில், ஒட்டன்சத்திரம் – 624 619, திண்டுக்கல் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – ஒட்டன்சத்திரம்
மாநிலம்: – தமிழ்நாடு
பழங்காலத்தில் மூங்கில் மரத்தடியில் அரளிச் செடிகளுக்கு நடுவில் சிறிய அளவில் காமாட்சியம்மன் அருள் பாலித்துள்ளார். அதனால் “மூங்கிலடி அன்னகாமு” என்று அழைக்கப்பட்டாள். இதற்கான ஆதாரம் கோயில் கல்வெட்டுக்களில் இன்றும் உள்ளது.
1942-ம் ஆண்டு தும்மிச்சம்பட்டியை சேர்ந்த பெரியாக்கவுண்டர் என்பவரின் சொந்த பராமரிப்பில் இக்கோயில் இருந்துள்ளது. அவர் காமாட்சியம்மனுக்கு காவல் தெய்வமான கருப்பணசாமி சிலையை உருவாக்கி நிறுவியுள்ளார்.