Tag Archives: மதுரை
அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை
அருள்மிகு செல்லத்தம்மன், கண்ணகி திருக்கோயில், சிம்மக்கல், மதுரை-625 001.
********************************************************************************************
மதுரைமாவட்டம்.
********************
+91- 98655 82272
காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – செல்லத்தம்மன், கண்ணகி
தல விருட்சம்: – வில்வம், அரசு
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – மதுரையம்பதி
ஊர்: – மதுரை
மாநிலம்: – தமிழ்நாடு
காவிரிப்பூம்பட்டினத்தில் வசித்த கண்ணகி, கோவலன் இருவரும் பிழைப்பிற்காக மதுரைக்கு வந்தனர். அவர்களை வழியில் சந்தித்த கவுந்தியடிகள் என்னும் பெண் துறவி, அவர்களை மதுரையிலுள்ள மாதரி என்பவளின் வீட்டில் அடைக்கலமாக தங்கச் செய்தாள். கண்ணகியின் கணவன் கோவலன், மனைவியின் சிலம்பை விற்று தொழில் துவங்கலாம் என்ற நோக்கத்தில் ஊருக்குள் சென்றான்.
இவ்வேளையில், அவ்வூரை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பை அபகரித்த அரண்மனை பொற்கொல்லன், அந்தப் பழியை கோவலன் மீது போட்டான். இதை தீர விசாரிக்காத பாண்டியன், கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்துவிட்டார்.
கணவனை இழந்த கண்ணகி கோபத்துடன் பாண்டியன் சபையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினாள்.
தவறை உணர்ந்த மன்னனும், ராணியும் அக்கணமே உயிர்விட்டனர். பிற்காலத்தில் கண்ணகியின் கற்புத்திறனை உணர்ந்த மக்கள், அவளைத் தெய்வமாகவே வழிபட்டனர். அவள் தங்கியிருந்த இந்த இடத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினர். செண்பகப்பாண்டியன் காலத்தில் இது அம்மன் கோயிலாகி விட்டது.
இத்தலவிநாயகர் அனுக்கை விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் துர்க்கை, மீனாட்சி சுந்தரேசுவரர், அய்யனார், காலபைரவர் ஆகியோர் இருக்கின்றனர். முன் மண்டப தூண்களில் அட்ட(8) காளி சிற்பங்கள் உள்ளன.
அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில், மதுரை
அருள்மிகு மொட்டை விநாயகர் திருக்கோயில், கீழமாசி வீதீ, மதுரை
+91 452 4380144(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
பழமை: – 500 வருடங்களுக்கு முன்ப
ஊர்: – மதுரை
மாநிலம்: – தமிழ்நாடு
தலவரலாறு:
அன்னை பார்வதி தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு “கணபதி‘ என பெயர் சூட்டித் தனது உலகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்மையைக் காண வந்தனர். அவர்களை உள்ளே விடக் கணபதி மறுத்து விட்டார். அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே, அவர்களுடன் போரிட்டு விரட்டி விட்டார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவரும் கணபதியிடம் நேரில் வந்து பேசிப்பார்த்தார். சிவனையும் உள்ளே விடக் கணபதி மறுக்கவே, கோபம்கொண்டது போல் நடித்த சிவன், கணபதியின் தலையை வீழ்த்தி விட்டார். இதையறிந்த பார்வதி, தன்னால் உருவாக்கப்பட்ட கணபதிக்கு மீண்டும் உயிர்கொடுக்கும்படி வேண்டினாள். சிவன் அவருக்கு யானையின் தலையைப் பொருத்தி முழு முதல் பொருளாக்கினார். தான் உட்பட யாராக இருந்தாலும் தன் மைந்தன் கணபதியை வணங்கியபிறகே பிறரை வணங்க வேண்டும் என்றார். விநாயகரை கணங்களுக்கெல்லாம் அதிபதியாக்கினார்.
சிவன், கணபதியின் தலையை வீழ்த்தியதை உணர்த்தும் விதமாக விநாயகர், இங்கு தலையில்லாமல் மொட்டைக் கணபதியாக அருளுகிறார்.