அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை
அருள்மிகு முருகன் திருக்கோயில், வேல்கோட்டம், மருதமலை, கோயம்புத்தூர் மாவட்டம்.
காலை 5.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
முருகனின் வேல் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
வேல்கோட்டம் |
|
மாவட்டம் | – |
கோயம்புத்தூர் |
|
மாநிலம் | – | தமிழ்நாடு |
அருணகிரிநாதர் பாடிய கந்தரலங்காரத்தில் வேல் பற்றிய சிறப்புகளை ஏராளமான பாடல்களில் குறிப்பிட்டிருக்கிறார். உற்றார் உறவினர்கள் அனைவரும் கைவிட்ட நிலையில் துணையின்றி தனித்துச் செல்லுகின்ற வழியில் தனக்குத் துணையாக வந்து உதவுவன வடிவேலும் மயிலுமே எனப் பொருள்பட பாடலில் குறிப்பிட்டு உள்ளார். வேல் ஞானத்தில் அம்சம். அந்த வேலைத் தாங்கி இருக்கின்ற முருகப் பெருமானை, ஞான வேல் முருகன் என போற்றுகின்றனர். வேலை வழிபட்டால் ஞானம் உண்டாகும். குமரகுருபர சுவாமிகள் நீண்ட காலம் வாய் பேசமுடியாத நிலையில் இருந்தார். திருச்செந்தூர் முருகனை மனதார வேண்டி அவனே கதி என இருந்தார். ஒருநாள் தன் பக்தனின் வேண்டுதலை ஏற்று குமர குருபரனின் முன் தோன்றி, குருபரா, உனக்கு பேசுகின்ற திறனோடு என்னைப் பாடுகின்ற புலமையினையும் வழங்கினோம் எனக்கூறி அவரது ஞானவேல் கொண்டு எழுதினார். முருகனின் பேராற்றலால் குருபரன் கந்தர் கலிவெண்பாவை பாடினார்.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை, திருவள்ளூர் மாவட்டம்.
+91-4118- 285225, 285387,285303, 2788 5243 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்.
மூலவர் | – | சுப்பிரமணியசுவாமி | |
உற்சவர் | சண்முகர் | ||
அம்பிகை | வள்ளி, தெய்வானை | ||
தல விருட்சம் | – | மகுடமரம் | |
தீர்த்தம் | – | இந்திர தீர்த்தம் தவிர சரவணப்பொய்கை, சரஸ்வதி தீர்த்தம், மடசெட்டிக்குளம், நல்லாங்குளம் | |
ஆகமம் | குமார தந்திரம் | ||
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப்பெயர் | சிறுதணி | ||
ஊர் | – | திருத்தணி | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு வள்ளி என பெயர் சூட்டி வளர்த்து வந்தான். வள்ளி தினைப்புனத்தைக் காவல் காக்கும் பணியைச் செய்து வந்தாள். தினைப்புனம் என்பது உலகத்தையும், அதில் விளையும் தினைப்பயிர் முழுவதையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் “உலகப்பற்று” எனப்படும் ஆசையையும் குறிக்கும். “இது உனக்குச் சொந்தமானதல்ல; எனக்குச் சொந்தம்” என்று பறந்து வரும் பறவைகள் பரமாத்மாவாகிய இறைவனைக் குறிக்கும். உலக ஜீவன்களோ இதைப் புரிந்து கொள்ளாமல், கவண்கல்லால் அவற்றை விரட்டியடிப்பது, தெய்வத்தைப் புரிந்து கொள்ளாத தன்மையைக் குறிக்கும். இந்த உலகமே நிரந்தரமெனக் கருதியிருக்கும் இதுபோன்ற பாமர உயிர்களுக்கு தவம், யோகம், தியானம் இது பற்றியெல்லாம் தெரியாது. இப்படிப்பட்ட உயிர்களையும் ஆட்கொள்ளவே விரும்புவான். அப்படி வள்ளியை ஆட்கொள்ளவே முருகப்பெருமான் முதியவர் வேடத்தில் வந்தார். வள்ளியோ அவரை யாரென அறியாமல் பயந்தோடினாள். இறைவனோ, அவளை ஆட்கொள்ள யானை மூலம் பயமுறுத்தினார். அவர் அவளைத் தழுவினார். இறைவனின் ஸ்பரிசம் பட்டதுமே ஞானோதயம் பிறந்தது. அவருடன் ஐக்கியமாகி விட்டாள். பாமரர்கள், அவள் இறைவனுடன் ஐக்கியமானதை திருமணமாகக் கருதி, வள்ளி திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள். வள்ளியின் திருமணத்தலம் இது. முருகப்பெருமான், திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த பிறகு, கோபம் தணிந்து இத்தலத்தில் தங்கியதால் “தணிகை மலை” என்று பெயர் பெற்ற இத்தலம் “திருத்தணி” என்று மாறியது.