Tag Archives: மதுரை
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மதுரைமாவட்டம்.
+91 452 234 2782 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
தண்டாயுதபாணி |
|
உற்சவர் | – |
தண்டாயுதபாணி |
|
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
நேதாஜி ரோடு, மதுரை |
|
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சிவபெருமானின் தோழராக இருந்து, நாயன்மார் வரிசையில் இடம்பிடித்தவர் சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் ஏழாம் நூற்றாண்டில் மதுரைக்கு யாத்திரை வந்த போது, இந்த முருகன் கோயிலில் தங்கினார். சுந்தரர் தங்கிய காரணத்தால் “சுந்தரர் மடம்” என்று இந்தக் கோயில் அழைக்கப்பட்டது. இங்கிருந்தே சுந்தரர் திருப்பரங்குன்றம் முருகன்கோயிலுக்கு கிளம்பிச் சென்றார். இந்தக் கோயில் ஏழாம் நூற்றாண்டில் இருந்தே இங்கு உள்ளது. இங்குள்ள உற்சவ முருகன் சிலையை, ஆண்டுதோறும் தைப்பூச நாளில் சில பக்தர்கள் தலைச்சுமையாக பழநி மலைக்கு எடுத்துச்செல்வார்கள். அங்கு சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் மதுரை கொண்டு வரப்படும். பிற்காலத்தில் இந்த வழக்கம் நின்றுபோனது. பழநிமலைக்கு யாத்திரை சென்று வந்த முருகன் என்பதால், இவருக்கு “தண்டாயுதபாணி” என்ற பெயர் ஏற்பட்டது. “மதுரை பழநியாண்டவர்” என்ற பெயரும் உண்டு. முன்மண்டபத்தில் முருகனின் ஆறுபடைவீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை சிற்பங்கள் வடிக்கப் பட்டுள்ளன. கருவறையில் முருகப் பெருமான் கோவணத்துடன் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். வலதுகையில் தண்டம் ஏந்தியுள்ள இவர், இடதுகையை இடுப்பில் வைத்துள்ளார். பெரும்பாலும் மூலவர் முருகன் அரசகோலத்திலேயே காட்சி தருவார். மகாமண்டபத்தில் மகா கணபதி, துர்க்கை, நாகராஜர், யோக ஆஞ்சநேயர், பரமேஸ்வரர், யோகதட்சிணாமூர்த்தி, காலபைரவர் சன்னதிகள் அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் கன்னிமூலவிநாயகர், வீரபத்திரர், பேச்சியம்மன், அங்காளஈசுவரி சன்னதிகள் உள்ளன.
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை, மதுரை மாவட்டம்.
+91- 452-234 9868, 234 4360 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மீனாட்சி சுந்தரேஸ்வரர், சொக்கநாதர் | |
அம்மன் | – | மீனாட்சி, அங்கயற்கண்ணி | |
தல விருட்சம் | – | கடம்ப மரம் | |
தீர்த்தம் | – | பொற்றாமரைக்குளம், வைகை, கிருதமாலை, தெப்பக்குளம், புறத்தொட்டி | |
ஆகமம் | – | காரண ஆகமம் | |
பழமை | – | 2000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | ஆலவாய், கூடல், நான்மாடக்கூடல், கடம்பவனம் | |
ஊர் | – | மதுரை | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | சம்பந்தர், திருநாவுக்கரசர் |
மலயத்துவச பாண்டியன், மனைவி காஞ்சனமாலை இருவருக்கும் குழந்தை இல்லாததால் புத்திரகாமேட்டியாகம் செய்தனர். அப்போது உமாதேவி மூன்று தனங்களையுடைய ஒரு பெண் குழுந்தையாக வேள்விக்குண்டத்தினின்று தோன்றினாள். குழந்தையின் தோற்றத்தைக் கண்டு அரசன் வருந்தும் போது, இறைவன் அசரீரியாக “இக்குழந்தைக்கு கணவன் வரும்போது ஒரு தனம் மறையும்” என்று கூறினார். இறைவன் கட்டளைப்படி குழந்தைக்குத் “தடாதகை” எனப்பெயரிடப்பட்டது. குழந்தை சிறப்பாக வளர்ந்து பல கலைகளில் சிறந்து விளங்கியது.
மலயத்துவசன் மறைவுக்குப்பின் தடாதகை சிறப்பாக ஆட்சி செய்தாள். கன்னி ஆண்டதால் “கன்னிநாடு” எனப் பெயர் பெற்றது. தடாதகை மணப்பருவத்தை அடைந்தாள்.
நால்வகைப் படைகளுடன் புறப்பட்டுச் சென்று திக்விஐயம் செய்து வென்றாள். இறுதியாகத் திருக்கைலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் சிவபெருமானையும் கண்டாள். கண்டவுடன் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. முன் அறிவித்தபடி இறைவனே கணவன் என்பது புலப்பட்டது. திருமணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. திருமால் முதலிய தேவர்களும் முனிவர்களும் வந்திருந்தார்கள். சிவனுக்குப் பக்கத்தில் தடாதகை இருந்ததை காணக் கண் கொள்ளாக்காட்சியாக இருந்தது. பிரமதேவன் உடனிருந்து நடத்தினார். பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான், திருமங்கல நாணைப் பிராட்டியாருக்குச் சூட்டினார். எல்லோரும் கண் பெற்ற பயனைப் பெற்றனர். தடாதகைப் பிராட்டியே மீனாட்சி அம்மனாக விளங்குகிறார்.