Monthly Archives: November 2011
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் உடனுறை வண்டார்குழலி திருக்கோயில், திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம்.
+91 – 4118 – 272 608 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 9 மணி வரை நடை திறந்து இருக்கும்.
மூலவர் | – | வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான் | |
அம்மன் | – | வண்டார்குழலி | |
தல விருட்சம் | – | பலா மரம் | |
தீர்த்தம் | – | முத்தி தீர்த்தம் | |
பழமை | – | 1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | திருவாலங்காடு | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர்கள் | – | திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் |
சும்பன், நிசும்பன் என்ற இரு அசுரர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் பாதிப்படைந்தவர்கள் சிவ பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அரக்கர்களை அழித்து விட்டு, அவளையே ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள். அரக்கர்களை அழித்து அவர்களது இரத்தத்தை உண்ட காளி, பல கோர செயல்களை புரிந்தாள். இதனால் முஞ்சிகேச கார்க்கோடக முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க சிவன் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரை கண்ட காளி, “நீ என்னுடன் நடனமாடி வெற்றிபெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்” என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.
அப்போது தன் காதில் இருந்த மணியை கீழே விழவைத்து, பின் அதை தன் இடக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இதைக்கண்ட காளி, இது போன்ற தாண்டவம் தன்னால் ஆட இயலாது எனத் தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். அப்போது காளியின் முன் இறைவன் தோன்றி,”என்னையன்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் கிடையாது. எனவே இத்தலத்தில் என்னை வழிபாடு செய்ய வருபவர்கள், முதலில் உன்னை வழிபாடு செய்த பின், என்னை வழிபட்டால் தான் முழுப் பலன் கிடைக்கும்” என்று வரமளித்தார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறாள்.
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம்
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம், பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்.
+91- 44 – 2752 3019, 98423 – 09534 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | திரிபுராந்தகர் | |
உற்சவர் | – | சோமாஸ்கந்தர் | |
அம்மன் | – | திரிபுராந்தக நாயகி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
தீர்த்தம் | – | அக்னி தீர்த்தம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
புராணப் பெயர் | – | கூவரம், திருவிற்கோலம் | |
ஊர் | – | கூவம் | |
மாவட்டம் | – | திருவள்ளூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு | |
பாடியவர் | – | திருஞான சம்பந்தர் |
பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய திரிபுர(மூன்று) அசுரர்கள் சேர்ந்து தேவர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தினர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து, தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். தேவர்களை காப்பதற்காக சிவன் அசுரர்களை அழிக்க ஒரு வில்லை ஏந்திக்கொண்டு தேரில் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதிலாவது நினைத்துவிட்டோதான் செல்ல வேண்டும் என்பது நியதி. இது சிவனுக்கும் பொருந்தும்.
ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களோ “சிவனே நம்முடன் இருக்கும்போது வேறென்ன வேண்டும்” என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர். கோபம் கொண்ட விநாயகர், அச்சிறுப்பாக்கம் தலத்தில் தேர்ச்சக்கரத்தின் அச்சை முறித்து விட்டார். அப்போது தேரின் கூரம் (ஏர்க்கால்) இத்தலத்தில் முறிந்து நின்றது. இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து செல்லும் செயல் சிறப்பாய் நடந்திட காவலனாய் இருக்கும்படி வேண்டினார். பின், விநாயகர் தேர் அச்சை சரிசெய்ய, சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். கூரம் (ஏர்க்கால்) பூமியில் பதிந்த இடத்தில் சிவன் சுயும்புவாக எழுந்தருளினார். கூரம் முறிந்து நின்ற இடமென்பதால் இத்தலம் “கூரம்” என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் “கூவம்” என்று மருவியது.