கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர்
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திங்களூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91-4362-262 499, 9344589244, 9443586453
காலை 6 மணிமுதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கைலாசநாதர் | |
தல விருட்சம் | – | வில்வமரம் | |
தீர்த்தம் | – | சந்திரபுஷ்கரணி | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திங்களூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர். இவரை உலகமே அறியும். ஆனால், மூத்த திருநாவுக்கரசர், இளைய திருநாவுக்கரசர் ஆகியோரைத் தரிசிக்க திங்களூர் கைலாசநாதர் கோயிலுக்கு செல்ல வேண்டும்.
அப்பூதியடிகள் என்ற சிவபக்தர் திங்களூரில் வசித்தார். இவரது மனைவி அருள்மொழி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். நீங்கள் ஒரு முருக பக்தராக இருந்து. உங்களுக்கு குழந்தை பிறந்தால் “முருகன், கந்தன், கார்த்திகேயன்” என ஏதோ ஒரு பெயர் வைப்பீர்கள். ஆனால், அப்பூதியடிகள் சிவபக்தராயினும் கூட, சிவனின் அடியவரான திருநாவுக்கரசரின் பெயரை தன் குழந்தைகளுக்கு வைத்தார். மூத்தவனுக்கு “மூத்த திருநாவுக்கரசு,” இளையவனுக்கு “இளைய திருநாவுக்கரசு” என்று. தன்னை விட, தன் அடியார்களுக்கு தொண்டு செய்வதையே தெய்வம் விரும்பும். “மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதும் இறைவனுக்கு பிடித்த பொன்மொழி. அதைப் பின்பற்றி நாவுக்கரசரின் பெயரால் கல்விக்கூடம். அன்னசத்திரம், தண்ணீர் பந்தல் ஆகியவை அமைத்தார். மக்கள் சேவையை வலியுறுத்தும் இந்த குடும்பத்தினர் சிலை வடிவில் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் உள்ளனர். வேறு எந்தக் கோயிலிலும் மூத்த, இளைய திருநாவுக்கரசர்களைக் காண முடியாது. இதில் மூத்த திருநாவுக்கரசை பாம்பு தீண்டியது. திருநாவுக்கரசர் அக்குழந்தையைக் காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தென்திருப்பேரை, திருநெல்வேலி மாவட்டம்
+91- 93658 89291
காலை 7 மணி முதல் 11 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | கைலாசநாதர் | |
அம்மன் | – | அழகிய பொன்னம்மை | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | தாமிரபரணி | |
ஆகமம் | – | காமீகம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | தென்திருப்பேரை | |
மாவட்டம் | – | திருநெல்வேலி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
அகத்தியரின் சீடர் உரோமசர் சிவதரிசனம் பெற விரும்பினார். அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி தீர்த்தத்தில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டார். அதில், ஏழாவது மலர் கரையொதுங்கிய தலம் இது. இங்கு கைலாசநாதர் இலிங்க வடிவில் காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் பீடம் தாமரை போல வடிவமைக்கப்பட்டுள்ளது. புதன் கிரகத்தின் அனுக்கிரகம் பெற விரும்புபவர்கள், சுவாமிக்கு பச்சை நிற ஆடை சாத்தி, பாசிப்பயிறு மற்றும் சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து வழிபடுகிறார்கள். கைலாசநாதருக்கு வலப்புறத்தில் அம்பிகை அழகியபொன்னம்மை சன்னதியில் கிழக்கு நோக்கியிருக்கிறாள்.