Monthly Archives: March 2012

செவ்வாய் தோஷம் நீங்க

செவ்வாய் தோஷம் நீங்க

அன்னை பராசக்தி தேவி சிவனை நோக்கி கடும் தவம் செய்யும்போது போது, தவ உக்கிரத்தின் வெளிப்பாடாக மண்ணில் விழுந்த அன்னையின் வியர்வைத் துளியிலிருந்து செவ்வாய் பிறப்பெடுக்கிறார். பராசக்தி தேவியால் வளர்க்கப்பட்டு தக்க வயதில் பரத்வாஜ முனிவரிடம் கல்வி கற்க அனுப்பப்படுகிறார். 64 கலைகளையும் கற்றுத் தேர்ந்து, அவந்தி தேசத்திற்கு மன்னனாகி சக்தி தேவியை மணந்து கொள்கிறார். தனது தவ வலிமையால் விநாயகப்பெருமானின் அருள்
பெற்று, வானத்தில் செஞ்சுடர் ஒளியுடன் கூடிய செவ்வாய் கிரமாகி நவக்கிரக பரிபாலனம் செய்து வருகிறார்.

செவ்வாய் கிரகம் சிவந்த நிறம் கொண்டது. பொதுவாக செவ்வாய் சகோதரகாரகன் என்று சொல்லப்பட்டாலும் மண் பாண்டம் செய்பவர், அக்கினி சம்பந்தமான வேலைகள், ராணுவம், ரத்தம், ரணம் எனப்படும் காயம், சாதனைகள், சிவந்த ரத்தினம், செம்பு முதலானவற்றுக்கும் பொறுப்பாகின்றார். மேலும் பவளம், துவரை, நெருப்பு பயம், துவேசம், கடன், சோரம், சுய சிந்தனை, வீரியம், உற்சாகம், ஆடு, சேனைகளின் தலைமை, அதிகாரம், இனம்தாழ்ந்த நிலைப்பாடு, ஆயுள் குறைவை ஏற்படுத்துதல், விபத்துக்கு துணை போன்ற பல பொறுப்புகளை பெற்றிருந்தாலும் ரத்த அணுத் தொடர்பில் வம்ச விருத்திக்கு காரண கர்த்தாவாக விளங்குகிறார்.

ரத்தத் தொடர்பில் முக்கியமானதே திருமண பந்தம் எனும் குடும்ப வாழ்க்கை. குடும்ப வாழ்க்கையின் ஆரம்பமாக அமையும் திருமணப் பந்தத்திற்கும் செவ்வாய்க்கும் முக்கிய பங்கு உள்ளது. எனவே தான் திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷம் அனைவரையும் பயமுறுத்துவதாக அமைகின்றது.

எல்லோராலும் கேட்கப்படுவதும், பேசப்படுவதும் ஏன் ஜோதிடம் என்றாலே என்ன எனத் தெரியாதவர்களும் கேட்கும் கேள்வி பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதாப சுத்த ஜாதகமா, மாப்பிள்ளைக்கு செவ்வாய் தோஷம் உள்ளது என்பார்கள்.

திருமண தோஷம்:

அங்காரக தோஷம், ரத்த தோஷம், உறவு தோஷம் என்றெல்லாம் சொல்லும் சொல்லுக்கு செவ்வாய் தோஷம் என ரிஷிகள் பெயர் சூட்டி உள்ளார்கள்.

ஒருவரது ஜனன ஜாதகத்தில் விதி எனப்படும் லக்கினத்திற்கும், மதி எனப்படும் சந்திரனுக்கும் அதாவது ராசிக்கும் சுகம் எனப்படும் சுக்கிரனுக்கும் அந்த ஜாதகத்தில் பதிவாகும் செவ்வாயின் இடத்திற்கும் உள்ள உறவைக் கொண்டுதான் செவ்வாயின் தோஷம் எந்த அளவு ஒருவருக்கு வேலை செய்கிறது என்பதை உணரலாம்.

கல்யாணத்திற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கிய தோஷமாக இது கருதப்படுகிறது. ஆனால் இந்த செவ்வாய் தோஷம் ஆணுக்கும், பெண்ணுக்கும் இருந்தால் திருமணம் செய்யலாம்.

ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து மற்றொருவற்கு செவ்வாய் தோஷம் இல்லை எனில் அவர்களுக்கு திருமணம் செய்யக்கூடாது என சோதிடம் கூறுகிறது.

லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாகக் கருத வேண்டும். அப்படி மீறித் திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.

2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் உள்ள எல்லோருக்கும் செவ்வாய் தோஷம் என்று கூறிவிட முடியாது. இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன.

மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய வீடுகளில் செவ்வாய் இருந்தால் தோஷம் வலிமை குன்றி தோஷமில்லை என்ற நிலை ஏற்படும். காரணம் என்னவென்றால் சம்பந்தப்பட்ட வீடுகளில் செவ்வாய் ஆட்சி, உச்சம், நீசம், பெற்று இருப்பதால் தோஷம் குன்றும்.

குரு, சூரியன், சனி சந்திரனுடன் சேர்ந்திருந்தால் தோஷமில்லை.

சூரியன், சந்திரன், குரு, சனி, ஆகியவற்றால் பார்க்கப்பட்டால் பாவமில்லை என சோதிடம் கூறுகிறது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமில்லை.

2 – இடம் மிதுனம், அல்லது கன்னி ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.

4 – ம் இடம் மேஷம், விருச்சிகம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.

7 – ம் இடம் கடகம், மகரம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.

8 – ம் இடம் தனுசு, மீனம் ஆகி செவ்வாய் இருந்தாலும் தோஷமில்லை.

விதவைப் பெண் :
7
ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்க்கை பெற்றால், சூரிய தசை அல்லது செவ்வாய் தசையில் அவள் விதவையாவாள்.

மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.

8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.

7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைந்து இருந்தால் இளவயதில் மாங்கல்ய பலம் இழக்க நேரிடும்.
விவாகரத்து :
மங்கையர்களின் ஜாதகத்தில் 7ம், 8ம் இடங்கள் கெட்டிருந்தாலும்


லக்கினாதிபதி, 7ம் இடத்திற்கு அதிபதி 6, 8 போன்ற மறைவிடத்தில் இருந்தாலும்,

12ம் இடத்தில் ராகு, 6ம் இடத்தில் கேது அமையப் பெற்ற பெண்களும், 7ம் இடத்தில் நீச கிரகம் இருந்து சுபரால் பார்க்கப்பட்டாலும் விவாகரத்து அமையப் பெறும்.

பொதுவான எல்லாப் பரிகாரங்களையும் இடம், பொருள், காலம் இந்த மூன்றையும் தெரிந்து கொண்டு தான் செய்ய வேண்டும். இடம் என்பது பரிகாரம் செய்யக் கூடிய இடத்தைக் குறிக்கும். பொருள் என்பது பரிகாரத்திற்கு உதவும் பொருள்களைக் குறிக்கும்.

காலம் என்பது பரிகாரத்திற்கு ஏற்ற காலத்தை குறிக்கும். சுபமான பரிகாரங்களை வளர்பிறைகளிலும், துயர், கட்டுக்கள் நீக்கும், அதாவது துக்ககர பரிகாரங்களை தேய்பிறையிலும் செய்ய வேண்டும்.

குளக்கரை, கிணற்றங்கரை, நதிக்கரை, கோசாலை, சிவாலயங்கள், விஷ்ணு சந்நிதி, பிரும்ம சமூக மத்தி, சமுத்திர க்ஷத்திரம், அருவிக்கரை, குருமுகம், குருபாதுகா ஸ்தலம், குரு ஆலயம் இந்த இடங்களில் எல்லாம் சுபமான பரிகாரங்கள் செய்து நற்பலன்களை நிரம்ப அடையலாம். ஒரு சிலர் பரிகாரங்களை உருத்திர பூமியிலும் செய்வதுண்டு.

பலன் தரும் பரிகாரங்கள்:

துவரை தானம்:

உடைக்காத முழுத்துவரையை சிகப்புத்துணியில் பொதி கட்டிக் கொள்ள வேண்டும், வெற்றிலைப் பாக்கு, மஞ்சள், பழம் இவைகளுடன் சிவந்த கண்களையுடைய(சரக்கு அடித்தால் அல்ல) வேதியரிடம் தானம் கொடுக்க வேண்டும்.

வாழைப்பூத் தானம்:

முழு வாழைப்பூ, அதே மரத்தில் காய்த்த பழம், அதே மரத்தில் கிழக்கு நோக்கிய நுனி இலை இவைகளை எடுத்துக் கொண்டு இந்த நுனி இலையில் இவைகளை வைத்துத் தானம் வாங்குபவனை நடு வீட்டில் அமரச் செய்து வெற்றிலைப் பாக்கு, மஞ்சள் துணி இவைகளுடன் தானம் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களும் திருமணத் தடங்கலைத் தீர்த்து வைக்கும் தானங்கள்.

பரிகார காலம்:

செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் செய்வது சிறப்பு. பொதுவாகச் செவ்வாய்க் கிழமையிலும் செய்யலாம். ஜென்ம நட்சத்திரத்தன்று பரிகாரம் செய்வது ஒத்துக் கொள்ளப்பட்டது. இதில் பல உட்பிரிவுகளும், விதிவிலக்குகளும் உள்ளன.

இனி மேல்விவரங்கள் கொடுத்து அலுப்படையச் செய்ய விரும்பவில்லை. செவ்வாய் தோஷம் நீங்க கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று மனமுருக வேண்டிக்கொள்ளுங்கள்.

பரிகாரம் செய்யவேண்டுமெனப் அதிகப்பணம் செலவு செய்யாதீர்கள். அன்னதானம் செய்யுங்கள். உடை தானம் செய்யுங்கள். துவரை, வாழைப்பூ தானம் செய்யுங்கள்.

சுப்ரமணியசுவாமி சென்னிமலை ஈரோடு
சங்கமேஸ்வரர் பவானி ஈரோடு
அமிர்தகடேஸ்வரர் மேலக்கடம்பூர் கடலூர்
வீரபத்திரர் அனுமந்தபுரம் காஞ்சிபுரம்

கந்தசுவாமி

திருப்போரூர்

காஞ்சிபுரம்

மலையாள தேவி துர்காபகவதி அம்மன்

நவகரை

கோயம்புத்தூர்

கல்யாண கந்தசுவாமி

மடிப்பாக்கம்

சென்னை

அகஸ்தீஸ்வரர் வில்லிவாக்கம் சென்னை
தேனுபுரீஸ்வரர் திருப்பட்டீசுவரம் தஞ்சாவூர்
அருணஜடேசுவரர் திருப்பனந்தாள் தஞ்சாவூர்
கைலாசநாதர் கோடகநல்லூர் திருநெல்வேலி
அகோர வீரபத்திரர் வீராவாடி திருவாரூர்
வைத்தமாநிதி பெருமாள் திருக்கோளூர் தூத்துக்குடி

விருப்பாச்சி ஆறுமுக நயினார்

தீர்த்த தொட்டி

தேனி

வைத்தியநாதர் வைத்தீசுவரன்

கோயில்

நாகப்பட்டினம்
விருத்தபுரீஸ்வரர் திருப்புனவாசல் புதுக்கோட்டை

நாகம்மாள்

கெங்கமுத்தூர், பாலமேடு

மதுரை

திருவாப்புடையார் செல்லூர், மதுரை மதுரை
பிரளயநாதசுவாமி சோழவந்தான் மதுரை
சுப்பிரமணியர், காங்கேயன் காங்கேயநல்லூர் வேலூர்

செல்வவளம் பெருக

செல்வவளம் பெருக

பசி மற்றும் பிணி, பகை ஆகியன நீங்கி வாழ்வதே வளமான வாழ்க்கை. இத்துடன் செல்வமும் சேர்ந்துவிட்டால் கேட்கவும் வேண்டுமோ? செல்வம் இருந்தால் கல்வியும் வீரமும் சேர்ந்து வரும். கிட்டாதன கிட்டும். இந்திர போகம்தான்.

என்னிடமிருப்பது கொஞ்சம் செல்வம்தான் இருக்கிறது. எப்படிப் பெருக்குவது? மந்திரத்தால் மாங்காய் விழுமா? மரமேறிப் பறித்தால்தான் கிட்டும். கையில் உள்ளதை உழைப்பால் நல்ல வழியில் பெருக்கவேண்டும். அதுவே நிலைத்து நிற்கும்.

கீழ்கண்ட ஆலயங்களுக்குச் சென்று வழிபட நல்ல எண்ணங்கள் பெருகும். பொருள் சம்பாதித்து சேமிக்கப் புது வழிகள் மனதில் உதிக்கும்.

அரசுரி அம்பே மா (அம்பாஜி) அம்மன் அம்பாஜி, பனஸ்கந்தா அகமதாபாத்
பச்சோட்டு ஆவுடையார் காங்கேயம் மடவிளாகம் ஈரோடு
பால தண்டாயுதபாணி கோபி ஈரோடு
வேலாயுத சுவாமி திண்டல்மலை ஈரோடு
காயத்ரி லிங்கேஸ்வரர் பவானி ஈரோடு
தில்லை நடராஜர் சிதம்பரம் கடலூர்
வீரட்டானேஸ்வரர் திருவதிகை கடலூர்
பாசுபதேஸ்வரர் திருவேட்களம் (சிதம்பரம் நகர்) கடலூர்
கொளஞ்சியப்பர் மணவாளநல்லூர்விருத்தாசலம் கடலூர்
திருவரசமூர்த்தி மெய்யாத்தூர் கடலூர்
விருத்தகிரீஸ்வரர் விருத்தாச்சலம் கடலூர்

சிவசுப்பிரமணியர்

வில்லுடையான் பட்டு

கடலூர்
பூவராக சுவாமி ஸ்ரீமுஷ்ணம் கடலூர்

குமார சுவாமி

குமார கோயில்

கன்னியாகுமரி

திருவாழ்மார்பன் திருப்பதிசாரம் கன்னியாகுமரி
யோகீஸ்வரர் புத்தேரி நாகர் கோயில் கன்னியாகுமரி
ஓணகாந்தேஸ்வரர் ஓணகாந்தன்தளி காஞ்சிபுரம்
வரதராஜப் பெருமாள் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
கைலாசநாதர் கோவளம் காஞ்சிபுரம்

திரிசக்தி அம்மன்

தாழம்பூர்

காஞ்சிபுரம்

கள்வப்பெருமாள் திருக்கள்வனூர் காஞ்சிபுரம்
பவளவண்ணபெருமாள் திருபவளவண்ணம் காஞ்சிபுரம்
சித்ரகுப்தர் காஞ்சிபுரம் காஞ்சிபுரம்
சந்திரசூடேசுவரர் ஓசூர் கிருஷ்ணகிரி
வரதராஜப்பெருமாள் சூளகிரி கிருஷ்ணகிரி
இராஜராஜேஸ்வரர் தளிப்பரம்பா கேரளா

அரங்கநாதர்

காரமடை

கோயம்புத்தூர்

சுவாமி நாதர்

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

இலட்சுமி நரசிம்மர்

தாளக்கரை

கோயம்புத்தூர்
விநாயகர் ஈச்சனாரி கோயம்புத்தூர்
பிரசன்ன விநாயகர் உடுமலைப்பேட்டை கோயம்புத்தூர்
சங்கமேஸ்வரர் கோட்டைமேடு கோயம்புத்தூர்
அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்

சாரதாம்பாள்

சிருங்கேரி

சிக்மகளூர்

வரசித்தி விநாயகர் காணிப்பாக்கம் சித்தூர்
திருப்பதி வெங்கடாசலபதி மேல்திருப்பதி சித்தூர்
தான்தோன்றீஸ்வரர் இலுப்பைக்குடி சிவகங்கை
சவுமியநாராயணப்

பெருமாள்

திருகோஷ்டியூர் சிவகங்கை
தேசிகநாதசுவாமி நகர சூரக்குடி சிவகங்கை
தட்சிணாமூர்த்தி பட்டமங்கலம் சிவகங்கை
சொர்ணகாளீஸ்வரர் காளையார் கோவில் சிவகங்கை
வீர அழகர் மானாமதுரை சிவகங்கை
ஐயப்பன் இராஜா அண்ணாமலைபுரம் சென்னை
கந்தசுவாமி கந்தகோட்டம் சென்னை

சுவாமிநாதர்

கந்தாஸ்ரமம்

சென்னை

பாலசுப்பிரமணியர் குமரன்குன்றம், குரோம்பேட்டை

சென்னை

பார்த்தசாரதி திருவல்லிக்கேணி சென்னை

அட்டலட்சுமி

பெசன்ட் நகர்சென்னை

சென்னை

ஆதிகேசவப்பெருமாள் (பேயாழ்வார்) மயிலாப்பூர் சென்னை
வடபழநி ஆண்டவர் வடபழநி சென்னை
வைகுண்ட

வாசப்பெருமாள்

கோயம்பேடு சென்னை

லட்சுமி குபேரர்

வண்டலூர், இரத்தினமங்கலம்

சென்னை

வீர ஆஞ்சநேயர்

ஆத்தூர்

சேலம்

பால சுப்பிரமணியர்

சீலநாயக்கன்பட்டி

சேலம்

ராஜகணபதி சேலம் சேலம்
ஆட்கொண்டீஸ்வரர் பெத்தநாயக்கன் பாளையம் சேலம்
அஷ்டபுஜ பால மதன வேணு கோபாலர் பேளூர் சேலம்

பாலசுப்பிரமணியர்

வடசென்னிமலை

சேலம்
விருத்தாச்சலேஸ்வரர் வெங்கனூர் சேலம்
ஆண்டளக்கும் ஐயன் ஆதனூர் தஞ்சாவூர்
சக்கரவாகேஸ்வரர் சக்கரப்பள்ளி தஞ்சாவூர்
குபேரபுரீஸ்வரர் தஞ்சாவூர் தஞ்சாவூர்
பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கண்டியூர் தஞ்சாவூர்
சுந்தரேஸ்வரர் நெய்க் குப்பை தஞ்சாவூர்
பரசுநாதசுவாமி முழையூர் தஞ்சாவூர்
மல்லிகார்ஜூனேசுவரர் தகட்டூர் தர்மபுரி
தீர்த்தகிரீசுவரர் தீர்த்தமலை தர்மபுரி
பேட்டைராய சுவாமி தேன்கனிக்கோட்டை தர்மபுரி
பாலமுருகன் தாண்டிக்குடி திண்டுக்கல்

இடும்பன்

பழநி

திண்டுக்கல்
தண்டாயுதபாணி பழனி திண்டுக்கல்
உஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான் மலை திருச்சி
ஜம்புகேஸ்வரர் திருவானைக்கா(வல்) திருச்சி
அரங்கநாதப் பெருமாள் ஸ்ரீரங்கம் திருச்சி
நந்தீஸ்வரர் திருச்சி திருச்சி
கஜேந்திரவரதர் சுவாமி அத்தாளநல்லூர் திருநெல்வேலி
இலஞ்சி குமாரர் இலஞ்சி திருநெல்வேலி

ஆதிவராகப்பெருமாள்

கல்லிடைக்குறிச்சி

திருநெல்வேலி

தென்னழகர் கோவில்குளம், பிரம்மதேசம் திருநெல்வேலி
அம்மநாதர் சேரன்மகாதேவி திருநெல்வேலி
வெங்கடாசலபதி திம்மராஜபுரம் திருநெல்வேலி
நாறும்பூநாத சுவாமி திருப்புடைமருதூர் திருநெல்வேலி
காசி விஸ்வநாதர் தென்காசி திருநெல்வேலி

முத்துக்குமாரசுவாமி

பண்பொழி

திருநெல்வேலி
கைலாசநாத சுவாமி பிரம்மதேசம் திருநெல்வேலி
வெங்கடாசலபதி (தென்திருப்பதி) மேலத்திருவேங்கட

நாதபுரம்

திருநெல்வேலி
சிந்தாமணிநாதர் (அர்த்தநாரீஸ்வரர்) வாசுதேவநல்லூர் திருநெல்வேலி
கைலாசநாதர் ஸ்ரீவைகுண்டம் திருநெல்வேலி
புருஷோத்தமப்பெருமாள் அம்பாசமுத்திரம் திருநெல்வேலி
சொரிமுத்து அய்யனார் காரையார் திருநெல்வேலி

வெங்கடாஜலபதி

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலி

வரதராஜப்பெருமாள் சங்காணி திருநெல்வேலி
சுப்பிரமணியசுவாமி திருத்தணி திருவள்ளூர்
சுவாமிநாத பாலமுருகன் மேட்டுக்குப்பம், வானகரம் திருவள்ளூர்
ஜெகந்நாதப்பெருமாள் திருமழிசை திருவள்ளூர்
விண்ணவராய பெருமாள் பழைய அம்பத்தூர் திருவள்ளூர்
பொன்வைத்தநாதர் சித்தாய்மூர் திருவாரூர்
சூஷ்மபுரீஸ்வரர் திருச்சிறுகுடி, செருகுடி திருவாரூர்
இரத்தினபுரீஸ்வரர் திருநாட்டியத்தான்குடி திருவாரூர்
யக்ஞேயஸ்வரர் திருவாரூர் திருவாரூர்
தேவபுரீஸ்வரர் தேவூர் திருவாரூர்
மதுவனேஸ்வரர் நன்னிலம் திருவாரூர்
இராஜகோபாலசுவாமி மன்னார்குடி திருவாரூர்
நரசிம்ம சாஸ்தா அங்கமங்கலம் தூத்துக்குடி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆண்டிபட்டி தேனி
முத்துக்கருப்பண்ணசுவாமி உத்தமபாளையம் தேனி
திருமலைராயப்பெருமாள் கோம்பை தேனி

சுருளிவேலப்பர்

சுருளிமலை

தேனி

விருப்பாச்சி ஆறுமுக நயினார்

தீர்த்த தொட்டி

தேனி

மாவூற்று வேலப்பர் தெப்பம்பட்டி தேனி
இராஜேந்திர சோழீஸ்வரர் (பாலசுப்ரமணியர்) பெரியகுளம் தேனி
வரதராஜப்பெருமாள் பெரியகுளம் தேனி
பரமசிவன் (மலைக்கோயில்) போடிநாயக்கனூர் தேனி
கம்பராயப்பெருமாள், காசிவிஸ்வநாதர் கம்பம் தேனி
கூடல் அழகிய பெருமாள் கூடலூர் தேனி
இலட்சுமி நாராயணப்பெருமாள் சின்னமனூர் தேனி

காளியம்மன்

காளியூர்

நாகப்பட்டினம்

நாகநாதசுவாமி கீழ்ப்பெரும்பள்ளம் நாகப்பட்டினம்
அயவந்தீஸ்வரர் சீயாத்தமங்கை நாகப்பட்டினம்
பேரருளாளன் செம்பொன்செய் கோயில் நாகப்பட்டினம்
வேதராஜன் திருநகரி நாகப்பட்டினம்
மாதங்கீஸ்வரர் திருநாங்கூர் நாகப்பட்டினம்
அழகியசிங்கர் திருவாலி நாகப்பட்டினம்
வைகுண்டநாதர் வைகுண்ட விண்ணகரம் நாகப்பட்டினம்
நரசிம்மர் திருக்குறையலூர் நாகப்பட்டினம்
பத்ரிநாராயணர் திருமணிமாடக் கோயில் நாகப்பட்டினம்
கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் மோகனூர் நாமக்கல்

பாலசுப்பிரமணியர்

மோகனூர்

நாமக்கல்

தந்தி மாரியம்மன்

குன்னூர்

நீலகிரி

கோகர்ணேஸ்வரர் (பிரகதாம்பாள்) திருக்கோவ()ர்ணம் புதுக்கோட்டை
சொக்கலிங்கேஸ்வரர் (மீனாட்சியம்மன்) வேந்தன்பட்டி புதுக்கோட்டை
சகஸ்ரலட்சுமீஸ்வரர் தீயத்தூர் புதுக்கோட்டை

காரைக்காலம்மையார்

காரைக்கால்

புதுச்சேரி

மணக்குள விநாயகர் புதுச்சேரி புதுச்சேரி
மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் மதுரை
கல்யாண சுந்தரேஸ்வரர் அவனியாபுரம் மதுரை
மீனாட்சி சொக்கநாதர் கோச்சடை மதுரை
ஆதிசொக்கநாதர் சிம்மக்கல், மதுரை மதுரை
திருவாப்புடையார் செல்லூர், மதுரை மதுரை
ஜெனகை நாராயணப் பெருமாள் சோழவந்தான் மதுரை
கைலாசநாதர் திடியன் மலை (உசிலம்பட்டி) மதுரை

முத்துநாயகி அம்மன்

பரவை

மதுரை

சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) மதுரை மதுரை
பட்டாபிராமர் விளாச்சேரி மதுரை

மும்பாதேவி

மும்பை

மும்பை

கனகதுர்கா

கனகபுரி

விஜயவாடா

கருநெல்லிநாதர் (சொக்கப்பன்)

திருத்தங்கல்

விருதுநகர்

வடபத்ரசாயி(ஆண்டாள்) ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர்
சிங்கவரம் பெருமாள் சிங்கவரம் விழுப்புரம்

லலிதசெல்வாம்பிகை (செல்லப்பிராட்டி)

செஞ்சி

விழுப்புரம்

சொர்ணகடேஸ்வரர் நெய்வணை விழுப்புரம்

லட்சுமி நாராயணி

திருமலைக்கோடி (ஸ்ரீபுரம்)

வேலூர்

சுப்ரமணியர்

வள்ளிமலை

வேலூர்

மார்க்கபந்தீசுவரர் விரிஞ்சிபுரம் வேலூர்