Monthly Archives: February 2012
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம்
அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், கருங்கல்பாளையம், ஈரோடு மாவட்டம்.
+91-424 – 221 28 16 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
கோதண்டராமர் |
தாயார் |
– |
|
சீதா பிராட்டி |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
கருங்கல்பாளையம் |
மாவட்டம் |
– |
|
ஈரோடு |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
திருமணம், சமூக மற்றும் மத வழிபாடு கூட்டங்கள் நடத்த ஏதுவாக 1974ம் ஆண்டில் ஈரோடு ரங்கபவனம் டிரஸ்ட் சார்பில் சமுதாயக் கூடம் ஒன்று நிறுவப்பட்டது. இங்கு சித்தி விநாயகர் கோயிலும், நவக்கிரகங்கள் சன்னதியும் கட்டப்பட்டன. கும்பாபிஷேகத்தை காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமி நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. மூலஸ்தானத்தில் ஸ்ரீகோதண்டராமர், சீதா பிராட்டி, இலட்சுமணர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் மகாஸம்ப்ரோஷணம் அஹோபில மடத்தின் 44ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் சுவாமியால் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தன்று கோதண்டராம சுவாமிக்கும், சித்திரை நட்சத்திரத்தில் சக்கரத்தாழ்வாருக்கும், மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயருக்கும், சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கும் கூட்டு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்து வருகின்றன.
அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர்
அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர், திண்டுக்கல் மாவட்டம்.
+91- 4551 – 261 265, 99526 46389 (மாற்றங்களுக்குட்பட்டவை)
சனிக்கிழமை மட்டும் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரையில் நடை திறந்திருக்கும். மற்ற நாட்களில் நடை திறப்பதில்லை. முன்கூட்டியே அர்ச்சகரை தொடர்பு கொண்டு விட்டு சென்றால், சுவாமியைத் தரிசிக்கலாம்.
மூலவர் |
– |
|
நரசிம்ம பெருமாள் |
தாயார் |
– |
|
ஸ்ரீதேவி, பூதேவி |
தீர்த்தம் |
– |
|
குடகனாறு |
ஆகமம் |
– |
|
பாஞ்சராத்ரம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
ஊர் |
– |
|
வேடசந்தூர் |
மாவட்டம் |
– |
|
திண்டுக்கல் |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
முற்காலத்தில் இங்கு வசித்த பெருமாள் பக்தர்கள் சிலர், நரசிம்மருக்கு கோயில் கட்டவேண்டுமென விரும்பினர். ஆனால், எங்கு கோயில் அமைப்பது என அவர்களுக்குத் தெரியவில்லை. பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய பெருமாள், குடகனாற்றின் கரையில் கோயில் எழுப்பும்படி சுட்டிக்காட்டினார். அதன்பின்பு பக்தர்கள் சுவாமி காட்சி தந்த வடிவத்திலேயே சிலை வடித்து, இங்கு கோயில் எழுப்பினர். முதலில் நரசிம்மருக்கு கோயில் அமைக்க விரும்பியதால், இந்த திருநாமத்தையே சுவாமிக்கு சூட்டினர்.
இத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளுக்கு நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் இலிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம்.