Monthly Archives: January 2012
அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில், கொருமடுவு, கெம்பநாயக்கன்பாளையம்
அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில், கொருமடுவு, கெம்பநாயக்கன்பாளையம், சத்தியமங்கலம் வட்டம், ஈரோடு மாவட்டம்.
காலை 6 மணி முதல் 9 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பால தண்டாயுதபாணி |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
கொருமடுவு |
|
மாவட்டம் | – | ஈரோடு | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இயற்கையான சூழலில் மலைகள் சூழ்ந்த இரம்மியமான இடத்தில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது கொருமடுவு பால தண்டாயுதபாணி ஆலயம். தன்னிகரற்ற அருளுடன் முருகன் இங்கே மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். முருகனின் திருவிளையாடல் நடந்த இடம் அல்லது முருகன் சிவ வழிபாடு செய்த தலங்களில் மட்டுமே மேற்கு பார்த்த முருகன் கோயில் அமையும். அந்த வகையில் இதுவும் சிறப்பான கோயில் என்கிறார்கள். ஒவ்வொரு மனிதனும் தம் வாழ்வில் ஒரு முறையாவது தெய்வங்களின் திருமணத்தை கண்குளிர பார்க்க வேண்டும் என்ற நியதிப்படி இங்கு நடைபெறும் ஈசன் ஈஸ்வரியின் திருமணம் அனைவரும் காணவேண்டிய அற்புதமான காட்சியாகும். பொதுவாக ஈசனுக்கு இடப்பாகத்தில் ஈஸ்வரி அமர்வது ஐதீகம். ஆனால் இந்த ஆலயத்தில் ஈசனுக்கு வலது பாகத்தில், வடக்கு நோக்கி அமர்ந்து வலது காலை தொங்கவிட்டு, இடதுகாலை மடித்து அம்பாள் அமர்ந்திருப்பது மிகவும் சிறப்பு. இத்தலத்தில் ஏகபாத மூர்த்திக்கு (சிவன், விஷ்ணு, பிரம்மா) முன்பாக அக்னி குண்டம், பச்சைப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர்
அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர், நாமக்கல் மாவட்டம்.
+91-4286 – 645 753, +91- 98424 41633
(மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 7 மணி முதல் 1 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – |
பாலசுப்பிரமணியர் (பழநியாண்டவர்) |
|
உற்சவர் | – |
கல்யாண சுப்பிரமணியர் |
|
தீர்த்தம் | – |
கிணற்று தீர்த்தம் |
|
ஆகமம் | – |
சிவாகமம் |
|
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – |
மோகனூர் |
|
மாவட்டம் | – | நாமக்கல் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
நாரதர் கொடுத்த கனியை தனக்குத் தராததால் கோபம் கொண்ட முருகன், கைலாயத்திலிருந்து தென்திசை நோக்கி வந்தார். சிவனும், பார்வதியும் அவரை சமாதானம் செய்தும் கேட்கவில்லை.
அவரைப் பின்தொடர்ந்த அம்பிகை, “மகனே நில்” என்று அழைத்தார். தாயின் சொல் கேட்ட முருகன், நின்றார். அவரிடம் பார்வதி, கைலாயத்திற்குத் திரும்பும்படி அழைத்தாள். ஆனால், முருகன் கேட்கவில்லை. தான் தனித்து இருக்க விரும்பியதாகக் கூறிய அவர் பழநிக்குச் சென்று குடிகொண்டார். இவ்வாறு முருகனை அம்பாள் அழைத்தபோது, இத்தலத்தில் நின்றதாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு கோயில் எழுப்பப்பட்டது. இவர் பாலகனாக, “பால சுப்பிரமணியர்” என்ற பெயரில் அருளுகிறார்.
பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார். இக்கோயிலுக்குச் செல்ல 39 படிகள் இருக்கிறது. 27 நட்சத்திரங்கள், 12 ராசிகளே இந்த படிக்கட்டுகளாக இருப்பதாக சொல்கிறார்கள். ஜாதகத்தில் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.