Monthly Archives: March 2012

அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர்

அருள்மிகு குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், உறையூர், திருச்சி மாவட்டம்.

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

தான்தோன்றீஸ்வரர்

தாயார்

குங்குமவல்லி, காந்திமதி

தல விருட்சம்

வில்வம்

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

உறையூர்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

சூரவாதித்த சோழ மன்னன் ஒருமுறை நாகலோகம் சென்றான். அங்கிருந்த காந்திமதி என்ற நாககன்னிகையின் மீது அவனுக்கு காதல் ஏற்பட்டது. அவள் சிவபக்தை. தினமும் திருச்சிராப்பள்ளி மலையில் வீற்றிருக்கும் தாயுமான சுவாமியை வணங்க வரும் வழக்கம் உடையவள்.
நாகலோகத் தலைவரான ஆதிசேஷனின் அனுமதி பெற்று காந்திமதியை சூரவாதித்தன் மணந்து கொண்டான். திருமணத்துக்கு பிறகும் மலையிலுள்ள சிவனை வணங்க காந்திமதி தவறவில்லை.
இந்நிலையில் அவள் கர்ப்பவதியானாள். அவளுக்கு மலையேற மிகவும் சிரமமாக இருந்தது. இந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல், அவள் மலையேறத் தவறவில்லை. ஏற்கனவே, காவிரிக்கரையில் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்து, “தாயும் ஆனவன்எனப் பெயர் பெற்ற சிவபெருமான், தன் பக்தையான காந்திமதியின் மீது இரக்கம் கொண்டார். ஒருநாள் காந்திமதியால் நடக்க முடியவில்லை. வயிற்றுப் பாரத்தையும் சுமந்து கொண்டு மலையில் எப்படி ஏறுவது என தவித்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட சிவன், தானே அங்கு தோன்றினார். “மகளே. காந்திமதி, கலங்காதே; இனி உனக்கு பிரசவம் ஆகும் வரை, நீ மலைக்கு வந்து என்னை தரிசிக்க வேண்டாம். இங்கேயே உனக்காக நான் இலிங்கவடிவில் அமர்வேன். நீ இவ்விடத்திலேயே என்னை வணங்கித் திரும்பலாம்” என்றார்.
தானாக உன் முன் தோன்றிய எனக்கு தான் தோன்றீஸ்வரர்என்ற திருநாமம் ஏற்படும். என் மனைவி பார்வதிதேவி, உன் போன்ற பெண்களுக்கு தாயாய் இருந்து பிரசவம் பார்ப்பாள். குங்குமம் காப்பாள். அவளுக்கு குங்குமவல்லிஎன்ற திருநாமம் ஏற்படும்என்றார். காந்திமதி மகிழ்ச்சியடைந்து பிரசவ காலம் வரை அங்கு வந்து இறைவனை வணங்கி, அழகிய குழந்தையைப் பெற்றெடுத்தாள். இங்குள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில், இடையாற்று மங்கலம்

அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில், இடையாற்று மங்கலம், வாளாடி வழி, லால்குடி தாலுக்கா, திருச்சி மாவட்டம்.

+91 431 – 254 4070, 98439 51363

(மாற்றங்களுக்குட்பட்டவை)

காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மூலவர்

மாங்கல்யேஸ்வரர்

உற்சவர்

சோமாஸ்கந்தர்

தாயார்

மங்களாம்பிகை

தல விருட்சம்

பவளமல்லி

தீர்த்தம்

கிணறு

பழமை

500 வருடங்களுக்கு முன்

ஊர்

இடையாற்று மங்கலம்

மாவட்டம்

திருச்சி

மாநிலம்

தமிழ்நாடு

மாங்கல்ய மகரிஷி உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர். அகத்தியர், வசிஷ்டர், பைரவர் ஆகிய மகரிஷிகளின் திருமணத்தில், மாங்கல்ய தாரண பூஜை நிகழ்த்தியவர். இவரது தவ வலிமை அனைத்தும் அவரது உள்ளங்கைகளில் அடங்கியிருந்தது. மாலைகளை தாங்கி வானில் பறக்கும் அட்சதை தேவதைகள், மாங்கல்ய தேவதைகளுக்கெல்லாம் இவரே குரு (திருமணப்பத்திரிகைளில் மாங்கல்யத்துடன் பறப்பது போன்ற தேவதைகளைஅச்சிடும் வழக்கம் இப்போதும் உள்ளது). திருமணத்திற்கான சுப முகூர்த்த நேரத்தை அமிர்தநேரம் என்பர். இந்த நேரத்தில் இவர் யாரும் அறியாமல் சூட்சும வடிவில் இத்தலத்து, மாங்கல்யேஸ்வரரை வணங்கி, மாங்கல்ய வரம் தரும் சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதாக ஐதீகம். உத்திர நட்சத்திரத்திற்கு மாங்கல்ய மங்கள வரம் நிறைந்திருப்பதால்தான், அனைத்து தெய்வ மூர்த்திகளின் திருமண உற்சவங்கள் பங்குனி உத்திர நட்சத்திரத்தில் நிகழ்கின்றன.