மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தக(ட்)டூர்
அருள்மிகு மல்லிகார்ஜூனேசுவரர் திருக்கோயில், தக(ட்)டூர், தர்மபுரி மாவட்டம்.
+91-4342- 268640
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மல்லிகார்ஜூனேசுவரர் | |
அம்மன் | – | காமாட்சி | |
தல விருட்சம் | – | வேலாமரம் | |
தீர்த்தம் | – | சனத்குமாரநதி | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | தகடூர் | |
ஊர் | – | தகட்டூர் | |
மாவட்டம் | – | தர்மபுரி | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
பாசுபத வரத்தைப் பெறும் பொருட்டு அர்ச்சுனன் தவம் இருக்கிறான். அவன் தவத்தை சோதிக்க ஈசன், வேடன் ரூபம் கொண்டு வருகிறான். அப்போது அர்ச்சுனனுக்கும் வேடனுக்கும் சர்ச்சை நிகழ்ந்து சண்டை வருகிறது. “நீ என்ன பெரிய வேடனா?” என்று வில்லாலேயே சுவாமியை அர்ச்சுனன் அடிக்கிறான். பின்னர் வந்திருப்பது ஈசன்தான் என்பதை தெரிந்துகொண்டான் அர்ச்சுனன். பரத்வாஜ் ரிஷிகள் மூலம் தான் பெரிய பாவம் செய்துவிட்டதாக உணர்ந்து இங்கு வந்து தவம் செய்கிறான். இங்கு மல்லிகைப் பூ கொண்டு சிவபூஜை செய்ததால் சுவாமிக்கு மல்லிகார்ஜூனேசுவரர் என பெயர் வந்தது.
சுந்தரரின் நண்பர் சேரமான் பெருமான் வடக்கிருந்து போகும்போது பூரி சித்தர் மூலம் இத்தலத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு, இங்கு வந்து வழிபாடு செய்துள்ளார்.
அதியமான் மூலம் இந்த கோயில் திருப்பணி செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை
அருள்மிகு மல்லிகார்ஜுனசுவாமி திருக்கோயில், பர்வதமலை, கடலாடி, திருவண்ணாமலை மாவட்டம்.
+91-94426 72283
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மல்லிகார்ஜுனசுவாமி | |
அம்மன் | – | பிரமராம்பாள் | |
தீர்த்தம் | – | பாதாளச் சுனைத் தீர்த்தம் | |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | பர்வதமலை | |
மாவட்டம் | – | திருவண்ணாமலை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
வாசலில் பச்சையம்மாள் காவல் தெய்வமாக இருக்கிறாள். அவளது கோவிலின் வாசலில் ஏழு முனிகள் அமர்ந்துள்ளனர். சிலைகள் அப்படியே முனீஸ்வரனை ஒத்திருந்தன. மலையடிவாரத்தில் இருக்கும் வீரபத்திரரையும் வழிபட்டு மலையேறத்துவங்கவேண்டும். பாதி தூரத்திற்கு அழகாக படிக்கட்டுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அந்த படிக்கட்டுகளைக் கடப்பதற்குள் மூச்சு வாங்கும். நெட்டுக்குத்தாக மலை அமைந்திருக்கிறது. பாதிதூரம் கடந்ததும், கரடுமுரடான மலைக்காட்டுப்பாதை துவங்குகிறது. அதில் பாதிதூரம் சென்றால், வெறும் மொட்டைமலை நெடுநெடுவென செங்குத்தாக உயர்ந்து நிற்கிறது. மாபெரும் திரிசூலங்களும், ஆணிகளும், தண்டுக்கால் கம்பிகளுமே உள்ளன.
ஒவ்வொரு வளைவிலும் மலையடிவாரம் விதவிதமான கோணத்தில் கண்கொள்ளாக் காட்சியாக தெரிகிறது. ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதி விளையாட்டாகப் பொத்தினாள். அப்படி பொத்தியது சில நொடிகள்தான். அதற்குள் பூமியில் பலகோடி வருடங்கள் ஓடிவிட்டன. விஷயமறிந்த சிவபெருமான் உடனே தனது நெற்றிக்கண்ணைத் திறந்துவைத்து பூமிக்கும், பிரபஞ்சத்துக்கும் ஒளி கொடுத்து காப்பாற்றிவிட்டார். அதனால், சிவபெருமான் பார்வதியை நோக்கி,”நீ பூமிக்குப்போய் என்னை நினைத்து கடும்தவம் செய்; அதுதான் உனக்குத் தண்டனை” என அனுப்பியிருக்கிறார்.