Monthly Archives: June 2011

அருள்மிகு ராஜமாதங்கி கோயில், மன்னார் பாளையம்

அருள்மிகு ராஜமாதங்கி கோயில், மன்னார் பாளையம், சேலம்
**********************************************************************

மதங்க முனிவரின் தவத்தின் மகிமையால் அவருக்கு மகளாக மாதங்கியாக அம்பாள் அவதரித்தாள்.


கையில் வீணையுடன், இருபுறமும் சிவந்த அலகுகளுடன பச்சைக்கிளிகள் சிம்மாசனமாய்
கருவறையின் முன்புறம் கிளியாசனம் அமைத்திருக்க, மயில் போல் எழிலாய் அமர்ந்து
அருளாட்சி செய்கிறாள் அம்மன் ராஜமாதங்கி. அன்னை பராசக்தியின் மந்திரியாக இருக்கும் அவள் அறிவு வடிவமல்லவா?

அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி

அருள்மிகு ராஜகாளியம்மன் கோயில், தெத்துப்பட்டி – 624 705, திண்டுக்கல் மாவட்டம்.

*************************************************************************************************

காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி 8.30 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

மூலவர் ராஜகாளியம்மன்
பழமை 500 வருடங்களுக்கு முன்பு
ஊர் தெத்துப்பட்டி
மாவட்டம் திண்டுக்கல்
மாநிலம் தமிழ்நாடு

அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன.

பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூசை செய்தார். அப்பொழுது, தன் தவ சக்தியால், ஒரு கல்லின் மீது கமண்டல நீரைத் தெளித்து, கல்லுக்கு உயிர் கொடுத்து, கன்னிவாடி என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூசை செய்யத் துவங்கியுள்ளார்.

பூசையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேசுவரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளித்ததுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார்.