Monthly Archives: February 2012
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், முனியாண்டிபுரம், விளாச்சேரி
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், முனியாண்டிபுரம், விளாச்சேரி, மதுரை மாவட்டம்.
+91- 452 237 1870 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 5.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஐயப்பன் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | விளாச்சேரி | |
மாவட்டம் | – | மதுரை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சாகா மருந்தான அமிர்தம் வேண்டி, பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்தார்கள். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால், உலகில் அநியாயம் நிரந்தரமாகி விடும் என்பதை உணர்ந்த திருமால், நல்லவர்களைக் காப்பாற்ற மோகினி வடிவம் எடுத்தார். இந்த மோகினி வடிவத்துடன் இவ்வுலக நன்மை கருதி சிவபெருமான் இணைந்தார். அப்போது, சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார். அவரது மானிட அவதாரமான ஐயப்பன் பூவுலகில் அவதாரம் செய்தார். இந்த அவதாரமும் பங்குனி உத்திர நட்சத்திரம் சனிக்கிழமையில்தான் நிகழ்ந்தது.
தேவலோகத்தில் இருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட குழந்தை ஒரு காட்டில் கிடந்தது. குழந்தையின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. பந்தளமன்னர் ராஜசேகரன் அக்குழந்தையை எடுத்து, “மணிகண்டன்” எனப் பெயரிட்டு சொந்த மகனைப்போல் வளர்த்து வந்தார். இதன் பிறகு ராஜசேகர மன்னரின் பட்டத்தரசி “ராஜராஜன்” என்ற மகனைப் பெற்றாள். தனக்கென மகன் இருந்தாலும் முதல் மகனான மணிகண்டனுக்கு பட்டம் சூட்ட மன்னர் நினைத்தார். இதை வஞ்சகம் நிறைந்த அமைச்சர் ஒருவர் விரும்பவில்லை. மகாராணியின் மனதை மாற்றி ராஜராஜனுக்கு முடி சூட்டும்படி கூறினார். மருத்துவர் மூலம் புலிப்பாலால்தான் தன் தலைவலி போகும் என கூறச் செய்தாள். காட்டிற்குச் சென்ற அவர் தர்ம சாஸ்தா என்பதை உணர்ந்து கொண்ட முனிவர்கள், பொன்னம்பலத்திற்கு அழைத்து சென்று, இரத்தின சிம்மாசனம் அமைத்து பூஜித்தனர். இந்த இடம் தான் தற்போது ஐயப்பன் ஜோதியாகக் காட்சி தரும் பொன்னம்பல மேடாக விளங்குகிறது. பின்பு புலிகளுடன் நாடு திரும்பிய ஐயப்பனிடம், எதிரிகள் மன்னிப்பு கேட்டனர்.
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சித்தாபுதூர்
அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சித்தாபுதூர், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் மாவட்டம்.
காலை 5 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மணிகண்டன் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சித்தாபுதூர் | |
மாவட்டம் | – | கோயம்புத்தூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
சுமார் 60 வருடங்களுக்கு முன்பு, பக்தர்கள் சிலர் ஐயப்ப சுவாமியின் சிறிய படமொன்றை வைத்து பூஜித்து வந்தனர். 1968ம் வருடம் ஐயப்பன், விநாயகர், பகவதியம்மன், முருகப்பெருமான், சிவபெருமான் ஆகியோருக்கு விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபடத் துவங்கினர். 1969ம் வருடம், பிரம்மஸ்ரீ பாலக்காட்டில்லத்து பெரிய நீலகண்டன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. கேரள பாரம்பரிய முறையில் இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் 19 வருடங்களாக மேல்சாந்தியாக இருந்த எழிக்கோடு சசிநம்பூதிரி தான் தற்போது சபரிமலை மேல்சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார் என்பது இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் செய்தி. தூய்மையுடனும், பொலிவுடனும் அமைந்துள்ளது ஆலயம், நைவேத்தியப் பிரசாதங்கள் தயாரிப்பதற்கு மடப்பள்ளி, நடைப்பந்தல், சுத்தமான தேக்கு மரத்தாலான சுற்றம்பலம், நமஸ்கார மண்டபம் ஆகியவை கேரள தச்சு வேலைப்பாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
ஐயப்ப சுவாமியின் சுற்றம்பலத்தில் சுற்று விளக்குகள் வைக்கப்பட்டுள்ளன. மாலை வேளையில், பிரகாசமாக ஒளிவீசும் விளக்குகளைக் காணக் கண்கோடி வேண்டும். தங்க கொடிமரம், தினமும் சுமார் 500 பக்தர்களுக்கு அன்னதானம் (கார்த்திகை துவங்கி விரத காலங்களில் தினமும் சுமார் 2,500 பேருக்கு அன்னதானம் நடைபெறுமாம்) சுதந்திரத் திருநாளில் சமபந்தி போஜனம் என அமர்க்களப்படுகிறது.