Monthly Archives: October 2011
ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர்
அருள்மிகு ஆட்கொண்டநாதர் திருக்கோயில், இரணியூர், சிவகங்கை மாவட்டம்.
+91- 4577 – 265 645, 98424 80309
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆட்கொண்டநாதர் | |
அம்மன் | – | சிவபுரந்தேவி | |
தல விருட்சம் | – | வில்வம் | |
ஆகமம் | – | சிவாகமம் | |
பழமை | – | 500 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | இரணியூர் | |
மாவட்டம் | – | சிவகங்கை | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனான இரண்யனை சம்காரம் செய்தார். இதனால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது. தோஷம் நீங்க சிவனை வழிபட்டார். சிவன், அவருக்கு காட்சி தந்து தோஷம் நீக்கினார்.
திருமாலின் வேண்டுதலுக்காக சிவன், இத்தலத்தில் “ஆட்கொண்டநாதர்” என்ற பெயரில் எழுந்தருளினார். நரசிம்மருக்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவருக்கு, “நரசிம்மேஸ்வரர்” என்றும் பெயருண்டு.
ஆத்மநாதசுவாமி திருக்கோயில், திருப்பெருந்துறை, சிதம்பரம்
அருள்மிகு ஆத்மநாதசுவாமி திருக்கோயில், திருப்பெருந்துறை, சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
+91 94431 12098
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | ஆத்மநாதசுவாமி | |
அம்மன் | – | யோகாம்பாள் | |
தீர்த்தம் | – | பாற்கடல் தீர்த்தம் | |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் | |
ஊர் | – | சிதம்பரம் | |
மாவட்டம் | – | கடலூர் | |
மாநிலம் | – | தமிழ்நாடு |
மதுரையில் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர், திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில் (புதுக்கோட்டை மாவட்டம்) சிவனிடம் உபதேசம் பெற்றார். இவருக்காக சிவபெருமான் மதுரையில் நரிகளை பரிகளாக்கியும், வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தினார். இவர் ஒருமுறை சிதம்பரம் வந்தார். முனிவர்கள் தங்கியிருந்த ஒரு பர்ணசாலையில் தங்கினார். ஆனாலும், திருப்பெருந்துறை ஆத்மநாதரை அவரால் மறக்க முடியவில்லை. எனவே, இங்கும் ஆத்மநாதருக்கு அளவில் சிறிய கோயில் கட்டினார். சுவாமிக்கு ஆத்மநாதர் என்றும், அம்பிகைக்கு யோகாம்பாள் என்றும் பெயர் சூட்டினார். இத்தலம்“தில்லை திருப்பெருந்துறை” என்றழைக்கப்பட்டது.