Category Archives: கணபதி ஆலயங்கள்

கணபதி ஆலயங்கள் – பட்டியல்

கணபதி ஆலயங்கள்

வெயிலுகந்த விநாயகர் உப்பூர் இராமநாதபுரம்

விநாயகர்

கேரளபுரம்

கன்னியாகுமரி

சித்தி விநாயகர் பாகலூர் கிருஷ்ணகிரி
மள்ளியூர் மகா கணபதி கோட்டயம் கோட்டயம்
காரணவிநாயகர் மத்தம்பாளையம் கோயம்புத்தூர்
விநாயகர் ஈச்சனாரி கோயம்புத்தூர்
பிரசன்ன விநாயகர் உடுமலைப்பேட்டை கோயம்புத்தூர்
வரசித்தி விநாயகர் காணிப்பாக்கம் சித்தூர்
விநாயகர் பிள்ளையார்பட்டி சிவகங்கை
தணிகை வேம்படி சக்தி விநாயகர் பழவந்தாங்கல் சென்னை
தலையாட்டி விநாயகர் ஆத்தூர் சேலம்
வாகனப் பிள்ளையார் ஆத்தூர் சேலம்
ராஜகணபதி சேலம் சேலம்
வல்லப அம்பிகா சமேத சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) கீழவாசல் தஞ்சாவூர்
பஞ்சமுக விநாயகர் பிட்சாண்டார்கோயில் திருச்சி
உச்சிப்பிள்ளையார் மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி
மிளகு பிள்ளையார் சேரன்மகாதேவி திருநெல்வேலி
உச்சிஷ்ட கணபதி(பெரிய கணபதி) புது பைபாஸ் ரோடு திருநெல்வேலி
காரிய சித்தி கணபதி நத்தம், பஞ்செட்டி திருவள்ளூர்
ஆயிரத்தெண் விநாயகர் ஆறுமுகமங்கலம் தூத்துக்குடி
ஆதிகும்பேஸ்வரர் செண்பகபுரம் நாகப்பட்டினம்
மணக்குள விநாயகர் புதுச்சேரி புதுச்சேரி
மொட்டை விநாயகர் கீழமாசி வீதி மதுரை
நெற்குத்தி விநாயகர் தீவனூர் விழுப்புரம்
செல்வ விநாயகர் சேண்பாக்கம் வேலூர்

செண்பகவனத்து செல்வ கணபதி

யாரும் எக்காரியத்தையும் ஆனைமுகத்தோனைத் தொழாது செய்யத் துடங்குவதில்லை. அவர் ஓங்கரத் தத்துவத்தின் மூலாதாரம். எளிமையானர்; விண்ணோர்கள் முதலாய் அனைவராலும் வணங்கப் படுபவர்.வேலூரிலிருந்து பெங்களூர் சாலையில் 3 கல் தொலைவில் உள்ள சேண்பாக்கம் தான் செண்பக வனம்.

பண்டைய காலத்தே செண்பக வனமாய் இருந்த இவ்விடம், தற்பொழுது சேண்பாக்கமாக மருவி இருக்கலாம். சுயம்புவாகக் கணபதி உள்ள இடம் என்பதால் “ஸ்வயம்பாக்கம்” என ஆதி சங்கரர் பெயரிட்டார்; அது பின்னர் சேண்பாக்கமாக மருவியிருக்கலாம் என்பது மறு சாரார் கருதுகோள்.

இங்கும் சுயம்பு இலிங்கமாகக் கணபதி அமர்ந்து அருள் மழை பொழிகிறார். இங்குள்ள மற்ற 10 கணபதிகளும் சுயம்பு இலிங்கங்களாகவே காட்சியளிக்கின்றனர். அதில் ஒருவர் தரை மட்டத்தில் உள்ளார். அது மண் தத்துவத்தை நினைவூட்டுவதாயுள்ளது. இப்பதினொரு சுயம்பு இலிங்கங்களும் “ஓம்” என்னும் அமைப்பில் உள்ளதுதான் விதப்பு(சிறப்பு). தல விருட்சம் வன்னி மரம்.