Monthly Archives: June 2011
கணபதி ஆலயங்கள் – அட்டவணை
கணபதி ஆலயங்கள்
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி
அருள்மிகு விநாயகர் திருக்கோயில், பிள்ளையார்பட்டி – 630207, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்.
+91-4577 – 264240 / 264241 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
தல விருட்சம்: – மருதமரம்
பழமை: – 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: – பிள்ளையார்பட்டி
மாநிலம்: – தமிழ்நாடு
பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.
இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில். இக்கோயிலில் நான்கு முறையாகத் திருப்பணி நடந்திருப்பதாகத் தெரிகின்றது.