கோபம் குறைய

கோபம் குறைய

அன்பினால் நாமும், நம்மைச் சுற்றியுள்ள எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம். அன்பே சிவமாக அமர்ந்திருக்க ஆசைப்படுவோம். கோபப்படுவதால் எதிராளிக்குக் கோபம் வளருமே ஒழிய, குறைய வாய்ப்பில்லை. அன்பாக இருப்பது தான் நம்முடைய சுபாவமான தர்மம். அதுதான் ஆனந்தம் தரவல்லது. கோபத்தால் நமக்கு நாமே தீங்கு செய்கிறோம். அது நல்வழியிலிருந்து நம்மை திசை திருப்பி, அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே கோபத்தை தவிர்ப்பது நல்லது.”

காஞ்சிப் பெரியவரோட அருள்வாக்கு

கோபம், பாபம், சண்டாளம் என்பர் பெரியோர்.

சிலபேர் வேண்டுமென்றே பிரச்சனையைக் கிளப்பி விடுவார்கள் . அந்தச் சூட்டில் குளிர் காய்வார்கள். அவர்களைக் கண்டுகொண்டு அவர்களை ஒதுக்கிவிட்டால் பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.

கோபம், பொறாமை, போன்ற தீக்குணங்கள் ஒட்டுவாரொட்டி வியாதியைப் போன்றது. நம் கோபம் அடுத்தவரையும் கோபப்பட வைக்கும். தும்மல், இருமல் போன்ற வியாதிகள் எப்படியோ அதேபோல கோவத்துக்கும், பொறாமைக்கும், தீக்குணங்களுக்கும் வைரஸ் உண்டு. அவை எதிராளியையும் தாக்குகின்றன, பாதிக்கின்றன.

கோபம் வந்தால் ஆத்திரம் வருகிறது; ஆத்திரம் வந்தால் அறிவு மழுங்கிப் போகிறது. அறிவு மழுங்கிப் போனால் அடாத செயலைச் செய்யத் தூண்டுகிறது. அடாத செயலைச் செய்தால் நமக்குச் சண்டாளன் என்று பெயர் வருகிறது. அடாது செய்பவன் படாது படுவான்.

கோபம் வந்தால் நம் உணர்வுகள் தூண்டப்படுகின்றன; நரம்புகள் விரைக்கின்றன; தசைகள் இறுகுகின்றன. அடிக்கடி கோபம் கொள்ளுவோருக்கு நரம்புகள், தசைகள் பாதிக்கப் படுகின்றன. அதனால் உள்ளுருப்புகள் பாதிக்கப் படுகின்றன. இரத்த ஓட்டம் பாதிக்கப் படுகிறது. இரத்த ஓட்டம் பாதிக்கப் பட்டால் உடலில் அனேக வியாதிகள் குடி கொள்ளுகின்றன. வியாதிகள் வந்தால் தளர்வும் இயலாமையும் வரும். இயலாமை வந்தால் ஆத்திரம் வரும்; ஆத்திரம் வந்தால் கோபம் வரும்; இந்த சுழற்சியிலிருந்து தப்பிக்கவே முடியாது.

கோவம் வரும்போது ஏதாவது பேசினால் அது தப்பாயிடும். அதுனாலே எப்போல்லாம் கோவம் வருதோ அப்போவெல்லாம் இறைவனை நினைத்துக்கொண்டால் கோவம் தன்னாலே அடங்கிடும்.

கோப உணர்ச்சிகள் அதிக இரத்த அழுத்தம், கண் சிவப்பு அமில சுரப்பு, அல்சரை உண்டு பண்ணும் & மிருக குணத்தை உச்ச நிலைக்கு உயர்த்திடும். தண்ணீர் குடித்திட கோபம் தணியும். ஒன்று முதல் பத்து வரை எண்ணிடலாம். கோபத்தை இறைவனிடம் சமர்ப்பிக்கலாம். கோபப்படும் இடம், நபரிடம் இருந்து விலகிச் செல்லலாம். கோபத்திற்கு காரணமாக சொல், செயல், எண்ணத்தில் இருந்து வேறு செயல் செய்தல்.

கோபத்தின் போது முகம் விகாரமாகி, அன்பு, சாந்தம் குறைவதை கண்ணாடி மூலம் உணர்ந்து குறைத்தல். கோபத்திற்கான காரணத்தை ஒரு பேப்பரில் வரிசையாகப் பட்டியல் இட்டு எழுத கோபம் குறையும். தியானம், சாந்தி ஆசனம் செய்ய கோபம் குறையும். நீர்வீழ்ச்சி, ஷவர் பாத், தொட்டிக் குளியல் செய்ய கோபம் குறையும். பழச்சாறுகள், இயற்கை உணவுச் சாறுகள் குடித்து கோபத்தை குறைக்கலாம்.

அத்துடன் கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வேண்டிக்கொண்டால் கோவம் வருவது குறைகிறது என்கின்றனர் பக்தர்கள்.

ஆட்கொண்டநாதர் இரணியூர் சிவகங்கை

கிளியாளம்மன்

பெரியகுமட்டி

கடலூர்

செல்லத்தம்மன், கண்ணகி

சிம்மக்கல், மதுரை

மதுரை

கொடிய விஷ ஜந்துக்களிடமிருந்து காக்க

கொடிய விஷ ஜந்துக்களிடமிருந்து காக்க

சிலவகைப் பாம்புகள் கடித்தால் அவற்றின் விஷ வேகம் மிகவும் துரிதமாக இரத்தத்தில் கலந்து, இருதயத்தை அடைந்து முச்சடைத்து மனிதன் இறந்துவிடுவான். ஆனால் அவசர உணர்வோடு பேய்ச்சுரையை உபயோகித்தால் விஷத்தை முறித்துவிடலாம். கொடிய விஷப்பாம்பு கடித்து மனிதன் உணர்விழந்துவிட்டான் என்றால் முதலில் நாம் செய்யவேண்டியது அவனுக்கு உணர்வு ஊட்டி நினைவுண்டாக்க வேண்டியதுதான். இதற்கு பேய்ச்சுரையின் இலைகளைக் கசக்கிப் பிழிந்து சாறெடுத்து சம அளவு தும்பை இலைச்சாறு சேர்த்து மூக்கில் சில துளிகள் விட்டு ஊதிவிட வேண்டும். ஒரு தும்மலோடு விஷக்கடிக்கு ஆளானவருக்கு நினைவு திரும்பிவிடும். நினைவு திரும்பிய மறுகணமே பேய்ச்சுரையின் வேரைச் சேகரித்து நன்கு அரைக்க வேண்டும். இதை விஷத் தீண்டலுக்கு உள்ளானவர்களுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு அளவு உள்ளுக்குக் கொடுக்க வேண்டும். இந்த இலையை அரைத்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். திடீரென ஏற்படும் பேதி, வாந்தி முதலியவற்றால் விஷத்துக்கு முறிவு ஏற்பட்டு விஷக்கடிக்கு ஆளானவரின் உயிர் மீளும். அத்துடன் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும்.

கீழ்கண்ட ஆலயங்களில் உள்ள இறைவனை வேண்டிக்கொள்ள பாம்பு கடிபட்டவர் பிழைத்துக்கொள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

செல்லாண்டியம்மன்

சுண்டக்காமுத்தூர்

கோயம்புத்தூர்

நஞ்சுண்டேஸ்வரர் நஞ்சன்கூடு கர்நாடகா
இரத்தினகிரீஸ்வரர் திருமருகல் நாகப்பட்டினம்

வாழைத்தோட்டத்து அய்யன்

கருத்தம்பட்டி

கோயம்புத்தூர்

நல்லாண்டவர்

மணப்பாறை

திருச்சி