Category Archives: இதர திருக்கோயில்கள்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர்

அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில், சின்னமனூர், தேனி மாவட்டம்.

+91- 4554-249 480 (மாற்றங்களுக்குட்பட்டது)

காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் மாணிக்கவாசகர்
பழமை 500 வருடங்களுக்கு முன்
ஊர் சின்னமனூர்
மாவட்டம் தேனி
மாநிலம் தமிழ்நாடு

மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, “தென்னவன் பிரமராயன்என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.

அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றி பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு மாணிக்கவாசகர்என பெயர் சூட்டினார். தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரைத் தண்டித்தான் மன்னன். சிவன், அவரை விடுவிக்கத் திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார்.

மல்லிகார்ஜுன சுவாமி கோயில், கீரனூர்

அருள்மிகு மல்லிகார்ஜுன சுவாமி கோயில், கீரனூர், திண்டுக்கல் மாவட்டம்.

 

பழநிக்கு வடக்கில் 12 கி.மீ. தொலைவில் உள்ளது கீரனூர். இது திண்டுக்கல், ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ளது. 1500 அடி உயரம் சிவலிங்க வடிவில் அமைந்துள்ள மலையொன்றைக் காணலாம். அதன் வடபாகத்தில் அமைந்துள்ளது மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில்.

பாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, விராடராஜனின் நாட்டில் தங்கியபோது, இந்த மலைப்பகுதிக்கும் வந்து சென்றனராம். புராணச்சிறப்பு பெற்ற திருத்தலம் கீரனூர்.

மலைஉச்சியிலும், பழமையான மல்லிகார்ஜுன சுவாமி கோயில் ஒன்று உள்ளது. ஒற்றையடிப் பாதையாக அமைந்துள்ள, ஆயிரத்துக்கும் மேலான படிகளைக் கடந்து செல்லவேண்டும். ஒருவர் பின்னே ஒருவராகச் செல்ல வேண்டிய குறுகலான பாதை அது.