அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி

அருள்மிகு வேலாயுத சுவாமி கோவில், திருவாவினன்குடி, திண்டுக்கல் மாவட்டம்.

காலை 6 மணியில் இருந்து, இரவு 9 மணி வரையில் தொடர்ந்து திறந்திருக்கும்.

நாரதர் கொடுத்த கனியை, தனக்கு தராததால் கோபித்துக்கொண்ட முருகன் மயில் மீதேறி இத்தலம் வந்தார். சமாதானம் செய்ய, அம்பிகை பின்தொடர்ந்து வந்தாள். சிவனும் அவளைப் பின்தொடர்ந்தார். முருகன் இத்தலத்தில் நின்றார். அம்பிகை, இங்கு மகனை சமாதானம் செய்தாள். ஆனாலும் முருகன் விடாப்பிடியாக இங்கேயே இருக்க விரும்புவதாகச் சொல்லி தங்கிவிட்டார். பிற்காலத்தில் இவ்விடத்தில் முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. சுவாமி குழந்தை வடிவமாக நின்றதால், “குழந்தை வேலாயுதர்என்று பெயர் பெற்றார்.


திருவாவினன்குடி ஆலயம் பழனிமலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் இருக்கிறது. இவ்வாலயத்தின் வடகிழக்கில் சிறிது தூரத்தில் சரவணப் பொய்கை காணப்படுகிறது. முருகனை தரிசனம் செய்ய வருபவர்கள் இப்பொய்கையில் நீராடிச் செல்வர். இப்பொய்கையின் அருகிலிருந்துதான் காவடி எடுக்கப்போகும் பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளைக் கொண்டு செல்வர். திருவாவினன்குடி கோயிலில் முருகப்பெருமான் மயில் மீதமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாகக் காட்சி தந்தருள்கின்றார்.

இந்த திருத்தலத்தை திருஎன்ற இலக்குமி தேவியும், என்ற காமதேனுவும், இனன்என்ற சூரியனும் குடியிருந்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திரு ஆ இனன் குடிஎன்று பெயர் பெற்றது.

திரு லட்சுமி
காமதேனு
இனன் சூரியன்
கு பூமாதேவி
டி அக்கினிதேவன்

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை

அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை, ஈரோடு மாவட்டம்.

+91-424-2430114, 94439 44640 (மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் 9 மணி வரை நடை திறந்திருக்கும்.

இறைவன் வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி
பழமை 500 வருடங்களுக்கு முன்
கிராமம்/நகரம் திண்டல்மலை
மாவட்டம் ஈரோடு
மாநிலம் தமிழ்நாடு


ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறார்.

இங்கு அமைந்துள்ள இடும்பனாருக்கு ஒரு சிறப்பு உள்ளது. பூந்துறை நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட போது வேளாளர்கள் ஒன்று கூடி இடும்பக் குமரனை வேண்டி அவர் மூலம் நாட்டில் மழை பெய்ய வேண்டிக் கொண்டனர். வேண்டுதலுக்கு பின் மழை பெய்து வளம் ஏற்பட்டது என்ற வரலாறு உண்டு. இங்குள்ள மக்கள் தங்களது வேண்டுகோளை இடும்பன் மூலம் தெரிவித்து முருகனின் அருளை பெற்று வருவது இன்றளவும் நடைமுறையில் உள்ளது.