Monthly Archives: June 2011
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர்
அருள்மிகு பிடாரி செல்லாண்டியம்மன் திருக்கோயில், ஒருவந்தூர் -637 015, நாமக்கல் மாவட்டம்.
*************************************************************************************************************
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பிடாரி செல்லாண்டியம்மன் |
பழமை | – | 500-1000 வருடங்களுக்கு முன் |
ஊர் | – | ஒருவந்தூர் |
மாவட்டம் | – | நாமக்கல் |
மாநிலம் | – | தமிழ்நாடு |
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்த ஊரின் சுற்றுப்பகுதி உப்பு மண் நிலமாக இருந்தது. ஒருமுறை ஊர் மக்கள் அங்கிருந்த உப்பு மண்ணை வெட்டி எடுத்து கொண்டிருந்தார்கள். ஒருவரது மண்வெட்டி ஒரு பொருளின் மீது சத்தத்துடன் மோதி நின்றது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது. பயத்துடன் தோண்டி பார்த்த போது அங்கே அழகு மிளிர அருட்சுடராக ஒரு அற்புத அம்மன் விக்ரகம் வெளிப்பட்டது.
தவம், யாகம் என முயற்சி செய்து இறைவனைத் தேடி அடியார்கள் செல்வதுண்டு. ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் தங்களைத் தேடி வந்த அம்மனை கண்டு மெய் சிலிர்த்து நின்றனர் மக்கள். அவளுக்கு பச்சை பந்தல் போட்டு பூசை செய்தனர். இவ்விடத்திலேயே “பிடாரி செல்லாண்டி” என்ற திருநாமம் கொண்டு நிரந்தரமாக தங்கி விட்டாள் அம்பிகை.
காலப்போக்கில் அம்பிகையின் அருளாலும், பக்தர்களின் முயற்சியாலும் இப்போதுள்ள கோயில் உருவானது.
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் திருக்கோயில், பிரப் ரோடு – 638001, ஈரோடு மாவட்டம்.
************************************************************************************************
+91-424-2258670 (மாற்றங்களுக்குட்பட்டது)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் | – | பெரிய மாரியம்மன் |
தல விருட்சம் | – | வேப்பமரம் |
பழமை | – | 1000-2000 வருடங்களுக்கு முன்பு |
ஊர் | – | பிரப் ரோடு |
மாவட்டம் | – | ஈரோடு |
மாநிலம் | – | தமிழ்நாடு |
இக்கோயில் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு ஆட்சி செய்த கொங்கு சோழர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாறு கூறுகிறது.
கோயிலின் முற்பகுதியில் சிங்க வாகனமும், தூரியும் அழகுற விளங்குகிறது. வேப்பமரத்தை தல விருட்சமாக கொண்டது இக்கோயில். இங்கு பரசுராமர் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தினமும் 3 கால பூசை நடக்கிறது.
பூச்சாட்டுதல் தொடங்கி கம்பத்தை எடுத்து வாய்க்காலில் விடுவது வரை பெரிய மாரியம்மன் கோயில், சின்னமாரியம்மன் கோயில், வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் விழா இணைந்தே நடந்து வருகிறது.
பெரிய மாரியம்மன் திருவிழா என்பது ஈரோடு நகரத்தின் மிகப் பெரிய திருவிழாவாகும். சாதி, மதம், இன வேறுபாடின்றி ஈரோட்டில் வாழ்கிற அனைத்து மக்களும் பங்கு கொள்கின்ற விழாவாகும்.