அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர்
அருள்மிகு பாலசுப்ரமணியன் திருக்கோயில், உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
காலை 5 மணி முதல் 8 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு மணி 7 வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பாலசுப்ரமணியன் |
|
அம்மன் | – |
கஜவள்ளி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
உத்திரமேரூர் |
|
மாவட்டம் | – | காஞ்சீபுரம் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
முனிவர்களின் தவத்துக்கு இடையூறாக இருந்த அசுரர்களைக் கொன்று, முனிவர்களைக் காத்தருள வேலாகி நின்ற வேலவனின் புகழ்பாடும் திருத்தலம் இளையனார் வேலூர். இளையனார் என்றால் முருகன், வேலூர் என்றால் முருகனின் வேல் விழுந்த இடம் என்பது பொருள். உத்திரவாகினி என்றும் சேயாறு என்றும் தற்போது செய்யாறு என்றும் அழைக்கப்படும் ஆற்றின் இருகரையோரமும் அக்காலத்தில் அடர்ந்த காடுகள் காணப்பட்டன. இங்கு பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். அவர்களுள் ஒருவரான காசிபமுனிவர், ஒருசமயம் உலக நலன் பொருட்டு சேயாற்றங்கரையில் ஆசிரமம் அமைத்து வேள்வி செய்யத் தொடங்கினார். அப்போது மலையன், மாகறன் என்ற அழியா வரம்பெற்ற அசுரர்கள் அவரது வேள்விக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து காசிப முனிவர், இறைவன் கடம்பநாதரிடம் முறையிட, அவருக்குக் காட்சி தந்த இறைவன், “கவலை வேண்டாம். எனது இளைய மகன் முருகனை அனுப்பி, அவ்விரு அசுரர்களையும் அழித்து, உங்களது வேள்விக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வேன்” என்று ஆசி கூறினார். கூடவே முருகனுக்கு துணையாக வாட் படையையும் அனுப்புவதாக கூறினார். தந்தை ஈசனின் கட்டளையை சிரமேற்று, காசிப முனிவரின் வேள்வியைக் காக்க வேலவன் விரைந்து புறப்பட்டான். முதலில் மலையனையும், மாகறனையும் அழைத்து நல்லுபதேசம் செய்தார். ஆனால் கர்வம் தலைக்கேறிய அவர்கள் முருகனின் நல்லுரையை ஏற்கவில்லை.
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி
அருள்மிகு பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், கோபி, ஈரோடு மாவட்டம்.
+91-4285-222 125 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பால தண்டாயுதபாணி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | கோபி | |
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஆதார மூலக்கோயிலின் கால அளவை நிர்ணய படுத்த முடியாத அளவிற்கு ஆண்டவர் மலை முருகன் கோயில் பழமை வாய்ந்தது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இக்குன்றில் குடிகொண்ட முருக பெருமானைப் போற்றி வணங்கி பூசாரி சித்தர் என்பவர் பக்தர்களுக்கு அருள்வாக்கு கொடுத்து வந்தார். அதன் பின்னர் குப்பணசித்தர் என்பவர் காற்று ஆதாரத்துடன் பல காலங்கள் அருள் பாலித்து வந்தார். கடந்த 1980ம் ஆண்டு கோயில் திருப்பணிகள் துவங்கப்பட்டது. தொடர்ந்து பத்து வருடங்களாக கோயில் திருப்பணிகள் நடந்து 1990ம் வருடம் நிறைவு பெற்றது. ஆண்டாண்டு காலங்களாக ஆன்றோரும், சான்றோரும் வழி வழியாய் வழிபடும் அற்புதத் தலமாக கோபிசெட்டிபாளையம் ஆண்டவர் மலை முருகன் கோயில் திகழ்கிறது. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் குடிகொண்டிருப்பான் என்பதை உணர்த்தும் விதத்தில் கோபியில் உள்ள மூன்று குன்றுகளிலும் முருகப்பெருமான் வெவ்வேறு ரூபங்களில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோபியில் பச்சைமலை, பவளமலை, ஆண்டவர்மலை என மூன்று குன்றுகள் இயற்கையாகவே அமையப்பெற்றுள்ளது. பச்சைமலை குன்றில் பாலமுருகனாகவும், பவளமலை குன்றில் முத்துக்குமார சுவாமியாகவும், ஆண்டவர்மலை குன்றில் பால தண்டாயுதபாணி சுவாமியாகவும் வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை வழங்கி பக்தர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று விளங்குகிறார்.