Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால்

அருள்மிகு காரைக்காலம்மையார் திருக்கோயில், காரைக்கால், புதுச்சேரி.

+91- 4368 – 222 717 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் காரைக்காலம்மையார்
அம்மன் காரைக்காலம்மையார்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் காரைக்கால்
மாவட்டம் புதுச்சேரி
மாநிலம் புதுச்சேரி

முன்னொரு காலத்தில் காரைவனம் எனப்பட்ட இப்பகுதியில் வசித்த தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு புனிதவதி என்ற மகள் பிறந்தாள். சிவன் மீது பக்தி கொண்டிருந்த அவளை, பரமதத்தன் என்ற வணிகனுக்கு மணமுடித்து கொடுத்தனர். திருமணமான பின்னரும் அவள் சிவசேவையில் நாட்டம் கொண்டிருந்தாள். ஒருசமயம் ஒரு சிவபக்தர் மூலமாக, இரண்டு மாங்கனிகளை பரமதத்தனிடம் கிடைக்கும்படி செய்தார் சிவன். கனிகளை பெற்ற பரமதத்தன், அதனை வீட்டிற்கு கொடுத்து விட்டான். சிவன், அவனது வீட்டிற்கு அடியார் வேடத்தில் சென்றார். கணவன் இல்லாத வேளையில் வந்த அவரை வரவேற்ற புனிதவதி அன்னத்துடன் ஒரு மாங்கனியையும் படைத்தாள். சாப்பிட்ட அடியார் அங்கிருந்து சென்று விட்டார். வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு அன்னம் பரிமாறிய புனிதவதி, ஒரு மாங்கனியை வைத்தாள். அதன் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டான் பரமதத்தன். கணவன் பேச்சை அப்படியே கேட்ட புனிதவதி செய்வதறியாது திகைத்தாள். சமையலறைக்குள் சென்று, தனக்கு ஒரு கனி கிடைக்க சிவனிடம் வேண்டினாள். அவள் கையில் ஒரு மாம்பழம் வந்து அமர்ந்தது. அதனை கணவனுக்கு படைத்தாள் புனிதவதி. முதலில் வைத்த மாங்கனியைவிட அதிக சுவையுடன் இருந்ததால் சந்தேகமடைந்த பரமதத்தன், காரணம் கேட்டான். புனிதவதி நடந்ததை கூறினாள். பரமதத்தன் நம்பவில்லை. சிவன் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படி கூறினான். புனிதவதியும் சிவனை வணங்கவே, கனி கைக்கு வந்தது. தன் மனைவி தெய்வப்பிறவி என நினைத்த பரமதத்தன், அவளை விட்டுப் பிரிந்தான். வேறு ஊருக்கு சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்துக் கொண்டான். அவளுக்கு பிறந்த குழந்தைக்கு புனிதவதிஎன்று பெயர் வைத்தான். புனிதவதி இதையறிந்து கணவனை அழைக்கச் சென்றாள். அவன் அவளை தெய்வமாகக் கருதிக் காலில் விழுந்தான். புனிதவதியார் தன் கணவனுக்கான உடல் தனக்கு வேண்டாம் என்று சிவனை வேண்டி, சதையை உதிர்த்து, எலும்பாகி முதிய வடிவம் பெற்றார். அப்போது கைலாயம் செல்கஎன அசரீரி உரைத்தது. கைலாயம் புனிதமான இடம் என்பதால், கால் ஊன்றாமல், தரையில் தலையை ஊன்றி தலைகீழாக கைலாயம் சென்றார் அந்த அம்மை. சிவன் அவரை எதிர்கொண்டு தாயே சுகமாக வந்தனையா?” என்றார். தன் நடனத்தை காட்டியருளினார். புனிதவதியாருக்கு அவர் பிறந்த ஊரில், கோயில் கட்டப்பட்டது.

அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி

அருள்மிகு ஜோதி மவுனகுரு நிர்வாணசுவாமிகள் ஆலயம், கசவனம்பட்டி, திண்டுக்கல் மாவட்டம்.

+91-451 2555 455, 97876 18855, 94865 02714

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மவுனகுருசாமி
உற்சவர் மவுனகுருசாமி
பழமை 100 வருடங்களுக்கு முன்
ஊர் கசவனம்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

சில ஆண்டுகளுக்குமுன், 12 வயது சிறுவன் ஒருவன் இப்பகுதிக்கு வந்தான். ஆடை ஏதும் அணியாமல், நிர்வாணமாகவே இப்பகுதிகளில் சுற்றித் திரிந்தான். முதலில் சிறுவன்தானே, என கருதிய மக்கள் அவனைக் கண்டுகொள்ளவில்லை. நாளடைவில் அவன், ஆடையே அணியாமல் எப்போதும் நிர்வாணமாகவே ஊருக்குள் வந்தான். இதைக்கண்ட சிலர், அவனுக்கு ஆடைகளை அணிவித்துப் பார்த்தனர். ஆனால், அவன் அதை கிழித்து எறிந்து விட்டான். இந்த உலகம் மாயை என்னும் போலியான ஆசைகளால் நிறைந்தது. இதில், அனுபவிக்க ஏதுமில்லை. இதைப் புரிந்து கொண்டாலே ஞானம் கிடைத்து விடும். இதை, தனது உருவத்திலேயே உணர்த்தியதால், போகப்போக மக்கள் மரியாதை கொடுத்து நடத்தினர். அவரது பெயர் தெரியாமல் முதலில் பெருமாள் சாமி என அழைத்தனர். எப்போதும் நிர்வாணமாகவே இருந்ததால், ஒருகட்டத்தில் நிர்வாணசுவாமி என்றே அழைத்தனர். அவர் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்ததால் பிற்காலத்தில் இவர் மவுனகுரு நிர்வாணசுவாமிகள்என அழைக்கப்பெற்றார். தன்னிடம் உபதேசம் பெற வந்தவர்களிடம்கூட, அவர் அதிகம் பேசியதில்லை. இங்கேயே முக்தியடைந்த இவருக்கு, சமாதிப்படுத்திய இடத்தில் ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

ஐப்பசி மாதம் ஐந்தாம் நாள், மூலம் நட்சத்திரத்தில், வெள்ளிக்கிழமையன்று (22.10.1982) இவர் முக்தி பெற்றார். இந்நாளில் குருபூஜை நடக்கும். மூன்று நாள் நடக்கும் விழாவில், தீர்த்தத்திற்கு சிறப்பு பெற்ற தலங்களில் இருந்து கொண்டு வந்த தீர்த்தத்தால், சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். மூலத்தன்று காலையில் விசேஷ அபிஷேகத்துடன், பூஜை உண்டு. பக்தர்கள் குருபூஜைக்கு முன்பாக, 48 நாள் விரதமிருந்து, இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். அன்று அன்னதானமும் உண்டு. சிவராத்திரியன்று இரவில் இங்குள்ள இலிங்கத்திற்கு நான்கு கால பூஜை நடக்கிறது.