Monthly Archives: June 2011
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101. காஞ்சிபுரம் மாவட்டம்.
***********************************************************************************************
+91- 44 – 2627 2053, 2649 5883 (மாற்றங்களுக்குட்பட்டவை)
காலை 6 மணி – 1.30 மணி, மாலை 3 – இரவு 9.30 மணி வரையிலும் திறந்திருக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பகலில் நடை அடைக்கப்படுவதில்லை.
தல விருட்சம்: – மாமரம்
பழமை: – 2000-3000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்: – சூதவனம்
ஊர்: – மாங்காடு
மாநிலம்: – தமிழ்நாடு
கைலாயத்தில் ஒருசமயம் பார்வதிதேவி, விளையாட்டாகச் சிவனின் கண்களை மூட, உலக இயக்கமே நின்றது. தவறை உணர்ந்த அம்பிகை மன்னிப்பு கோரினாள். சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார்.
இத்தலத்தில் தவமிருந்து வழிபட்டால், தகுந்த காலத்தில் காட்சி தந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாக சிவன் கூறினார். அதன்படி இங்கு வந்த அம்பாள் பஞ்சாக்னியை (ஐந்து அக்னிகள்) வளர்த்து, அதன் மத்தியில் இடது கால் கட்டைவிரலை ஊன்றி நின்று கடுந்தவமிருந்தாள்.
காஞ்சிக்குச் சென்று தவமிருக்கும்படி சிவனின் அருள்வாக்கு கிடைக்கவே அங்கு சென்றாள். இருப்பினும், அம்பிகை முதன் முதலாக தவம் செய்த இடம் என்பதால் மாங்காடு,”ஆதி காமாட்சி தலம்” எனப்படுகிறது.
அம்பாள் அந்தஸ்தில் ஸ்ரீசக்ரம்:
பொதுவாகக் கருவறையில் அம்பிகைதான் பிரதான தெய்வமாக(மூலவர்) வணங்கப்படுவாள். ஆனால், இக்கோயிலில் அர்த்தமேரு ஸ்ரீசக்ரமே அம்பாளாகக் கருதி வணங்கப்படுகிறது. ஸ்ரீசக்ரத்திற்கு பின்புறம் அம்பாளின் உற்சவர் சிலை இருக்கிறது. இவளுக்கே அபிசேக, அலங்காரங்கள் செய்யப்படுகிறது.
அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை
அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மதுரை-625 001.
******************************************************************************************
+91 98651 51099 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6.30 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர்: – காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர்
தல விருட்சம்: – மாமரம்
பழமை: – 500 வருடங்களுக்கு முன்
ஊர்: – மதுரை
மாநிலம்: – தமிழ்நாடு
முற்காலத்தில் மதுரை மீனாட்சி கோயிலுக்குத் தெற்கே மாந்தோப்பு இருந்தது. அந்த தோப்பில் வனகாளி இருந்து வந்தாள். இந்த காளியை விசுவகர்ம குல மக்கள் வழிபட்டு வந்தனர்.
ஒரு முறை இந்த கோயில் பூசாரி இரவு பூசைக்குப் பின், மறதியாக தன் மகனை இந்தக் கோயிலுக்குள் வைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். வீட்டிற்கு வந்தவுடன் பூசாரியின் மனைவி, மறந்து விட்டு வந்த தன் மகனை மீண்டும் அழைத்து வர வேண்டும் என்று கூற, பூசாரியும் மகனை அழைக்க பூட்டிய கதவை திறந்தார். அங்கு காளியின் உக்கிரம் தாங்க முடியாத பூசாரி அதே இடத்தில் இறந்தார்.
பின் காளிக்கு பெரிய அளவில் கோயில் கட்ட நினைத்து, அங்குள்ள மாமரத்தின் அடியில் தோண்டினார்கள். அப்போது சுயம்புவாக ஈசன் தோன்றினார். “ஆம்ர” என்றால் வடமொழியில் “மாமரம்” என்று பொருள். மாமரத்தின் அடியில் பாணலிங்கம் தோன்றியதால் இங்குள்ள ஈசன் ஏகாம்பரேசுவரர் ஆனார். எனவே காளிக்காக கட்ட நினைத்த சன்னதி, சிவ ஆகம விதிப்படி காமாட்சி உடனுறை ஏகாம்பரேசுவரர் சன்னதியாக மாறியது.
இந்த உலகின் ஆதி நாயகி பராசக்தி. இந்த பூமியில், பராசக்தியான நான் தனியாக இருந்து எப்படி ஆளப்போகிறேன் என்று நினைத்து முதலில் பிரம்மனை படைக்கிறார். பிரம்மனும் பராசக்தியை வணங்குகிறார். பின் திருமாலைப் படைக்கிறார். திருமாலும் பராசக்தியை வணங்குகிறார். அதன் பின்னரே சிவனைப் படைக்கிறார்.