Monthly Archives: January 2012
அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி
அருள்மிகு விருப்பாச்சி ஆறுமுக நயினார் திருக்கோயில், தீர்த்தத்தொட்டி, கோடாங்கிபட்டி, தேனி மாவட்டம்.
+91- 93641 19656 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் |
– |
|
விருப்பாச்சி ஆறுமுக நயினார் |
உற்சவர் |
– |
|
சுப்பிரமணியர் |
தலவிருட்சம் |
– |
|
வில்வம் |
தீர்த்தம் |
– |
|
முருக தீர்த்தம் (தீர்த்த தொட்டி) |
ஆகமம் |
– |
|
சிவாகமம் |
பழமை |
– |
|
500 வருடங்களுக்கு முன் |
புராணப்பெயர் |
– |
|
கோடாங்கிபட்டி |
ஊர் |
– |
|
தீர்த்த தொட்டி |
மாவட்டம் |
– |
|
தேனி |
மாநிலம் |
– |
|
தமிழ்நாடு |
அசுரன் ஒருவனை அழிக்கச் சென்ற சப்தகன்னியர், தவறுதலாக ஒரு மகரிஷியை அழித்து விட்டனர். இந்த தோஷம் நீங்க, இத்தலத்தில் தீர்த்தம் உருவாக்கி முருகனை வழிபட்டனர். அவர்களுக்கு காட்சி தந்த முருகன், தோஷத்தைப் போக்கியருளினார். பிற்காலத்தில் இங்கு தீர்த்தம் மட்டும் இருந்தது.
பல்லாண்டுகளுக்கு பின்பு இப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவர் பழநிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பினார். வழியில் விருப்பாச்சி என்ற இடத்தில், கலவரம் உண்டானது. இதனால் அவரால் ஊர் திரும்பமுடியவில்லை. வீடு திரும்பும் வரையில், வழியில் தங்கக்கூடாது என நினைத்தவர், முருகனிடம் தனக்கு வழி காட்டும்படி வேண்டினார். அப்போது அங்கு பாலகன் ஒருவன் அவரிடம், ஒரு முனை மழுங்கிய வேலைக் கொடுத்து, “இதை கையில் பிடித்துக்கொண்டு செல்லுங்கள். வழி கிடைக்கும்” என்றான். அவரும் வேலை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பினார். வழியில் இங்கிருந்த தீர்த்தத்தொட்டியில் நீராடியவர், தீர்த்தக் கரையில் வேலை வைத்துவிட்டுச் சென்றார். பின்பு பக்தர்கள் இந்த வேலையே, முருகனாக பாவித்து வழிபட்டு வந்தனர். முருகன் சன்னதி எதிரில், இந்த வேல் இருக்கிறது. இதன் முனை, கூர்மையின்றி உடைந்த நிலையிலேயே தற்போதும் இருக்கிறது.
அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம்
அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம், தூத்துக்குடி மாவட்டம்.
மூலவர் : கைலாசநாதர்
அம்பிகை : சௌந்தர்யநாயகி
நவகயிலாயத்தில் ஒன்பதாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் சுக்கிர அம்சமாக விளங்குகிறார். அகத்தியர் தனது சீடர் உரோமச முனிவருக்காகத் தாமிரபரணி ஆற்றில் விட்ட ஒன்பது மலர்களில் ஒன்பதாவது மலர் சேர்ந்த இடம். இதனால் இவ்வூருக்குச் சேர்ந்த பூமங்கலம் என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது தாமிரபரணி ஆறு கடலோடு சங்கமிக்கும் இடம் என்பதால் சேர்ந்தமங்கலம் என்ற பெயர் வந்ததாகவும் ஒரு சிலர் கூறுகிறார்கள். இரண்டும் சேர்ந்து “சேர்ந்தபூமங்கலம்” ஆயிற்று.
கோயிலுக்கு கோபுரம் கிடையாது. கொடிமரம் உள்ளது. இக்கோயில் கல்வெட்டில் குடநாட்டு ஆத்தூர் சேர்ந்தமங்கலம் என்றும் அவனிய சதுர்வேதிமங்கலம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இக்கோயில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் சிலர். சேந்தன் என்று குறிப்பிடப்பட்ட பாண்டியன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள் சிலர். நவகைலாயங்களுக்கும் சென்று வழிபட்டால் நவக்கிரக தலங்களுக்கும் சென்று வழிபட்ட பலன் உண்டு.
வழிகாட்டி: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூரிலிருந்து வடக்கில் சுமார் 15 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து தெற்கே 20 கி.மீ தொலைவிலும் தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் உள்ளது.