Monthly Archives: December 2011
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை
அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், ஆடுதுறை, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.
+91 – 94434 63119, 94424 25809 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆபத்சகாயேஸ்வரர் | |
அம்மன் | – | பவளக்கொடியம்மை, பிரபாளவல்லி | |
தல விருட்சம் | – | மல்லிகை | |
தீர்த்தம் | – | சகாயதீர்த்தம், சூரிய தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | திருத்தென்குரங்காடுதுறை | |
ஊர் | – | ஆடுதுறை | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் |
சுக்ரீவன், இதிகாசமாகிய இராமயணத்தில் வரும் இராம பக்தன். இவன் தென் குரங்காடுதுறையை அடைந்து சிவபெருமானை வழிபட்டு வரும் நாளில், பகைமை காரணமாகச் சுக்ரீவனைத் தேடிக் கொண்டு வாலி வந்தான். மிகவும் வல்லமை படைத்த அந்த வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் ஆடுதுறை அரனை அடைக்கலம் புகுந்து நின்று தன்னைக் காப்பாற்றியருளுமாறு வேண்டிக் கொண்டான். அப்போது சிவபிரான் சுக்ரீவனை அன்னப் பறவையாகவும் அவன் தேவியைப் பாரிஜாத மரமாகவும் (பவள மல்லிகை மரம்) வேற்றுருக் கொள்ளச் செய்து காப்பாற்றியருளினான்.
சுக்ரீவனுக்கு வந்த ஆபத்தைப் போக்கியருளி அவனுக்குச் சகாயம் செய்தமையால், இறைவன் “ஆபத்சகாயேசுரர்” எனவும், துன்பத்தில் துணைவர் எனவும் வழங்கப்படுகின்றார். அம்மையின் திருநாமம் பிரபாளவல்லி என்றும் பவளக்கொடி என்றும் வழங்கப்படுகிறது.
அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர்
அருள்மிகு ஜோதி மகாலிங்க சுவாமி திருக்கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம்.
+91- 435- 2460660 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | மகாலிங்கம் | |
அம்மன் | – | பெருமுலையாள் | |
தல விருட்சம் | – | மருதமரம் | |
தீர்த்தம் | – | காருண்யமிர்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஆகமம் | – | காமிகம் | |
புராணப் பெயர் | – | மத்தியார்ச்சுனம் | |
ஊர் | – | திருவிடைமருதூர் | |
மாவட்டம் | – | தஞ்சாவூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
அகத்தியர் முனிவர்களோடு இடைமருதூர் வந்தடைந்தார். உமாதேவியை நினைத்து தவம் செய்தார். உமையும் முனிவர்க்கு காட்சி தந்தார். முனிவர்கள் முறைப்படி இறைவியை வழிபட்டு விட்டு இறைவனையும் காண வேண்டும் என்று கூற, உமையம்மை முனிவர்களுக்காக இறைவனை எண்ணி சிவதவமிருக்கிறார். இறைவன் உமையின் தவத்திற்கு இரங்கி உமைக்கும் முனிவர்களுக்கும் இவ்விடத்தில் காட்சி தந்தார். காட்சி தந்து விட்டு ஜோதி இலிங்கத்தை இறைவனே வழிபடலானார். வியப்பு கொண்டு உமையம்மை, “இறைவனே. பிரம்மன் முதலானோரே தங்களை வழிபடுவதுதான் முறை. தாங்கள் தங்களையே வழிபடுகிறீர்களே” என்று வினவ, “உமையே பூசித்தோனும் பூசையை ஏற்றுக் கொண்ட பரம்பொருளும் நாமே” என்றார். நம்மை நாமே பூசிப்பதற்கு காரணம், இம்முனிவர்கள் நம்மைப் பூசிக்க மறந்துவிட்டனர். அதனாலே பூசிக்கிறேன் என்றார். முனிவர்களும் அன்று தொடங்கி இப்பெருமானை, காமிகாவிதிப்படி பூஜை செய்து பெரும் பேறு பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது.